வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 20

Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி : 20

விமர்சனம் 4:

இந்த ஹதீஸின் சில அறிவிப்புகளில் அமரஹூம் என்றும் சிலஅறிவிப்புகளில் அமரன்னாஸ் என்றும் இருப்பதை முரண்பாடு என்று நீளமாக பேசியிருக்கிறார்கள். ஹூம் அவர்கள் என்பதும் அந்நாஸ் மக்களை என்பதும் குறிப்பிட்ட ஒரே மக்களைத் தான் குறிக்கிறது எனும்போது முரண்பாடு கிடையாது.

 

விளக்கம் :

ஹூஸைம் அவர்களின் அமரன்னாஸ் அதாவது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற அறிவிப்பை வைத்துதான் எல்லா மக்களுக்கும் இது பொருந்தும் என்று சர்வதேசப்பிறையினர் கூறுகின்றனர் - இது ஒரு சாராரின் நம்பிக்கை.

ஷூஃபா அவர்களின் அமரஹூம் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற அறிவிப்பை வைத்து அமரஹூம் என்ற சொல் வாகனக்கூட்டத்தை மட்டுமே குறிக்கும். இது பொதுவான அறிவிப்பு இல்லை எனத் தத்தம்பகுதி பிறையினர் கூறுகிறார்கள் - இது மற்றொரு சாராரின் நம்பிக்கை.

ஆனால் நம்மை விமர்சிப்பவர்களோ ஹூம் அவர்கள் என்பதும், அந்நாஸ் மக்கள் என்பதும் குறிப்பிட்ட ஒரே மக்களைத்தான் குறிக்கிறது எனும்போது முரண்பாடு கிடையாது எனக் கூறுகிறார்கள். அதாவது 'அமரன்னாஸ் என்பதும் அமரஹூம் என்பதும் ஒன்றுதான், அச்சொல்லை வேறுபடுத்தி பிரிக்கத் தேவையில்லை' எனக் கூறுகிறார்கள். இவ்வாறு புதிதாக ஒரு மூன்றாவது நிலைபாட்டை அறிவித்துள்ளார்கள், நமக்கு மகிழ்ச்சிதான்.

ஒரே அறிவிப்பாளர் அமரஹூம் மற்றும் அமரன்னாஸ் என்ற இரண்டு மாறுபட்ட கருத்துகளை அறிவித்துள்ளார். இருப்பினும் இது முரண்பாடு அல்ல என்று ஆக்குவதற்கு இவர்கள் வீணான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களின் இம்முயற்சி இது நாள்வரை இவர்களுக்கு பயனளிக் கவில்லை என்பதை தத்தம்பகுதி பிறையினர் மற்றும் சர்வதேசப்பிறையினரிடையே ஏற்பட்டுள்ள பிரிவினைகளே சாட்சியாகும். எனவே அமரன்னாஸ் என்பதும் அமரஹூம் என்பதும் ஒன்றுதான் எனக்கூறுவதிலும் இவர்கள் தோல்வியையே கண்டு வருகிறார்கள்.

ஏனென்றால், அமரஹூம் மற்றும் அமரன்னாஸ் என்ற வார்த்தை இரண்டுமே அபூஉமைர் வழியாகவே வந்துள்ளன. அமரஹூம் மற்றும் அமரன்னாஸ் என்ற சர்ச்சையில் நபியவர்கள் கட்டளை என்ன என்பதை நிரூபித்தால்தான் அதிலிருந்து சட்டம் எடுக்க முடியும்.

மேற்படி அறிவிப்பு தத்தம்பிறைக்கு பிறைக்கு ஆதாரமா? அல்லது சர்வதேசப் பிறைக்கு ஆதாரமா? உங்களில் யாருடைய நிலைபாடு சரி என்ற முடிவிற்கு வாருங்கள் என்றும், நோன்பை விட்டுவிடுங்கள் என்ற கட்டளை வாகனக்கூட்டத்திற்கு மட்டுமா? வாகனக்கூட்டம் மற்றும் ஸஹாபாக்களுக்கும் சேர்த்துதான் குறிக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் முடிவெடுங்கள் என்றும் நாம் கேட்டுக்கொண்டே வருகிறோம். சம்பந்தப்பட்ட முதல் இரண்டு சாராரும் நம்முடைய கேள்விக்கு இன்றுவரை மௌனம்தான் சாதிக்கிறார்கள்.

ஆகையால் தற்போது புதிதாக மூன்றாவது நிலைபாட்டைச் சொல்லி நம்மை விமர்சனம் செய்பவர்கள், மேற்சொல்லியுள்ள இருசாரரையும் ஒன்றுகூட்டி அமரன்னாஸ் என்பதும் அமரஹூம் என்பதும் ஒன்றுதான். அச்சொல்லை வேறுபடுத்தி பிரிக்கத் தேவையில்லை என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை ஒர் அணியாக ஆக்கட்டும். அதன் பிறகு வாகனக்கூட்டம் அறிவிப்பு ஸஹீஹானது என்பதற்கு அவர்கள் துணையுடனேயே ஆதாரங்களை நமக்குத் தரட்டும், தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply