Super User
Super User
Offline
0

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்!

பிறை 12-இல் பெளர்ணமியா? 27-ஆம் நாள் அமாவாசையா?

    சூரியனும் சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியே இயங்குகின்றன. (அல்குர்ஆன் 55:5).

அவன்தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்ளும் பொருட்டு சந்திரனுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தினான். அல்லாஹ் இவற்றையெல்லாம் சத்தியத்தைக் கொண்டே இல்லாமல் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 10:5).

 

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96  வசனங்களின் மூலம் நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தி கூறுகிறான். மேலும்  சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குவதாகவும் பிறைகளின் படித்தரங்கள் மூலம் பல ஆண்டுகளை கணக்கிட முடியும் என்றும் கூறுகின்றான்.

இந்நிலையில் நம் சமுதாயம் ஒரு மாதத்தைக் கணக்கிடுவதற்கே தடுமாறுவதைப் பார்க்கிறோம். ரமழான் துவக்கத்திலும், நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் போதும் பிறையை பார்த்து விட்டு ஐயோ! இது இரண்டாவது பிறை அல்லது மூன்றாவது பிறை என்று கூறுவதை வருடந்தோரும் நாம் காண்கிறோம். ஏன் இந்த அவலநிலை? ஏன் இந்தத் தடுமாற்றம்? யாரை திருப்திப்படுத்த இந்த ஆறுதல் வார்த்தைகள்? சற்று சிந்தியுங்கள் மக்களே!.

அல்லாஹ்வும், தூதர்நபி (ஸல்) அவா;களும் பிறைகளைக் கவனித்து துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று கூறிய அடிப்படையில் துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரிநாட்காட்டியின் தேதிகள் அமைந்துள்ளன. அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை 09.12.1435 (3/10/14) அரஃபா தினம் என்றும் மறுநாள் சனிக்கிழமை 10.12.1435 (4/10/14) அன்றுதான் ஹஜ்ஜூப் பெருநாள் என்பதையும் சரிகண்டு நாமும், நமமோடு சுமார்60க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள உலக முஸ்லிம்களும் அரஃபா நோன்பiயும், ஹஜ்ஜூப் பெருநாளையும் மேற்படி கிழமைகளில் சரியாக அமல் செய்தோம் - அல்ஹம்துலில்லாஹ். 

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply