செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 02

Rate this item
(0 votes)

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :02

 

வாகனக் கூட்டம் சம்பந்தமாக வரும் அறிவிப்புகளின் நிலை

வாகனக்கூட்டம் ஹதீஸ் என்று அறியப்பட்ட இச்செய்தி அபூதாவூதில் 1159-வது அறிவிப்பாகவும், அஹ்மதில் 20598-வது மற்றும் 14006-வது அறிவிப்புகளாகவும், நஸயீயில் 1756-வது அறிவிப்பாகவும், இப்னுமாஜாவில் 1653-வது அறிவிப்பாகவும் இன்னும் பைஹக்கியில் 458-வது அறிவிப்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வறிவிப்புகளின் மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு

ஷுஃபா அவர்களின் அறிவிப்பு (அபூதாவூதில்) :

ஒரு பயணக் கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று பிறையைக் கண்டதாக அவர்கள் சாட்சி கூறினர். அப்போது அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும், மேலும் காலை பொழுதில் தொழுமிடத்திற்கு அவர்கள் செல்லுமாறும் நபியவர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என நபித் தோழர்களில் அவரின் தந்தையின் சகோதரிடமிருந்து (அல்லது சகோதரிஃசகோதரர்களிடமிருந்து) அபூ உமைர் பின் அனஸ் என்பவர் அறிவிக்கிறார். (நூல்; : அபூதாவூத் - 1159)

ஹூஸைம் அவர்களின் அறிவிப்பு (முஸன்னத் அபீ ஷைபாவில்):

எங்களுக்கு ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டதால் நாங்கள் நோன்பாளிகளாக காலையை அடைந்தோம். அப்போது பகலின் இறுதியில் ஒரு பிரயாணக் கூட்டம் வந்து அவர்கள் நேற்று பிறையைக் கண்டதாக நபி(ஸல்) அவர்களிடம் சான்று பகர்ந்தனர்;. அப்போது நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுகைக்கு வெறியேறுமாறும் மக்களுக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். (நூல்கள் : முஸன்னத் அபீ ஷைபா - 37336, முஸன்னத் அப்துர் ரஜ்ஜாக் - 7339)

ஷுஃபா அவர்களின் அறிவிப்பு (பைஹக்கீயில்) :

நபி (ஸல்) அவர்களின் தோழர்களான மக்கள் ரமழானில் நோன்பாளிகளாக காலைப் பொழுதை அடைந்தார்கள். ஒரு பிரயாணக் கூட்டம் வந்து நேற்று பிறை கண்டதாக சாட்சி சொன்னார்கள். அப்போது எஞ்சிய நாளில் நோன்பை விடுமாறு அவர்களுக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். (நூல் : ஸூனனுஸ் ஸகீh லில் பைஹக்கீ - 1337).

ஸயீத் பின் ஆமிர் அவர்களின் அறிவிப்பு (முஸ்னத் அஹ்மதில்):

அனஸ் அவர்களின் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரிஃசகோதரர்கள்) நபி(ஸல்) அவர்களிடம் பிறையை கண்டதாக சாட்சி கூறினார்கள். அப்போது நபியவர்கள் மக்களை நோன்பை விட்டுவிடுமாறும் மறுநாளில் அவர்களின் பெருநாளிற்கு செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். என அனஸ் அவர்கள் அறிவிக்கிறார். (நூல்; : முஸ்னத் அஹ்மது - 14006) – (மற்ற அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்ட அறிவிப்புகளை விட அனஸ் அறிவிப்பதாக வரும் இந்த அறிவிப்பாளர் வரிசை பல குளறுபடிகள் கொண்ட அறிவிப்பாகும்).

அறிவிப்பாளர்களின் வரிசை:

 

மேற்கண்ட ரிவாயத்துகளின் அறிவிப்பாளர்கள் வரிசை முறையே

1.அபூதாவூதில் இடம்பெரும் ஷுஃபா அவர்களின் அறிவிப்பு

a.  பெயர் கூறப்படாத ஒருவர் (நபித்தோழராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது)

b.  அபூ உமைர்

c.  அபூ பிஷ்;ரு

d.  ஷுஃபா

 2.முஸன்னத் அபீ ஷைபாவில் இடம்பெறும் ஹுஸைம் அவர்களின் அறிவிப்பு

a.   பெயர் கூறப்படாத ஒருவர் (நபித்தோழராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது)

b.   அபூ உமைர்

c.   அபூ பிஷ்ரு

d.   ஹுஸைம் (முதல்லஸ் என்னும் தரத்தில்)

 3.பைஹக்கீயில் இடம்பெரும் ஷுஃபா அவர்களின் அறிவிப்பு

a.   பெயர் கூறப்படாத ஒருவர் (நபித்தோழராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது)

b.   அபூ உமைர்

c.   அபூ பிஷ்;ரு

d.   ஷுஃபா

 4.முஸ்னத் அஹ்மதில் இடம்பெறும் ஸயீத் பின் ஆமிர் அவர்களின் தவறான அறிவிப்பு

a.  பெயர் கூறப்பட்ட ஒருவர் (அனஸ்(ரழி) அறிவித்ததாக)

b.  கதாதா

c.  ஷுஃபா

d.  ஸயீத் பின் ஆமிர் (இவர் பலஹீனமானவர் என்பது குறிப்பிடத் தக்கது)

இதில் நான்காவது இடம்பெரும் அறிவிப்பில் ஸயீத் பின் ஆமீர் பலஹீனமானவர். மாற்றுக் கருத்துள்ளவர்களே இதை பலஹீனம் என்று ஏற்றுக்கொள்ளும் இந்த அறிவிப்பையும் மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம். மேற்படி ஸயீத் பின் ஆமீர் அவர்கள் மேற்காணும் ரிவாயத்தில் தவறிழைத்துவிட்டார் என்று பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் உட்பட பல இமாம்கள் இவரை தவறிழைப்பவர் என்று கூறியுள்ளதையும் இக்கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம். இந்த அறிவிப்புகள் அனைத்தையும் ரிவாயத்து செய்தவர் அபூஉமைர் என்ற ஒருவரே.

இன்னும் மேற்சொன்ன ஹதீஸ் கிரந்தங்களில் வரும் ஒவ்வொரு ரிவாயத்துகளிலும் சில சொற்றொடர்கள் ஒன்றோடொன்று மாறுபட்டு வருவதையும் இந்த ஆக்கத்தின் பிற்பகுதியில் நீங்கள் காணலாம். இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு சம்பந்தமாக தத்தம்பகுதி மற்றும் சர்வதேசப் பிறையினரால் அதிகம் விவாதிக்கப்பட்ட குத்துபு சித்தா, முஸன்னத் அபீ ஷைபா, முஸன்னத் அப்துர் ரஜ்ஜாக் மற்றும் ஸுனனுஸ் ஸகீர் ரிவாயத்துகளையே நாமும் ஆய்விற்காக இங்கு எடுத்துக்கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Read 1382 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:27