செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:20

1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை

Rate this item
(0 votes)
1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் தன் திருமறை 36:39 ல் சந்திரனின் நிலைகளை பற்றி கூறும் போது கீழ்கண்ட வாறு கூறுகின்றான்.

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

இன்னும்  உலர்ந்து வளைந்த  பேரீத்த பாளையை  போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான்.

சந்திர மாதத்தில் நாம் பிறையை பார்க்க முடிகின்ற கடைசி நிலைக்கு பெயர்தான் உர்ஜுனல்  கதீம் என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  அதாவது சந்திர மாதம் 29 நாட்களில் முடிவடையும் நிலையில் அல்லாஹ் நிர்ணயித்து  இருந்தால்உர்ஜுனல் கதீம் என்னும்  இந்நிலையை சந்திரன் 28 வது நாளில் அடையும்.  மாதம் 30 ஆக இருந்தால் சந்திரன் இந்நிலையை 29வது நாளில் அடையும்.

ஹிஜ்ரி 1431 ஷஃபான் மாதத்தினுடைய  கடைசி நிலையை நாம் திங்கள் கிழமை அடைந்தோம்.  அந்த நிலையை நாங்கள் மட்டும் அறிந்து கொண்டால் போதாது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில் அதை வீடியோ பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளோம்.

Download/பதிவிறக்கம்

Download/பதிவிறக்கம்

திங்கள் கிழமை(9-8-2010) அன்று காலை பஜ்ர் நேரத்தில்  1431 ஷஃபான் மாதத்தின் 29வது நாளின் பிறையை உர்ஜுனல் கதீமாக வழக்கமாக பார்க்க முடிந்தது போல் இம்முறையும் பார்க்க முடிந்தது.  இதில் இருந்து நாம் பெறும் படிப்பினை என்னவென்றால், இன்றைய தினத்தில்  சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே சந்திரன் கிழக்கே உதித்து விட்டதால் நாம் பிறையை கண்களால் கிழக்கே சூரியன் உதிக்கும் திசையில் பார்க்க முடிந்தது.

செவ்வாய் கிழமை (10.8.2010) அன்று சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் இணையும் நாள் என்பதால் அன்றைய தினம் கிட்டதட்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாகத்தான் உதிக்கும். எனவே சந்திரனை நாம் வெறும் கண்களால் பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறோம்.  இதை தான் ஹதீஸ்களில் பிறை தெரியாத நாள் என குறிப்பிடப்படுகிறது.

மேக மூட்டம் இல்லாவிட்டாலும்  பிறை நமது கண்களுக்கு  மறைக்கப்படுகின்ற இந்த நாளை நாம்  ஷஃபான் 30வது நாளாக எண்ணிக்கொண்டு மாதத்தை முடிக்க வேண்டும் என்பது நபியின் கட்டளை.

அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை (11-08-2010)காலை நாம் நோன்பு நோற்றவர்களாக ஹிஜ்ரி 1431 ரமளான் மாதத்தை சரியான நாளில் ஆரம்பிக்க வேண்டும். எனவே  அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மென்மேலும் கல்விஞானத்தை தந்து அருள் செய்ய பிரார்த்திப்போம்.

இப்படிக்கு

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Read 2001 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:12