செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 13

Rate this item
(0 votes)

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

 பகுதி :13

 

இமாம் இப்னுஹஜர் அபூஉமைரை நம்பகமானவர் என்று கூறினார்களா?

இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஸிகா நம்பகமானவர் என்று கூறிவிட்டார்கள் என்பதும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை சரி காண்பவர்களின் மற்றொரு வாதமாகும்.

உண்மையில் சொல்லப்போனால் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு சம்பந்தமாகவோ அல்லது இந்த செய்தியை அறிவிக்கும் அபூஉமைர் தொடர்பாகவோ இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபத் தஹ்தீத், தஹ்தீபுத் தஹ்தீத், லிஸானுல் மீஜானி போன்ற அவர்களது ஹதீஸ் ஆய்வு நூட்களில் எந்தச் செய்தியையும் குறிப்பிடவில்லை. அவர்களது சிறிய ஹதீஸ் கோர்வையான புலூஹூல் மராம் புத்தகத்தில் மட்டும் இஸ்னாதுஹூன் ஸஹிஹூன் என்ற சொல்லை இந்த அறிவிப்பாளர் வரிசைக்குப் பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான் என்னவோ அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நம்பகமானவர் என்று கூறிவிட்டார்கள் என்று வாதம் வைக்கிறார்கள் போலும்.

இப்னு ஹஜர் அவர்கள் இந்த அபூஉமைரைத்தான் ஸிகா என்று சொன்னார்களா? அவர்கள் யாரைப்பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்? எந்த அடிப்படையில் கூறியுள்ளார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமால், பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட இந்த அறிவிப்பை எப்படியேனும் தூக்கி நிறுத்திடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில் அவசரகோணத்தில் அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நம்பகமானவர் என்று கூறிவிட்டார்கள் என்று இணையதளங்களிலே எழுதுகிறார்கள்.

أبو عمير بن أنس بن مالك الأنصاري قيل اسمه عبد الله ثقة من الرابعه قيل كان أكبر ولد أنس بن مالك.دس ق . )تقريب التهذيب-(1 / 661( 8281-

أبو عميرة بن أنس بن مالك الأنصاري قيل اسمه عبد الله قيل كان أكبر ولد أنس بن مالك عن عمومة له وعنه أبو بشر جعفر بن إياس. (لسان الميزان - (7 / 477)5613 -)

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான தக்ரீபத் தஹ்தீத் (பாகம்:01, பக்கம்:661, அறிவிப்பாளர் எண்:8281)இல் அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் என்பவரைப் பற்றி கூறும் போது அவரின் பெயர் அப்துல்லாஹ் என்று இருக்கலாம் என்றும் இப்னு ஹஜரின் ஸிகா தரவரிசையில் நான்காவது தரத்தில் அவர் உள்ளதாகவும், மேற்படி நபர் அனஸ் பின் மாலிக் அவர்களின் மூத்த மகன் என்றும் கூறியுள்ளார்கள்.

அதுபோல மற்றொரு புத்தகமான லிஸானுல் மீஜானி (பாகம்:07, பக்கம்:477, அறிவிப்பாளர் எண்:5613)ல் அபூஉமைராஹ் பின் அனஸ் பின் மாலிக் என்ற வேறொரு பெயரிலும் கூறியுள்ளார்கள். மேற்காணும் செய்திகளில் வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைர் பின் அனஸ் என்பவரைக் குறித்தா குறிப்பிட்டுள்ளார்கள்? மக்களே நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் என்ற பெயருடைய நபர் இருக்கையில் அபூஉமைராஹ் பின் அனஸ் பின் மாலிக் பெயர் கொண்ட மற்றொரு நபர்கூட இருந்தாரா? என்ற கேள்வியும் எழலாம். இந்த அபூஉமைராஹ் என்ற பெயரை எந்த அறிஞர்களும் பயன்படுத்திடவில்லை. இந்த அபூஉமைராஹ் என்பவர்கூட நிலைமை அறியப்படாதவாராகவே இருக்கிறார்.

إيضاح الإشكال - (1 / 82) 95 عمومة أبي عميرة بن أنس

பெயர் குழப்பமான ராவிகளைப்பற்றிய தகவல்களைக் கொண்ட நூலான ஈழாஹுல் இஷ்கால் (பாகம்:01, பக்கம்:82, அறிவிப்பாளர் எண்:95) புத்தகத்தில் மட்டுமே அபூஉமைராஹ் என்ற பெயர் மட்டும் வந்துள்ளது. அதிலும் அபூஉமைராஹ் பின் அனஸ் உடைய உமூமத் என்ற செய்திமட்டும் வெருமனே கூடுதல் தகவல் எதுவுமில்லாமல் மொட்டையாக உள்ளது. அதனால் அபூஉமைராஹ் என்ற பெயரில் ஒருவர் இருந்திருக்கக்கூடும் என்றே வைத்துக்கொண்டாலும், இந்த அபூஉமைராஹ் என்பவரைப்பற்றி இப்னு ஹஜர் அவர்கள் ஏதும் குறிப்பிட்டிருந்தால் இதில் வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைர் பின் அனஸ் ஸிகா ஆகிவிடுவாரா என்ன?

تهذيب التهذيب - (12 / 168)8619 - د سق وذكره ابن حبان في الثقات وقال ابن عبد البر مجهول لا يحتج به.

மேலும் மேற்படி அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் அவர்களை பற்றி இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது தஹ்தீபுத் தஹ்தீ (பாகம்:12, பக்கம்:168, அறிவிப்பாளர் எண்:8619)பில் அவரை இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா என்று சொல்லியுள்ளார்கள் என்றும் இப்னு அப்துல்பர் அவர்களோ மேற்படி நபரை அறியப்படாதவர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சொல்லியுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால் மேற்கண்ட செய்திகளில் வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரை இப்னு ஹஜர் அவர்கள் எங்கே ஸிகா என்று சொல்லியிருக்கிறார்கள்? வாகனக்கூட்டம் புகழ் அபூஉமைருக்கும் இப்னு ஹஜர் அவர்கள் கூறும் அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் என்பவருக்கும் என்ன தொடர்பு? அல்லது அபூஉமைராஹ்வுக்கும் அபூஉமைருக்கும் என்ன சம்பந்தம்? இவர் தான் அவர் என்றால் அதை நிரூபிக்கும் ஆதாரம் எங்கே என்று கேட்கிறோம்.

தங்களின் பிறை நிலைபாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை இனம் காணப்படாத அபூஉமைரை வைத்து தூக்கிப்பிடிப்பது கடினம் என்பதினால் அபூஉமைரின் பெயர் அப்துல்லாஹ் பின் அனஸ் என்றும் அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் என்றும் அல்லது அபூஉமைராஹ் என்றும் கூறி குழப்பிவிட்டால், அவர்களை யார் யார் என்று தனியாக அடையாளம் கண்டு தெளிவுபடுத்துவது கடினம் என்று நினைத்து திட்டமிட்டு ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை ஏன் இந்த ஆள்மாறாட்டம்? என்ற தலைப்பில் பிற்பகுதியில் விளக்கமாக தெரிவித்துள்ளோம்.

இப்னு ஹஜர் அவர்கள் ஒருவரை ஸிகா என்று கூறி அவரை தனது ஸிகா பட்டியலில் நான்காவது இடத்தில் வைத்தால் அவரின் நிலை என்ன என்பதை ஹதீஸ்கலையில் தொடர்புடையவர்கள் நன்கு அறிவர். ஒரு அறிவிப்பாளர் முஸ்லிமாக வாழ்ந்தார் என்று தெரிந்தாலே அவரையும் நல்லெண்ணத்தின் காரணமாக இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிகா பட்டியலில் சேர்ப்பார்கள்.

இப்னு ஹஜர் அவர்களின் ஸிகா பட்டியலில் ஸஹாபாக்களுக்கு முதல் இடமும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள தாபியீன்கள், தபஅதாபியீன்களுக்கு இரண்டாவது இடமும், இரண்டாவது இடத்திற்கு சற்று நெருக்கமானவர்களை மூன்றாவது இடத்திலும் வைத்துள்ள இப்னு ஹஜர் அவர்கள், அந்த மூன்றாவது இடத்திலுள்ளவர்களை விட மிகக்குறைந்த தரத்தில் உள்ளவர்களையும், விமர்ச்சிக்கப்பட்டவர்களையும், நிலையை அறியப்படாதவர்களையும் தனது நான்காவது பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.

இமாம் திர்மிதி, இமாம் அபூதாவூது போன்றோர் எந்த சட்டத்தையும் எடுக்காமல் பலஹீனம் என்று விட்டுவிட்ட செய்திகளை அறிவிக்கும் ராவிகளும் இப்னு ஹஜரின் இந்த நான்காவது பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தக்ரீபுத் தஹ்தீபில் அபூஉமைர் பின் அனஸ் பின் மாலிக் என்பவரை இப்னு ஹஜர் அவர்கள் ஸிகா தரவரிசையில் நான்காவது இடத்தில் வைத்துள்ளதை வைத்து அவர்தான் வாகனக்கூட்டம் அபூஉமைர் என்று ஒருவேளை வாதித்தாலும் அபூஉமைர் விமர்ச்சிக்கப்பட்டவர், நிலைமை அறியப்படாதவர் என்றே நிரூபனமாகும். இவ்வாறு அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஸிகா நம்பகமானவர் என்று கூறிவிட்டார் என்று யாரும் வாதித்தால் அதுவும் அபூஉமைருக்கு எதிராகத்தான் அமைகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Read 2133 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:30