புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00

சர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா? இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா?

Rate this item
(5 votes)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 26

சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன்சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக்கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமதுபகுதி பிறை மற்றும் மண்டலமாநிலதேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர்.

 

எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் இருக்கிறதாஇந்நிலைப்பாடு சரியானதுதானாஅறிவுப்பூர்வமானதுதானாஎன்பதை உணர்த்துவதற்காக சர்வதேசப்பிறை கருத்துடையோரை நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை மிகமிக கண்ணியத்தோடு வினவுகிறோம். இக்கேள்விகளில் பல மாநில மற்றும் தேசியப் பிறை நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கும் பொருந்தும். இதற்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நேரடியான விடைகளைக் கண்டறிய முற்படுங்கள் என்றும் வேண்டுகிறோம்.

 

1.   இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும்ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத் தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்றதுல்லியமானகுர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?

 

2.  அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால்மஃரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் பிறை நிலைப்பாட்டின் மூலம் அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?

 

3. துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று நீங்கள் கருதினால்,நாட்காட்டியையும்அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன?

 

4.   சர்வதேச அளவில் பிறையைப் பார்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு உலகின் அனைத்து நாடுக ளையும்அதன் மக்களையும் 24 மணிநேரம் என்ற ஒருநாளுக்குள் உள்ளடக்கிய ஒன்றாபுரியும்படி சொல்வதென்றால் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கை என்னசர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கையானது தூரத்தை அடிப்படையாகக் கொண்டதாஅல்லது நேரத்தை அடிப்படையாகக் கொண்டதாஅதை வலியுறுத்தும் குர்ஆன்சுன்னா ஆதாரங்கள் எங்கே உள்ளது

 

5.  உலக நேரம் 16 மணிக்குப் பின்னர் (அதாவது அமெரிக்கப் பகுதியில்) ஒரு வெள்ளிக் கிழமையில் முதல் நாளின் பிறை அது அஸ்தமிக்கும் மஃரிபு வேளையில் புறக்கண்களுக்குத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின் படி அது ரமழான் தலைப்பிறை என்றே ஒரு வாதத்திற்காக கொள்வோம். அவ்வாறு அந்த வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க் கப்படும்போது நியூசிலாந்துஆஸ்திரேலியா,ஜப்பான்இந்தோனிஷியாமலேசியாசிங்கப்பூர் போன்ற கிழக்குப் பகுதியிலுள்ள நாட்டு மக்கள் அடுத்த நாளான சனிக்கிழமையின் பகல் பொழுதில் இருப்பார்கள். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன?அந்நாட்வர்கள் ஞாயிற்றுக் கிழமைதான் ரமழானின் முதல் நோன்பைத் துவங்க முடியும். எனவே அங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் மாதத்தின் முதல் நோன்பை சர்வதேச அமெரிக்க முஸ்லிம்களைப் போல சனிக்கிழமை அன்று துவங்க இயலாமல் போகிறதே இதற்கு சர்வதேசப்பிறை நிலைப்பாடு கூறும் தீர்வு என்ன?

 

6.   மேற்படி கிழக்கத்திய நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமாஅவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமைஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு வௌ;வேறு கிழமைகளில் வருகிறதேஇப்படி வருவது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி சரியானதுதானா? இதற்கு குர்ஆன் சுன்னா ஆதாரங்கள் எங்கே

 

7. அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மஃரிபில் பிறை தென்படும்போது நியூசிலாந்துஆஸ்திரேலியாஜப்பான்,இந்தோனிஷியாமலேசியாசிங்கப்பூர் போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்த நாளுக்குள் சென்று விட்டதால்,பெருநாள் முடிந்த பின்னர் அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் நோற்க இயலாது போன அந்த முதல் நாளின் நோன்பை களாச் செய்ய வேண்டுமாஅவ்வாறு  களாச் செய்ய வேண்டு மென்றால் அதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் ஆயத்து எதுஇதற்கு சுன்னாவின் நேரடி வழிகாட்டல் எங்கே உள்ளது

 

8.  சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படி சில நாடுகளிலுள்ள மக்கள் நோற்க இயலாது போகும் ரமழான் முதல்நாளின் நோன்பை பெருநாள் தினத்திற்குப் பின்னர் களாச் செய்வதுதான் மார்க்கச் சட்டம் என்றால், சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்கு ரமழான் மாதம் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு ரமழான் 29 நாட்களில் முடியும். அதேபோல ஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்து விட்டால் பிரிதொரு சாராருக்கு 28 நாட்களிலேயே மாதம் முடிந்து விடும். இதுதான் சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத்தீர்வாஇது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்த முடியாமல் ஏற்பட்ட தோல்வியாக இது தெரியவில்லையா?

 

9.  சர்வதேசப்பிறை கருத்துடைய சிலர் இன்று துல்லியமான பிறைக் கணக்கீடை 'பித்அத்' என்றும் 'ஹராம்' என்றும் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மாதத்தை முற் கூட்டியே கணக்கிடுவது'பித்அத்' என்பதற்கோ 'ஹராம்' என்பதற்கோ குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியான ஆதாரத்தைத் தரமுடியுமா

 

10.  பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னரே நோன்பு வையுங்கள்பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னரே நோன்பை விடுங்கள் என்று ஹதீஸ்கள் போதிப்பதாகவும்அவை சர்வதேசப் பிறை நிலைப்பாட்டைத்தான் குறிக்கிறது என்றும் சொல்கின்றனர். அப்படியெனில் தத்தமதுபகுதி பிறை மற்றும் மண்டலமாநிலதேசியப் பிறை நிலைப்பாடுகளை சரிகாண்பவர்களும் தங்களது பிறை நிலைப்பாடுகளுக்கு மேற்படி ஹதிஸ்களையே ஆதாரமாகக் கருதுகின்றனர். இந்நிலையில் மேற்படி நிலைப்பாடுகள் பற்றியும்அந்நிலைபாடுகள் கொண்டவர்கள் பற்றியும் சர்வதேசப் பிறையினரின் மார்க்க தீர்ப்பு என்ன?

 

11. பிறை என்று மொழிபெயர்க்கப்படும் 'ஹிலால்' என்ற பதம் எந்த நாளுக்குரிய சந்திரனுக்கு கூறப் படும் சொல்லாகும்எந்த நாளின் பிறையை புறக்கண்களால் பார்க்க நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டதாகச் சொல்கிறார்கள்இதற்கான ஆதாரத்தைத் தர இயலுமா?

 

12.  மாதத்தின் 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்க வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் எங்கே ஆதாரம் இருக்கிறது? 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்கச் செல்ல வேண்டும் என கூறினால்பிறை பார்க்கச் செல்பவருக்கு அன்றைய மஃரிப் தொழுகை ஜமாஅத்தில் கலந்து கொள்ளாமல் தொழுகையை பிற்படுத்தி தொழுது கொள்வதற்கு மார்க்கத்தில் சலுகை ஏதும் வழங்கப்பட்டுள்ளதாநாம் இதை வீம்புக்காக இவ்வாறு கேட்கவில்லைமாறாக 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபுடைய தொழுகை நேரத்தில்தான் பிறை புறக்கண்களுக்குத் தெரிவதாக சர்வதேசப் பிறையினரும் நம்பியுள்ளனர். எனவேதான் நாம் மேற்கண்ட வினாவை எழுப்புகிறோம். மேலும் மாதத்தின் இறுதிப் பகுதி தேய்பிறை நாட்களான 26, 27, 28 போன்ற நாட்களிலும் பிறையானது மேற்கு திசையில் மஃரிபு வேளையில்தான் தெரிகிறதா?

 

13.  சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில்சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னென்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும்இன்னென்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறதுஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் சர்வதேசப் பிறையினர் தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா?

 

14.   மார்க்க விஷயங்களுக்கு முர்ஸல் (தொடர்பு அறுந்த) வகை ஹதீஸ்கள் பிரதான ஆதாரமாகாது என்று நம்பும் சர்வதேசப் பிறை கருத்துடைய அறிஞர்கள்பிறை பற்றி பிரச்சாரம் செய்யும் போது மட்டும் ஹதீஸ்களின் பலவீனமான நிலைகளைக் கண்டு கொள்வதில்லை. தங்கள் நிலைப்பாட்டிற்கு நபிவழி ஆதாரமில்லை என்பதினால் பிறை குறித்த  பலவீனமான ஹதீஸ்களைக்கூட ஆதாரமாக முன்னிறுத்துவதைக் காண்கிறோம். எனவே பிறை விஷயமாக வரும் ஹதீஸ்களுக்கு மட்டும் அறிவிப்பாளரான ஸஹாபியின் பெயர் குறிப்பிடாமல் ஹதீஸை அறிவிக்கலாம் என்ற புதிய சட்டம் ஏதும் ஹதீஸ்கலையில் புதிதாக உறுவாக்கப் பட்டுள்ளதாபிறை விஷயத்திற்கு மட்டும் பலவீனமானஇட்டுக்கட்டப்பட்டதொடர்பு அறுந்த அறிவிப்புகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி ஏதுமிருந்தால் அதை ஆதாரத்துடன் நமக்கு காட்டுமாறு கேட்கிறோம். 

 

15.    சர்வதேசப் பிறை கருத்துடைய சிலர் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் தவறான நாளில் நின்றுவிட்டார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் கூறியதாக பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நமக்கு எதிரான மேற்படி பொய்ப் பிரச்சாரத்திற்கு தகுந்த ஆதாரத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் நின்ற கிழமைமையையும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி அறிந்து தெளிவாக நமக்கு அறிவிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜூ சம்பந்தமாக வரும் ஹதீஸில்'லைலத்து ஜம்இன்' என்ற பதத்திற்கு என்ன பொருள் என்பதையும் மேற்படி சர்வதேசப்பிறை கருத்துடையோர் தெளிவுபடுத்த வேண்டும். 

 

16.    ஹிஜ்ரி கமிட்டியினர் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்று வரும் ஹதீஸ் சொற்றொடரின் 'ஹி' என்பதைத்  தவறாக விளங்கியுள்ளனர்நாங்கள்தான் சரியாக விளங்கியுள்ளோம் என்று சர்வதேசப்பிறை கருத்துடைய சிலர் கூறி வருகின்றனர். அப்படியானால் 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது?. எந்தப் பெயர்ச் சொல்லும் முன்னால் குறிப்பிடப்படாமல்'ஹி' என்ற பதத்தைக் கூறி பொத்தாம் பொதுவாக சொல்வது அரபு மொழி இலக்கணப்படி சரியானதுதானாஅல்லது அது தவறானதாசந்திரன் என்ற ஒருமையான கோளின் 'அஹில்லாஹ்' என்ற பன்மையான அனைத்து படித்தரங்களையும் மேற்படி 'ஹி' என்ற பதம் குறிக்கிறது என்று நாம் கூறுவதை எந்த அரபு இலக்கண விதிப்படி மாற்றுக் கருத்துடையோர் மறுக்கிறார்கள்.

 

17.   நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் 'அஷ்ஷஹரு திஸ்வூவ் வ இஷ்ரீன லைலத் தன்என்ற ஹதீஸ் தொடரில் 'ஸுமூ லி ருஃயத்திஹி' என்பதில் உள்ள 'ஹிஎன்ற பதம்  குறிக்கின்றதுஇன்னும் அதே ஹதீஸில் இடம் பெரும் 'ஃப இதா ரஅய்துமூஹூஎன்பதில் உள்ள 'ஹூ' எதைக் குறிக்கின்றது?. மேலும் அந்த ஹதீஸில் இடம்பெரும் மற்றொரு சொற்றொடரான 'வலா தஃப்திரு ஹத்தா தரவ்ஹூஎன்பதில் உள்ள 'ஹூ' எதை குறிக்கின்றது?

'அஷ்ஷஹரு திஸ்வூவ் வ இஷ்ரீன லைலத்தன்என்ற சொற்றொடர் இல்லாமல் நேரடியாக 'ஹத்தா தரவ்ஹூஅல்லது 'ஸுமூ லி ருஃயத்திஹிஅல்லது 'ஃப இதா ரஅய்துமூஹூஎன்று வரும் ரிவாயத் துகளிலுள்ள 'ஹி' , 'ஹூ'போன்ற பதங்கள் எதைக் குறிக்கின்றனஹிஜ்ரி கமிட்டி அறிஞர்களுக்கு அரபு மொழி தெரியவில்லை என்று விமர்சிக்கும் அரபு மொழி விர்ப்பனர்கள் இவற்றிற்கு பதில் கூறக் கட மைப்பட்டுள்ளதால் இவ்வாறு கேட்கிறோம். மேற்படி பதங்கள் பிறை என்ற ஒரேயொரு படித்தரத்தை மட்டும் குறிக்கிறதாஅல்லது சந்திரனின் அனைத்துப் படித்தரங்களையும் குறிக்கின்றனவா?

 

18.  'ஸூமூ லி ருஃயத்திஹிஎன்று வரும் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும்'கும்மஎன்ற பதத்திற்கு 'மேகம் மறைத்தால்என்று மட்டும்தான் அர்த்தம் என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் நம்பியுள்ளனர். 'கும்ம' என்பதற்கு 'மேகம்' என்று எவ்வாறு முடிவு செய்தார்கள்மேலும் 'அலைக்கும்என்ற பதம் யாரைக் குறிக்கும்ஒட்டு மொத்த சர்வதேச உம்மத்தையாஅல்லது ஒரு பகுதியில் வாழும் மக்க ளையா?. ஒட்டுமொத்த மக்களைத்தான் அச்சொல் குறிக்கிறது மண்டலமாநிலதேசியப் பிறை எல்கையை அல்ல என்று சர்வதேசப் பிறையினர் கூறினால் அந்த எல்கையை வரையறுத்துக் கூற முடியமா?

 

19.  'ஸூமூ லி ருஃயத்திஹிஎன்ற சொற்றொடர் வரும் ஹதீஸில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதில்'கும்ம' என்றால் 'மேக மூட்டம்தான்என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் வாதிடுகின்றனர். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் 'கும்மஎன்ற பதத்ததைப் போலவே 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய'போன்ற பதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்படி 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய'போன்ற பதங்களுக்கும் 'மேகமூட்டம்என்று தான் பொருள் கொடுக்க வேண்டுமாஇல்லை என்றால் மேற்படி சொற்களுக்கு என்னதான் பொருள்?

 

20.   29-வது நாளில் மேகம் வானத்தை மறைத்து பிறை தென்படா விட்டால் அந்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறுபவர்கள் மேகமும் மறைக்காமல் வானம் தெளிவாக இருந்துபிறையும் தெரியாமல் இருந்தால் அந்த மாதத்தை எத்தனை நாட்களாக முடிவு செய்ய வேண்டும்?.  நபி (ஸல்) அவர்கள் வானம் தெளிவாக இருந்து பிறை தெரியாமல் இருக்கும் போது எவ்வாறு முடிவெடுத்தார்கள்அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எவை?சர்வதேசப் பிறை கருத்துடையோர்  விளக்கம் தருவார்களா

 

21.    பிறையை புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்று வாதிக்கும் சர்வதேசப் பிறை கருத்துடையோர் ஸஹருடைய வக்தை அறிவதுநோன்பு திறக்கும் நேரம் மற்றும் கிரகணத் தொழுகை போன்ற இபாதத்துக்களை கண்ணால் பார்த்து அமல் செய்ய வேண்டும் என்பதை மறக்க இயலாது. அப் படியானால் கிரகணத் தொழுகை தொழுவதற்காக கிரகணத்தை பார்க்கும் முன்னரே அறிவிப்பு செய்வதேன்ஸஹருடைய வக்தையும்,நோன்பு திறக்கும் நேரத்தையும் கடிகாரத்தை நேரத்தை வைத்து முடிவெடுப்பதேன்விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைகளை செயல்படுத்தாமல் புறக்கணிப்பதேன்?

 

22.    பிறையை புறக்கண்களால் பார்க்காது கணக்கீடு செய்வது சுன்னாவிற்கு மாற்றமாகும் என்றும் சுன்னாவிற்கு மாற்றமாக செயல்பட்டால் 'குஃப்ரு' என்றும் தற்போது கூறிகின்றனர். அப்படியானால் சர்வதேசஃசவுதிதேசப் பிறை கருத்துடைய ஒரு இயக்கத்தின் முன்னால் தலைவர் ஸஹருடைய இரண்டாம் பாங்கு தேவையில்லைஅது குழப்பம் விளைவிக்கும் என்று சொன்னது மட்டும் 'குஃப்ருஆகாதா?

 

23.     பிறை பார்த்தவர்கள் அதை என்னிடம் கூறவேண்டும்நான் தான் பிறையை அறிவிப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் என்றாவது கட்டளையிட்டார்களாஅவ்வாறு ஆணையிட்டார்கள் என்றால் அவ்வாறு இட்ட கட்டளை ஹதீஸ்களில் எங்கே உள்ளதுஅப்படி ஏதுமில்லை என்றால் நபி (ஸல்) அவர்களே அறிவிக்காத பிறைத் தகவலை அறிவிப்பதற்கு ஜமாஅத் தலைவர்களுக்கோஇயக்கத் தலைவர்களுக்கோ என்ன உரிமை இருக்கிறதுஅந்த உரிமையைக் கொடுத்தது யார்?

 

24. 'லா நக்துபுவலா நஹ்ஸிபுஎன்று வரும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு'நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதும் கூடாது,  எண்ணுவதும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள்' என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த ஹதீஸை 'பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்துவிட்டார்கள்மொழி பெயர்ப்பது எப்படிஇது சரியான மொழிபெயர்ப்புதானாஏந்த அரபு இலக்கண இலக்கிய விதிப்படி அவ்வாறு மொழிபெயர்த்தார்கள்அல்லது விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை அமைத்திட உதவும் வானியல் பௌதீகம் (Astrophysics) என்னும் விண்ணியில் அறிவை அந்தகால சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பொருள் கொள்வது எந்த விதத்தில் தவறுனாதாகும்

 

25.    மாற்றுக் கருத்துடையோர் கூறுவது போல் 'லா நக்துபுவலா நஹ்ஸிபு' என்பதற்குக் கணக்கிடுவதும் கூடாது,எழுதுவதும் கூடாது என மொழி பெயர்த்தால்முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுதும் முறைகளும்கணக்கிடுதலும் ஹராம் என்ற நிலை ஏற்படும். மேலும்  நபித் தோழர்களிடமிருந்து செய்திகளை தாபிஈயீன்கள் பெற்றது முதல் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரையும் உறுதிப்படுத்துவது உட்பட இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்திடும் ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீடுகளும் ஹராம் என்று மறுக்கப்பட வேண்டிய கணக்குகளாஇவற்றை மாற்றுக் கருத்துடையோர் சிந்திக்க மறுப்பதேன்

 

26.  நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழல்களின் அளவுகளைக் கொண்டு முடிவு செய்தார்கள். இன்று தொழுகை நேரம் என்று கூறி நேரக்கணக்கு பட்டியலை நடை முறைப் படுத்துவது ஹராமில்லையாகணக்கிடமாட்டோம் என்ற கூற்றிற்கு முரணானது இல்லையாஇதுபோன்ற தொழுகை நேரக் கணக்கை முன்கூட்டியே கணக்கிட்டு அட்டவணையிட்டு அதைப் பார்த்து நபி(ஸல்) தொழுதார்கள் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தையாவது மேற்படி சர்வதேசப் பிறையினரால் எடுத்துக் காட்டிட முடியுமாஇதுபோன்று நபி (ஸல்) அவர்கள் சுன்னத்தாகக் கூறி நடை முறைப்படுத்திக் காட்டாத செயல்களை மார்க்கத்தின் பெயரால் செய்வது குற்றமாகாதா என்று அவர்கள் பாணியிலேயே கேட்க விரும்புகிறோம்.

 

27. சர்வதேசப் பிறைக் கருத்துடையோர் இதுவரை சவூதி அல்லாத வேறு நாடுகளிலிருந்து 30-வது நாளின் மஃரிபில் பிறைப் பார்த்த தகவலை தங்களுக்கு அளித்தவர்கள் யார்யார்என்று அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்களாநாங்கள் சவூதி அரேபியாவின் தகவலைத்தான் பின்பற்றுகின்றோம் என அவர்கள் கூறுவார்களேயானால் சவூதியில் பிறைப்பார்த்து இவர்களுக்குத் தகவல் கொடுத்த நபர்களின் பட்டியலையாவது அவர்களின் முகவரியுடன் வெளியிட இயலுமாவெறுமனே சவுதி அரபியாவின் தொலைக் காட்சியைப் பார்த்துவிட்டு அறிவிக்கும் இவர்களின் பிறை நிலைப்பாடு சர்வதேச பிறை நிலைப்பாடாசவுதி தேச பிறை நிலைப்பாடா?

இப்படி பல்வேறு கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பது தொடர்பாக 'விடையே இல்லாத வினாக்களா இவை?' என்ற தலைப்பிட்டு சில பொதுவான கேள்விகளை முன்னரே நாம் கேட்டுள்ளோம் (பார்க்க : www.mooncalendar.in)அக்கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையவர்கள் உட்பட எந்தப் பிறை நிலைப்பாட்டினரும் முறையான விடைகளை இதுவரை அளிக்கவில்லை.

மேற்கண்ட கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையோரால் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவான,ஆதாரப்பூர்வமான பதிலைத் தர இயலாது என்பதை மக்களும் தெரிந்தே வைத்துள்ளனர். காரணம் சர்வதேசப்பிறை அல்லது சவுதிதேசப்பிறை என்ற பிறை நிலைப்பாடுகளுக்கு மார்க்க ஆதாரமில்லை. அந்நிலைப்பாடுகள் அறிவுப்பூர்வமானதாகவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 

எனவே நபி (ஸல்) அவர்கள் புறக்கண்களால் மட்டும்தான் பிறந்த பிறையை பார்க்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை. பிறைகளைக் கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை தடை செய்யவில்லை. பிறைகளைத் துல்லியமாக்க கணக்கிடுவதற்கு மார்க்கம் வலியுறுத்துகிறதுகட்டளையிடுகிறது என்பதை மிகமிகத் தெளிவாக அறிந்து கொண்டோம் – அல்ஹம்துலில்லாஹ். எனவே பிறை குழப்பத்திற்கு மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றுவதுதான் என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறோம். ரமழான்பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்கிறோம்.

Read 1311 times Last modified on புதன்கிழமை, 29 ஜூன் 2016 10:04