செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:40

பிறை கருத்தரங்கம் காயல்பட்டினம்

Rate this item
(0 votes)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

பிறை கருத்தரங்கம்

ஓர் இறை! ... ஓர் மறை!! ... ஓர் பிறை!!!

இன்ஷா அல்லாஹ்

  • நாள்         :       ஷவ்வால் பிறை 18 (24-08-2013) சனிக்கிழமை.
  • நேரம்       :       மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 வரை
  • இடம்       :       துளிர் பள்ளிக்கூட அரங்கம், காயல்பட்டினம்.

ஓர் இறை! ஓர் மறை!! ஒரே பிறை!!! ஆனால் முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் ஏன் மூன்று? என்ற வியப்புக்குறிக்கும்!!! வினாக்குறிக்கும்??? குர்ஆன் சுன்னாவின் ஒளியில் விடை காண்போம்.!

 

மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த ஆங்கில நாட்காட்டியைவிட இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியே பின்பற்ற தகுதி வாய்ந்தது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!

இஸ்லாமிய மாதங்களை சரியாக துவங்கி, சரியான தேதிகளில் நமது அமல்களை செய்து மகிழவும் ஒன்றுபடுவோம்! ஒன்றிணைந்தே செயல்படுவோம்!!

ஒரு மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் எந்த திசையில் பார்க்க வேண்டும்? என்பன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு மார்க்கம் கூறும் தெளிவை அறிவோம்!

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு பிறந்த பிறையை புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டுமா? என்பதை குர்ஆன் சுன்னா ஒளியில் அறிந்துகொள்வோம்.

உலக முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை என்ற ஒரேநாளுக்குள் தொழுவதைப் போல, பொருநாள் தொழுகையையும் பெருநாள் தினத்தில் ஒரே நாளுக்குள் தொழமுடியும் என்பதை தெளிவாக புரிவோம். 

உலமா பெருமக்களே! உயர்ந்த சிந்தனையாளர்களே! பாசமிகு தாய்மார்களே!

இளைஞர்களே! யுவதிகளே!

பிறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்வுகளை நேரடியாக கேட்டு தெளிவு பெறவும், பிறை சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடை காணவும் கருத்தரங்கத்திற்கு தவறாது வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்.

வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

இவண்

ஹிஜ்ரி கமிட்டி,  ஹிஜ்ரி கமிட்டி, 19-D C கஷ்டம்ஸ் ரோடு, காயல்பட்டினம்

தொடர்புக்கு : 9940811119, 9447181884, 9444043264, 9994344292, 9842185917

State Head Office: 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103. திருநெல்வேலி மாவட்டம்.

தொடர்பு எண்கள்: 99626 22000, 99626 33000, 99624 77000,

Read 1893 times