செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:10

1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா?

Rate this item
(0 votes)
1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா?

அஸ்ஸலாமு அலைக்கும வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளே!

நம்மை விட்டு ஹிஜ்ரி 1430 வருடத்துடைய ரமளான் மாதம் கடந்து விட்டது.

ஹிஜ்ரி 1430 வருடத்துடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் அதாவது முஸ்லீம்களுடைய இரு பெருநாள் தினங்களில் ஒரு பெருநாளாகிய ஈதுல் ஃபித்ர் என்ற முக்கியமான நாளை உலகில் பல பகுதிகளில் பல வித்தியாசமான கிழமைகளில் மக்கள் பெருநாள் தொழுகை தொழுது கொண்டாடினார்கள்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் ஏர்வாடி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் சனிக்கிழமை (19.9.2009) ஷவ்வால் 1 என கூறி பெருநாள் தொழுகை நடத்தினர்.

சவுதி போன்ற நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை (20.09.2009) ஷவ்வால் 1 எனவும்,

இந்தியா போன்ற நாடுகளில் திங்கள்கிழமை (21.09.2009) ஷவ்வால் 1 எனவும் கூறி பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

மூன்று கிழமைகளில் 1 தேதி வருவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை நாம் சரியா தவறா என முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறிய பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள். உங்களுக்கு பிறை தெரியவில்லை என்றால் அதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்பதை வைத்து நாம் கணக்கிட்டாலே மேற்கண்ட மூன்று கிழமைகளில் யார் முதல் நாளை சரியாக அடைந்தார்கள் என்பதை அறிய முடியும்.

பிறையை கண்பார்வையில் நபி(ஸல்) அவர்கள் கூறிய முறையில் கணக்கிட நாம் ஞாயிற்றுக்கிழமை (20.09.2009) அன்று ஏர்வாடி பகுதியில் தெரிந்த பிறையையின் வீடியோ காட்சியை உங்கள் பார்வைக்கு தருகிறோம். பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

Read 2255 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:10