ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்
அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4
இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டுஉருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள்
அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் மற்ற மார்க்கங்களை விட மேலோங்கி விடக் கூடாது என்பதிலும், அல்குர்ஆனின் வழிகாட்டல்படி முஸ்லிம்கள் சந்திர நாட்காட்டியை தயாரித்து உலகை வழிநடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் நேர்த்தியான பல சதித்திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. இஸ்லாத்தை எதிர்த்தும் வெறுத்தும் வரும் அத்தீய சக்திகளின் செயல்பாடுகளை நமது முஸ்லிம் உம்மத் இந்த நவீன யுகத்தில்கூட உணராமல் வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனை.
முஸ்லிம்களாகிய நாம் ஐவேளை பர்ளான தொழுகை உட்பட, மீண்டும் மீண்டும் ஓதுகின்ற 'சூரத்துல் ஃபாத்திஹா' என்ற அல்ஹம்து சூராவில், வல்ல அல்லாஹ் யாரிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி அவனிடம் பிராத்திக்குமாறு கற்பித்துள்ளான் என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டுகிறோம். இதை சிந்தித்தாலே அந்த சதிகார சக்திகள் புரிகின்ற சூழ்ச்சிகளின் ஆழத்தையும், அகலத்தையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். நம் முஸ்லிம் சமுதாயத்தில் கணிசமானோர் குர்ஆனை ரசித்து ஓதுகின்றனர். குர்ஆனை சிந்தித்து படிப்பதை புறந்தள்ளி விட்டதின் விளைவுதான் நமது சமுதாயம் அறிவியல் ரீதியான விஷயங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.
கிழமைகள் மாறும் உலகத்தேதிக்கோடு பகுதியை ஒரு நாளின் ஆரம்பமாகவும், அந்தநாளின் முடிவுப் பகுதியாகவும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தோம். அங்குதான் ZERO (சைபர்) டிகிரி என ஆரம்பித்து 360 டிகிரி என்று பூமி தனது ஒரு சுற்றை முடிக்கிறது. எனவேதான் அந்த பகுதி உலகத் தேதிக்கோடு அல்லது சர்வதேசத் தேதிக்கோடு (International Dateline-IDL) பகுதி எனக் குறிப்பிடப்படுகின்றது.
இன்று இஸ்லாத்தை எதிர்ப்போர் அதில் பல குழப்பங்களை விளைவித்துள்ளனர். உலகத் தேதிக்கோடு முஸ்லிம்களால்தான் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பதையும், முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே கிழமை மாற்றம் நடைபெறுவதையும் மறைத்து வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டனர்.
கடந்த 1995 ஆம் ஆண்டு வாக்கில் சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகளில் (Kiribati Islands) சிலவற்றை சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி கிழக்குப்பகுதிக்கு முன்னதாக செல்லும்படி மாற்றியமைக்கப்பட்டது. காரணம் கடந்த 2000 ஆம் ஆண்டு (Millennium) துவக்க நாளின் சூரியன் எங்கள் நாட்டில்தான் முதலில் உதிக்கிறது என்று கூறி சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்கான நடவடிக்கையாம். இந்த பெயரில் கிரிபாட்டி தீவுகளை 24 மணிநேரங்கள் அளவுள்ள (ஒருநாள்) வித்தியாசத்தில் இடமாற்றம் செய்து விட்டனர்.
இதனால் பிற மதத்தினர்களுக்கு வழிபாட்ட ரீதியான பாதிப்புகள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகள் இருக்கின்றன. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜூம்ஆ தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பத்திற்கு யார் காரணம்? தீர்வு என்ன? என்பதைக் கூட சித்திக்காமல் இந்த முஸ்லிம் உம்மத் பராமுகமாகவே உள்ளது.
மேலும் அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இட்ட பல கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாற்றமாக, இஸ்லாத்தை வெறுப்போர் கிரிகோரியன் நாட்காட்டி என்ற ஒன்றை தயாரித்து அதில் பல குளறுபடிகளைச் செய்துள்ளனர். மாதங்களிலும், நாட்களிலும் பல இடைச் செறுகல்களை ஏற்படுத்தியுள்ளனர். அந்த கிரிகோரியன் நாட்காட்டிதான் மிகச் சரியான நாட்காட்டி என்பதாக பிரச்சாரமும் செய்துள்ளனர். அவர்களுடைய நாட்காட்டிக்கு முஸ்லிம்களையும், முழு உலக மக்களையும் நம்பவைத்து அடிமைகளாக ஆக்கிவிட்டனர்.
இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட இஸ்லாமிய நாட்காட்டியை இஸ்லாமிய சமுதாயம் முழுமையாக புறக்கணிக்கும்படி திட்டம் தீட்டி செயல்படவும் வைத்து விட்டனர் - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
இன்னும் 'நுஜூமிய்யா' என்ற நட்சத்திரக் கணக்கை நமது மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் மாற்றுக் கருத்தின்றி ஏற்றுக் கொள்கின்றனர். அந்த 'நுஜூமிய்யா' என்ற நட்சத்திரக் கணக்கின் அடிப்படையில் உறுவாக்கப்பட்டதே கிரிகோரியன் நாட்காட்டி. இதை இறையருளால் மக்கள் மத்தியில் நாம் தெள்ளத் தெளிவாக நிரூபித்து வருகிறோம்.
ஆக அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்குமாற்றமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தகிரிகோரியன் நாட்காட்டிக்கு எதிராகப்போர்ப் பிரகடனம் செய்யவேண்டிய இஸ்லாமியஅறிஞர்கள் இதைக் கண்டு கொள்ளாமல்விட்டுவிட்டு, அல்லாஹ்வின் அத்தாட்சியானஹிஜ்ரி நாட்காட்டியை ஒன்றுசேர்ந்துஎதிர்க்கிறார்கள் என்றால் இதை எங்கேபோய்சொல்வது? இன்னும் பிறந்த பிறையை மஃரிபுவேளையில் மேற்கு திசையில் அது மறையும்நேரத்தில் புறக்கண்களால் பார்த்த பின்னரேஅடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ள வேண்டும்என்று நம்பியுள்ள அறிஞர் பெருமக்களைவைத்துக் கொண்டு அல்லாஹ்வின் நாட்காட்டியைஇந்த முஸ்லிம் உம்மத்தில் எப்படி நிலைநிறுத்தப் போகிறோம்?
உண்மையில் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம். அவ்வாறு சூரியன் 90 டிகிரி கோணத்தில் உலகத் தேதிக்கோட்டிற்கு உச்சத்தில் வரும்போது நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கிப்லாவில் (கஃபாவில்), பழைய கிழமை மாற்றப்பட்டு புதிய கிழமை குறிக்கப்பட வேண்டும். நாள் மாறும்போது கிழமையும் மாறவேண்டும். இந்நிகழ்வு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி தினமும் மாறிக்கொண்டிருக்கும் கிழமைகளுக்கான தேதிகளை சந்திரனின் படித்தரங்கள் அறிவித்துக் கொண்டே இருக்கும்.
உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் இருக்கும்போது, தற்போது உலகில் பயன்படுத்தப்படும் கடிகார நேர அளவுப்படி இந்தியா உள்நாட்டு நேரம் (IST-India Standard Time) அதிகாலை 5:30 மணியிலும், சவூதி அரேபியா உள்நாட்டு நேரம் (AST-Arabia Standard Time) நள்ளிpரவு (தஹஜ்ஜத்) 3.00 மணியிலும் இருக்கும். அது போல் உலகில் ஒவ்வொரு பகுதியும் உள்நாட்டு நேரங்களின்படி ஒவ்வொரு நேர அளவில் இருக்கும்.
இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக (Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் இருக்கும் போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி, அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும் கிழமையையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம்.
இவ்வுலகத்தின் பெரும் பகுதியை தனது காலனி (அடிமை) ஆதிக்கத்திற்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாட்சியைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும்போது 'சூரியன் மறையாதஅரசாட்சி' என்பர். அந்தளவு இப்பூமியில் பெரும் பரப்பளவு நிலத்தை ஆண்டவர்களே பிரிட்டிஷார் என்னும் ஆங்கிலேயர்கள். அவர்கள் தங்களது நாட்டிலுள்ள கிரீன்விச் (Greenwich) நகரை மையமாக (கிப்லாவாக)க் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியை, தங்கள் ஆதிக்கத்திலுள்ள அத்தகைய நாடுகளில் மிக எளிதாகத் திணித்து விட்டனர்.
இஸ்லாம் காட்டித்தந்த நாட்காட்டி முறைகளை ஆய்வு செய்து அதற்கு எதிராக அவர்கள் கிரிகோரியன் காலண்டர் என்ற கற்பனை நாட்காட்டியை தயாரித்து உலகை ஏமாற்றியதோடு அல்லாமல், அவர்களுடைய கிப்லாவை உலகில் உள்ள அனைவரும் பின்பற்றும்படி செய்துவிட்டதின் சூழ்ச்சிகளை நம்மில் எத்தனை பேர் ஆராய்ந்து அறிந்து உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்?
நஸராக்களின் கிப்லாவை உலகமே பின்பற்றி அவரவர்கள் தத்தமது நாடுகளில் இரவு 12 மணிக்கு ஒவ்வொரு நாளும் கிழமையையும், தேதியையும் மாற்றி வருகின்றார்கள். உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் வரும் போது இந்தியாவின் பகுதி அதிகாலை 5:30 மணியாக இருக்கும். ஆனால் இந்தியாவில் வசிப்பவர்களின் கடிகாரங்கள் அனைத்தும் 5.30 மணிநேரத்திற்கு முன்னதாவே (இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்ப்போர் உறுவாக்கியுள்ள கிப்லாவின் நேரத்தைப் பின்பற்றி) இந்திய நேரம் இரவு 12 மணிக்கே தேதி மாறிவிடுகிறது. இதை நம்மில் எத்தனைபேர் உணர்ந்துள்ளனர்?
உலகில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும் நஸராக்களின் கிப்லாவின் படி எவ்வாறு மாற்றுகின்றார்கள் என்பதை கீழே பதிந்துள்ள இந்த அட்டவணையில் பார்க்கலாம்.
உதாரணமாக UTC +13 என குறிக்கப்பட்டால் உலகத் தேதிக்கோட்டு பகுதி 90 டிகிரியில் சூரியன் உச்சியில் வரும் நேரத்தில் கீரின்விச் பகுதி மட்டும் இரவு 12 மணியாக இருந்தாலும், நஸராக்களின் கிப்லாவை பின்பற்றுபவர்கள் எத்தனை மணி நேரத்திற்கு முன்பாகவே அந்தக் கிழமையையும் தேதியையும் மாற்ற வேண்டும் என்பதைத்தான் UTC +13 என்பது குறிக்கின்றது. அவர்களுக்கு உண்மையில் தேதி மாறவேண்டிய நேரத்திற்கு 13 மணிநேரங்கள் முன்னதாகவே தேதியை மாற்றி அந்த நாளுக்குள் நுழைந்து நஸராக்;களின் கிப்லாவை பின்பற்ற வேண்டும் என்பதே இந்த தேதிமாற்றத்தின் அடிப்படையாகும்.
UTC ( ) Sunday, 25 August 2013, 00:00:00 UTC
Nukualofa (Tonga) Sunday, 25 August 2013, 13:00:00 UTC+13 hours
Wellington (New Zealand) Sunday, 25 August 2013, 12:00:00 NZST UTC+12 hours
Kingston (Norfolk Island) Sunday, 25 August 2013, 11:30:00 NFT UTC+11:30 hours
Port Vila (Vanuatu) Sunday, 25 August 2013, 11:00:00 VUT UTC+11 hours
Canberra (Australia) Sunday, 25 August 2013, 10:00:00 AEST UTC+10 hours
Tokyo (Japan) Sunday, 25 August 2013, 09:00:00 JST UTC+9 hours
Singapore (Singapore) Sunday, 25 August 2013, 08:00:00 SGT UTC+8 hours
Bangkok (Thailand) Sunday, 25 August 2013, 07:00:00 ICT UTC+7 hours
Naypyidaw (Myanmar) Sunday, 25 August 2013, 06:30:00 MMT UTC+6:30 hours
Dhaka (Bangladesh) Sunday, 25 August 2013, 06:00:00 BST UTC+6 hours
Kathmandu (Nepal) Sunday, 25 August 2013, 05:45:00 NPT UTC+5:45 hours
New Delhi (India - Delhi) Sunday, 25 August 2013, 05:30:00 IST UTC+5:30 hours
Islamabad (Pakistan) Sunday, 25 August 2013, 05:00:00 PKT UTC+5 hours
Kabul (Afghanistan) Sunday, 25 August 2013, 04:30:00 AFT UTC+4:30 hours
Moscow (Russia) Sunday, 25 August 2013, 04:00:00 MSK UTC+4 hours
Tehran (Iran) Sunday, 25 August 2013, 04:30:00 IRDT UTC+4:30 hours
Riyadh (Saudi Arabia) Sunday, 25 August 2013, 03:00:00 AST UTC+3 hours
Makkah (Saudi Arabia) Sunday, 25 August 2013, 03:00:00 AST UTC+3 hours Kigali (Rwanda) Sunday, 25 August 2013, 02:00:00 CAT UTC+2 hours
Porto Novo (Benin) Sunday, 25 August 2013, 01:00:00 WAT UTC+1 hour
Reykjavik (Iceland) Sunday, 25 August 2013, 00:00:00 GMT UTC
Praia (Cape Verde) Saturday, 24 August 2013, 23:00:00 CVT UTC-1 hour
Paramaribo (Suriname) Saturday, 24 August 2013, 21:00:00 SRT UTC-3 hours
Willemstad (Curaçao) Saturday, 24 August 2013, 20:00:00 AST UTC-4 hours
Caracas (Venezuela) Saturday, 24 August 2013, 19:30:00 VET UTC-4:30 hours
Quito (Ecuador) Saturday, 24 August 2013, 19:00:00 ECT UTC-5 hours
Tegucigalpa (Honduras) Saturday, 24 August 2013, 18:00:00 CST UTC-6 hours
Adamstown (Pitcairn Islands) Saturday, 24 August 2013, 16:00:00 PST UTC-8 hours
Papeete (France - Tahiti) Saturday, 24 August 2013, 14:00:00 TAHT UTC-10 hours
Pago Pago (American Samoa) Saturday, 24 August 2013, 13:00:00 SST UTC-11 hours
எனவே அல்லாஹ் வலியுறுத்திய சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரியில் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு கிப்லாவாக ஆக்கித் தந்த கஃபா எந்த நேரத்தில் இருக்கின்றதோ அந்த நேரத்தில் அவர்களுடைய தேதியையும் கிழமையும் மாற்றி புதிய நாளுக்குள் நுழைந்து அல்குர்ஆன் (2:143) வசனம் கூறுவது போல் நபியைப் பின்பற்ற வேண்டும்.
உலகத் தேதிக்கோட்டுப் பகுதிக்கும், கிப்லாவாக (Meridian) நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்கும் இடைப்பட்ட நேர வித்தியாசத்தின் அளவைக் கொண்டு மட்டுமே தேதிகளையும் கிழமைகளையும் மக்கள் முன்கூட்டியே சென்று மாற்ற முடியும். மேற்குறிப்பிட்ட அந்த நேர வித்தியாசத்தை தாண்டி அதற்கும் கூடுதலான நேர வித்தியாசத்துடன் உலகின் உள்ள பகுதிகள் முன்கூட்டியே தேதியையும் கிழமையும் மாற்றிச் சென்றால் அவர்களுடைய நாட்காட்டியின் அடிப்படையே பிழையானதாகும்.
மேலும் இதேபோல் புவிமைய சங்கமம் ஏற்படும் தினத்திலும் உலகத் தேதிக்கோட்டு பகுதிக்கும் கிப்லாவாக (Meridian) நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்கும் இடைப்பட்ட நேர வித்தியாசத்தின் அளவுள்ள பகுதிகள் மட்டுமே இஸ்லாம் கூறும் நாட்காட்டியின் தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த நாளிற்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட ஒன்றாகும். அதைத்தான் அல்குர்ஆனின் 2:189, 2:143 வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு அனுமதி அளித்துள்ளான்.
புவிமைய சங்கமம் உலகநேரம் (UT) 16 மணிக்குமேல் நடந்தாலும், அல்லது அது 23.59 மணிநேரம் வரை நடந்தாலும் கூட, கிழக்கத்தியநாடுகளில் சில அடுத்த நாளைக்குள்சென்றுவிடும் என்ற நிலையில்கூடநமதுகிப்லாவான (Meridian) கஃபாவும், அதைத்தாண்டிய மேற்குப் பகுதியில் அமைந்த எந்தநாடுகளும் அவ்வாறு முற்கூட்டியே அடுத்தநாளைக்குள் விடிந்திடாத வண்ணம் அல்லாஹ்இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைதுல்லியமானதாகவும், தவறுகளிலிருந்துஅப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் -ஸூப்ஹானல்லாஹ். அந்த அல்லாஹ்வின்அத்தாட்சிகளில் ஒன்றான இந்த ஹிஜ்ரிநாட்காட்டியை எதிர்க்கும் மாற்றுக்கருத்துடையவர்கள் இவற்றை சிந்தித்துசீர்தூக்கி பார்க்க வேண்டுகிறோம்.
உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் நண்பகலில் சூரியன் 90 டிகிரியில் உச்சத்தில் வரும்போதுதான் கிழமை மாற்றம் (Astronomical Day Change) நடைபெறுகிறது. இதைத்தான் நமது ஜூம்ஆ தொழுகையை வைத்து வியாழன், வெள்ளி என்ற இரு கிழமைகளை இஸ்லாம் பிரித்தறிவிப்பதை முன்னர் கண்டோம். இந்தக் கணக்கீட்டை புரிந்து கொள்ளவதும் எளிதானதே.
அதாவது ஒரு வட்டத்திற்கு 360 டிகிரிகள் இருக்கிறது என்பது இன்றைய பாலர் பாடம். உருண்டை வடிவமான பூமி தனது அச்சில் தன்னைத்தானே ஒரு முறை சுற்றுவதை 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாள் என்கிறோம். சர்வதேசத் தேதிக் கோட்டை ஆரம்பப் புள்ளியாக வைத்து (ZERO டிகிரியாக வைத்து) பூமியின் 360 டிகிரி கோணத்தை 24 மணி நேரங்களைக் கொண்டு வகுத்தால், பூமியானது ஒரு மணிநேரத்திற்கு எத்தனை டிகிரிகள் சுற்றும் என்பதை கணக்கிட முடியும். இதன் மூலம் பூமியானது ஒரு மணி நேரத்திற்கு (360 Degree / 24 Hours = 15) 15 டிகிரிகள் சுற்றுகிறது என்பதை துல்லியமாக அறியலாம்.
சவுதி அரேபியா நாடு உலகத் தேதிக் கோட்டிலிருந்து உலகநேரம் 9-வது மணி நேரத்தில் இருக்கிறது என்று கூறுவதும் (9 x 15 Degree = 135 Degree), 135 டிகிரிகள் தூர அளவில் உள்ளது என்று கூறுவதும் ஒன்றுதான். ஒரு மணிக்கு 15 டிகிரிகள் அளவில் பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று கணக்கீட்டின் படி 135 டிகிரி என்பது (135 Degree / 15 Degree = 9) 9 மணி நேரங்களைக் குறிக்கும். இதுபோல உலகநேரம் 7:00 மணியில் இருக்கும் இந்தியா 105 டிகிரி தூரத்திலும், 12 மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் லண்டன் கிரீன்விச் 180 டிகிரி தூரத்திலும் அமைந்துள்ளதை அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு நாட்டின் உலக நேரத்தை வைத்து அந்நாடு எத்தனையாவது டிகிரியில் உள்ளது என்பதைக் கணக்கிடலாம்.
மேற்படி விளக்கம் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியை ஆரம்பப் புள்ளியாக (ZERO டிகிரியாக) வைத்து 24 மணி நேரங்களைக் கொண்ட பூமியின் சுழற்சியை சூரியனின் கோண விகிதத்தை வைத்து அறிந்து கொள்வதற்காக விளக்கப்பட்டவையே.
இந்த முறையைத்தான் அப்படியே மாற்றி அமைத்து 180 டிகிரி தூரத்திலுள்ள லண்டன் கிரீன்விச் பகுதியை ஆரம்பப் புள்ளியாக (ZERO டிகிரியாக) வைத்து பூமியின் 360 டிகிரி கோணத்தையும் அந்த லண்டன் கிரீன்விச் பகுதிக்கு கிழக்காக 180 டிகிரிகளும், அதற்கு மேற்காக 180 டிகிரிகளுமாகப் பிரித்துள்ளனர். அதாவது 24 மணி நேரங்களைக் கொண்ட பூமியின் ஒருநாள் கணக்கை 12 மணி நேரங்கள் கிழக்கிலும், 12 மணிநேரங்கள் மேற்கிலுமாக இரவு பகலை அறிவிக்கிறோம் என்ற பெயரில் (GMT - Greenwich Mean Time) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் கிழக்குத் திசையின் துவக்கத்தில் உள்ள உலகத் தேதிக் கோட்டுப் பகுதியானது (180 Degree East) 180 டிகிரி கிழக்கு என்று அடையாளப் படுத்தப்படுகிறது. அவைபற்றிய முழு விபரங்களையும் வேறுறொரு சந்தர்ப்பத்தில் தெளிவாக விளக்குவோம் - இன்ஷா அல்லாஹ்.
180 டிகிரி கிழக்கிலுள்ளதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உலகத் தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியன் அதன் உச்சியில் (அதாவது அங்குள்ளவர்களின் தலைக்கு மேல்) 90 டிகிரியில் வரும் போது அதற்கு எதிர் திசையில் இருக்கும் லண்டன் கிரீன்விச் பகுதி 12 மணிநேர வித்தியாசத்தில் இருக்கும். எனவே லண்டன் கிரீன்விச் பகுதிகளுக்கு சூரியனின் வெளிச்சம் 100 சதவிகிதம் விழாமல் மறைக்கப்படுவதால் இருள் சூழ்ந்து நடுநிசி இரவு நேரம் 12 மணியில் இருக்கும். சர்வதேசக் கோட்டிற்கும் லண்டன் கிரீன்விச் பகுதிக்கும் இடைப்பட்ட நேர அளவு 180 டிகிரி தூரம் என்பது தற்போதைய நேர அளவுப்படி 12 மணி நேரங்கள் என்பதை நாம் சற்றுமுன் விளக்கிய கணக்கீட்டின்படி புரிந்து கொள்ளலாம்.
எனவே நஸராக்களின் கிப்லாவான கிரீன்விச்சின் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பின்பற்றுபவர்கள் அதிகபட்சம் 12 மணிநேரத்திற்கு முன்னதாகவே மட்டும் புதிய நாளுக்குள் நுழைய முடியும். ஆனால் தற்போது 14 மணிநேரத்திற்கு முன்னதாக நுழைந்து (அதாவது கிரீன்விச்சிலிருந்து 2 மணி நேரங்கள் மேற்கே இருக்கும் நாடுகளையும் இணைத்து) அவர்களே அவர்களுடைய நாட்காட்டி விதிகளை மீறி நடந்து கொள்ளும் நாடுகளையும் நாம் காணலாம்.
அதே நேரத்தில் நமது ஹிஜ்ரி நாட்காட்டி துல்லியமானது என்பதற்கு அத்தாட்சியாக 180 டிகிரி கிழக்கிலுள்ளதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உலகத் தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியன் அதன் உச்சியில் (அதாவது அங்குள்ளவர்களின் தலைக்கு மேல்) நண்பகல் 90 டிகிரியில் வரும் போது நமது கிப்லாவான மக்காவிலுள்ள கஃபாவின் பகுதிகள் 03:00 மணி நேரஅளவில் அதாவது தஹ்ஹஜ்ஜத் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரத்தை நெருங்கியிருக்கும்.
எனவே அல்குர்ஆனின் போதனைகளின் படியும், நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதல் படியும் நமது கிப்லாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட ஒரு கிழமையை தினமும் ஃபஜ்ரு நேரத்திலிருந்தே ஆரம்பித்து நபி(ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் 2:143 வசனம் கூறுவது போல் சாட்சியாக இருந்தே ஆக வேண்டும். உலகத்தேதிக் கோட்டிலிருந்து 9-வது மணி நேரத்தில் நமது கிப்லா அமைந்துள்ளதால் மக்காவின் பகுதிகள் உலகநேரம் 9 HOURS (UT) என்று குறிப்பிடப்படுவதை அறிந்து கொண்டோம். அதுபோல லண்டன் கிரீன்விச் கிறிஸ்துவ கிப்லாவை அடிப்படையில் தேதியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறிக்கப்பட்ட +3 HOURS (GMT) என்று சவதிஅரேபியா நாடு குறிப்பிடப்படுகிறது. இந்த இரு வகையான நேர அளவுகளை இங்கு நினைவு கொள்ள வேண்டுகிறோம்.
மேற்கூறப்பட்ட இந்த அடிப்படைகள்தான் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்குரிய பதிலாகும். தற்போது பூமியில் உலக நேரம் 16 மணி நேரம் வரை புவிமைய சங்கமம் நிகழும் போது கிழக்குப் பகுதி நாடுகள் முந்திச் சென்று புதிய கிழமைக்குள் நுழைய மாட்டார்கள். அதன் பின் உள்ள 8 நேர வித்தியாசம் உள்ள பகுதியில் (அதாவது உலகநேரம் 16+UT to 23.59UT) புவிமையசங்கமம் நிகழ்ந்தால் மட்டும் புவிமைய சங்கமம் நிகழும் முன்பாக கிழக்குப் பகுதி மக்கள் புதிய கிழமைக்குள் நுழைந்திருப்பார்கள். அதிகப்பட்சம் 8 நேரத்திற்குள்ளே உள்ள பகுதி மக்கள் மட்டுமே முன்கூட்டியே நாளை ஆரம்பிக்கின்றார்கள். நமது கிப்லாவான கஃபா உலக நேரம் 9-வது மணிநேர அளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அது நாட்காட்டியின் அடிப்படையை மீறிய செயல் அல்ல என்பதை தற்போது புரிந்திருப்பீர்கள்.
நபிக்கு சாட்சி சொல்பவர்களாக இருந்தால், தினமும் நமது கிப்லாவான கஃபாவில் ஒரு நாள் துவங்குவதற்கு சுமார் 8 மணிநேரம் முன்பாக கிழக்கத்திய நாட்டு மக்கள் தங்களது கிழமையைத் துவங்குவது போலவே புவிமைய சங்கம தினத்திலும் அவர்கள் அந்த நாளைத் துவங்க வேண்டும். அந்த புவிமைய சங்கமம் உலகநேரம்; 16 முதல் 23.59 வரை நிகழ்ந்தாலும் சரியே இதுதான் இஸ்லாம் வலியுறுத்துவதாகும்.
தினமும் கஃபாவான நமது கிப்லா பகுதியில் உள்ளவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுவதற்கு 8 மணிநேரம் முன்பாகவே உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்கள் அதே கிழமையின் ஃபஜ்ர் தொழுகையை அவர்களுக்கு கிழமை மாறுவதற்கு 8 மணிநேரங்கள் இருந்தும் அல்குர்அன் 2:143 வசனத்தில் அடிப்படையில் நபிக்கு சாட்சியாக ஆகுவதற்காக முன்கூட்டியே மாற்றி வருகின்றார்கள். அறிந்தோ அறியாமலோ இந்த நற்காரியத்தை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாம் அனைத்து சிந்தாந்தங்களையும் மிகைத்துவிடும் என்பதற்கு இதுவும் சிறந்த சான்றாகும்.
மேலும் 2:189 வசனத்தில், பிறைகளைப்பற்றி நபியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக முன்வாசல் வழியாக நுழைந்து செல்லுங்கள் என இந்த 8 மணிநேர மக்களையும் பார்த்து சொல்வது போல் அந்த வசனம் அமைந்ததையும் யாரும் மறுக்க முடியாது. மேலும் (அல்குர்ஆன் 2:185) யார் அம்மாதத்தை அடைகின்றாறோ அவர் புவிமைய சங்கமம் நிகழும் முன்பாகவே நோன்பு வைத்து மாதத்தை அடைய வேண்டும் என்பதையும் நாம் சிந்தித்தாலே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள்தான் என்பதும் நிரூபனமாகும்.
அல்குர்ஆனின் வழிகாட்டல்படி பிறைகளின் படித்தரங்களின் அடிப்படையில் அமைந்த ஹிஜ்ரி நாட்காட்டியில் இத்தனை அரிய விஷயங்கள் பொற்குவியல் பொக்கிஷம்போல பொதிந்துள்ளன. இந்நிலையில், அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான இந்த ஹிஜ்ரி சந்திர நாட்காட்டியை எதிர்க்க வேண்டும் என்ற நிலைபாட்டை கையில் எடுத்துக்கொண்டு பிறந்த பிறையை மஃரிபு வேளையில் மேற்கு திசையில் அது மறையும் நேரத்தில் புறக்கண்களால் பார்த்து பின்னரே அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்படி ஞானமில்லாமல் பிரச்சாரம் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களை என்னவென்று சொல்வது? என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
ஆக இத்தலைப்பின் கீழ் இதுவரை படித்தவிளக்கங்களை சுருக்கம் என்னவென்றால்...
அ)முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே ஒவ்வொரு நாளும் கிழமை மாற்றம் நடைபெறுகிறது. இச்செய்தி வரலாறுகளில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.
ஆ) சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் குழப்பம் விளைவித்து அதன் எல்கையில் மாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்றுள்ளது.
இ) சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகளில் (Kiribati Islands) சிலவற்றை 24 மணிநேர (ஒருநாள்) அளவு வித்தியாசத்தில் முன் செல்லுமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜூம்ஆ தொழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈ)இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி, முழு உலக மக்களையும் தங்கள் நாட்காட்டியில் இரவு 12 மணிக்கு தேதியையும் கிழமையையும் மாற்றும்படி அமைத்து விட்டனர்.
உ)முஸ்லிம்களாகிய நாம் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல் படி நமது கிப்லாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கிழமையையும் 'ஃபஜ்ரு' நேரத்திலிருந்தே ஆரம்பித்து நபி(ஸல்) அவர்களுக்கு சாட்சி பகர வேண்டும்.
ஊ)இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக கிரிகோரியன் நாட்காட்டி என்ற ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் பல்வேறு குளறுபடிகளையும் செய்துள்ளனர்.
எ)அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர்.
ஏ) அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைத் துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ்.
ஐ)அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாக தயாரிக்கப்பட்டுள்ள கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியனின் நாட்காட்டிக்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிமும் போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்.
ஒ)மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த மேற்படி கிரிகோரியன் நாட்காட்டியை நம் முஸ்லிம் சமுதாயம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
எனவே இதுவரை நாம் விளக்கியுள்ள அனைத்து விஷயங்களை நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறோம். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக தவறான தத்துவங்களைக்கூறி எதிர்ப்பது மிகவும் தவறானது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
அல்லாஹ்வே மிக விளங்கியவன்.