வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 00:00

முஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்

Rate this item
(0 votes)

முஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21

 அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே,

ரமழான் மாதத்திற்க்கான conjunction(நேர்கோடு) நடந்த இடம் ஆப்பிரிக்காவின் பகுதியில் சுமார் 1002HRS(UT) நடந்தது.இப்பொழுது என்னுடைய கேள்வி என்னவென்றால்,

Conjunction (நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும் .நேர்கோடு வந்த் இடத்திற்கு அப்புறம் உள்ள பகுதிகள் தானே முதலில் தொடங்க வேண்டும்.இது சரியா?

அன்புடன்.

முஹம்மத்.

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் பெருமையும், அவனுடைய தூதர் மீது அல்லாஹ்வின் அருளையும் பிரார்த்தித்து என்னுடைய எழுத்தை துவக்குகின்றேன்.

சகோதரர் முகமது சஃபீக் அவர்களுக்கு

தங்கள் சிறப்பான ஒரு கேள்வியை கேட்டள்ளீர்கள். இதன் மூலம் தாங்கள் இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டி முறையை புரிந்து கொண்ட ஒரு சகோதரர் என நினைக்கிறேன்.

நேர்கோட்டில் சூரியன் சந்திரன் பூமி வந்ததன் பிறகு சந்திரன் புதிய சுற்றை துவங்குகிறது.

திருக்குர்ஆனில் கூறுவது போல் “55:17 இரு கிழக்கு திசைக்கும் இறைவன் அவனே இரு மேற்கு திசைக்கும் இறைவன் அவனே.

இந்த வசனத்திலிருந்து இரண்டு கிழக்கு திசைகள் இரண்டு மேற்கு திசைகள் உள்ள ஒரு பகுதி உலகில் உள்ளது எனபதும் அல்லாஹ் கூறுவதை நினைவில் வைக்கவும்.

தற்போது நான் உங்களுடைய கேள்விக்கு வருகிறேன்.

//Conjunction (நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும்//

சந்திரன் தன்னுடைய மன்ஸில்கள் மூலம் ஒரு தேதியை அறிவிக்கும் போது இரண்டு திகதிகள் இரண்டு கிழமைகள் இருக்கும் என்பது தான் உண்மையான விஷயம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்வையிடவும். அதாவது டோங்காவில் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் சமயத்தில் அங்கு வியாழன் இரவு 11.00 மணி ஷஃபான் மாதத்தின் 29வது நாள்,

அடுத்து சமோவாவில் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் அதே சமயத்தில் அங்கு புதன் இரவு 11.00 மணி

ஷஃபான் மாதத்தின் 28வது நாள், அடுத்து சென்னையில் வியாழன் மாலை 3.30 மணி ஷஃபான் மாதத்தின் 29 வது நாள்.

பிறை பிறந்தநாள் வியாழன் 1430 ஷஃபான் மாதம் 29 வது நாள் உலக நேரம் காலை 10.00 மணி

இத்துடன் இணைத்துள்ள இணைப்பிலும் இந்த விபரம் அடங்கியுள்ளது.

Location Local time Time zone

Nukualofa (Tonga) Thursday, August 20, 2009 at 23:00:00 UTC+13 hours SHABAAN 29

Apia (Samoa) Wednesday, August 19, 2009 at 23:00:00 UTC-11 hours SHABAAN 28

Chennai (India – Tamil Nadu) Thursday, August 20, 2009 at 15:30:00 UTC+5:30 hours SHABAAN 29

Corresponding UTC (GMT) Thursday, August 20, 2009 at 10:00:00

சந்திரனின் நேர்கோடு 1430 ஷஃபான் 29

மேலும் திருக்குர்ஆனின் 2:189 வசனத்தில் அல்லாஹ் ஒரு விஷயத்தை விவரிக்கிறான்.

2:189 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்¢ எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த வசனத்தை நன்கு ஆராய கடமைப்பட்டுள்ளீர்கள். கேள்வி? //அல்லாஹ்வின் தூதரிடம் மக்கள் நபியே பிறைகள் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்.//

அல்லாஹ்வின் பதில்கள்: 1 // பிறைகள் மக்களுக்கு தேதியை அறிவிப்பவை.//

2.// ஹஜ்ஜிற்கான தேதியை அறிவிப்பவை.//

3.// பிறை தேதியை அறிவிக்கும் போது அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்?//

மூன்றாவது பதிலை நாம் சிந்திக்க முடியாதவாறு இதில் நபி(ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுகளை அடைப்பு குறியிட்டு எழுதிவைத்ததால் நம்மில் அதிகமானோர் இது ஹஜ் சம்மந்தப்பட்ட வசனம் என அதை ஆய்வு செய்யாமல் உள்ளனர்.

//வீட்டிற்கு முறையான வாசல் வழியாக நுழையுங்கள். பின்புறமாக வந்து நுழையாதீர்கள்// என அல்லாஹ் கூறுகின்றான்.

இங்கு உள்ள வீடுகளுக்குள்என்ற மொழிபெயர்பை இப்படி வாசித்து பாருங்கள்

//வசிக்கும்பகுதிகளுக்குள் (பிறை தேதியை அறிவிக்கும் சமயத்ததில்) நீங்கள் முன்வாசல் வழியாக நுழையுங்கள். பின்புறமாக நுழையாதீர்கள் அதில் உங்களுக்கு எந்த புண்ணியமும் இல்லை//

நாம் வசிக்கும் பகுதிகளில் மேற்புறம் எது? வாசல் எது? என்பதை நாம் தற்போது தீர்மானித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைதத்துவிடும்.

பூமியின் சுற்று கிழக்கு நோக்கி இருப்பதால் தான் நமக்கு எல்லா சூரியன் சந்திரன் போன்றவைகள் கிழக்கில் உதிப்பது போல் தோற்றமளிக்கிறது. எனவே கிழக்கு பகுதியில் உளளவர்கள் முன்வாசலில் உள்ளவர்கள். மேற்புறம் என அல்லாஹ் கூறும் பின்வாசலில் நுழைபவர்கள் மேற்கு பகுதியில் உள்ளவர்கள்.

தற்போது உங்கள் கேள்விக்குள் நுழைவோம்.

சந்திரன் நேர்கோட்டில் இருக்கும் போது வியாழக்கிழமையில் உள்ளவர்கள் ஷஃபான் 29 லும், புதன்கிழமையில் உள்ளவர்கள் ஷஃபான் 28 லும் இருந்தார்கள். தற்போது யார் முதலில் வாசலில் நுழைவார்கள் என்பதை நீங்கள் சிந்திக்கவும். வியாழக்கிழமையை முடித்து வெள்ளிக்கிழமையில் யாரெல்லாம் நுழைகிறார்களோ அவர்கள் அனைவரும் 1430 ரமளானின் முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். பின்வாசலில் ஷஃபான் 28 ல் புதன்கிழமையில் இருந்தவர்கள் வியாழக்கிழமைக்குள் நுழைந்து ஷஃபான் 29 ஆம் நாளை பூர்த்தி செய்து விட்டு வெள்ளிக்கிழமை 1430 ஆம் வருடத்தின் ரமளானின் முதல் நோன்பை துவக்குவார்கள். பின்வாசலில் உள்ளவர்கள் நோன்பை துவக்கும் போது முன்வாசலில் ஏற்கனவே வெள்ளிக்கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள் சனிக்கிழமை ரமளான் மாதத்தின் இரண்டுவது நோன்பில் இருக்க வேண்டும்.

இதில் மக்கள் ஏதேனும் தவறு செய்து சனிக்கிழமை நோன்பை ஆரம்பித்திருந்தால், அவர்களுக்கு ரமளான் மாதம் 28 நோன்புகளே கிடைக்கும். அவர்கள் ஷவ்வால் மாதத்தின் நோன்பு வைக்க தடைசெய்யப்பட்ட முதல் நாள் பெருநாளை கொண்டாடிய பிறகு ஒரு நோன்பை பிடித்து ரமளானின் விட்ட நோன்பை பூர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளார்கள்.

என்னுடைய பதில் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தவில்லை என்றால் மீண்டும் கேட்க்கவும். சத்தியத்தை மக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லவும், அதை புரிந்தவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மேன்மையடைச் செய்யவும், மேலும் எனக்கும் உங்களுக்கும் கல்வி ஞானத்தை அல்லாஹ் அதிகப்பத்தவும், பிரார்த்திக்கும் உங்கள் அன்புச் சகோதரன்

சிராஜ்

ஏர்வாடி

வ அலைக்கும் ஸலாம்,

சகோதரரே,

உங்களின் கீழ்க்கண்ட வழக்கம் எனக்கு மேலும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நீங்கள் நேர்கோடு பற்றி கூறியுள்ளதை படித்ததில்,அது ஒரே நாளில் இருமுறை அல்லது அதற்க்கு மேலும் நடப்பது போல் எனக்கு தெரிகிறது.இது எவ்வாறு சாத்தியம்?. அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நேரங்கள் நேர்கோடு நடந்த பொழுது அந்த பகுதியுள் இருந்த நேரங்களா?

மேலும் இந்த ரமழான் மாதத்திற்கான நேர்கோடு நடந்த இடம் ஆபிரிக்காவில் அல்லவா?

நீங்கள் என் சமோவா மற்றும் டாங்கோ என்று கூறியுள்ளீர்கள்.மேலும் இந்த இரு பகுதிகளும் மிக அருகாமையில் உள்ளது.அப்படியிருக்க எவ்வாறு ஒரு நாள் நேர வித்தியாசம் வருகிறது என்பதை எனக்கு விளக்கவும்.

அன்புடன்,

முஹம்மத்.

dateMon, Aug 24, 2009 at 5:55 PM

subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்

mailed-bygmail.com

hide details Aug 24

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதருக்கு,

முதல் மெயிலில் தாங்கள் கேள்வி?

//என்னுடைய கேள்வி என்னவென்றால், Conjunction(நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும் .நேர்கோடு வந்த் இடத்திற்கு அப்புறம் உள்ள பகுதிகள் தானே முதலில் தொடங்க வேண்டும்.இது சரியா?//

தவறு!!!! நேர்கோட்டிற்கு சந்திரன் வந்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் பொழுது உலகில் என்ன நிலை நடக்கிறது என்பதை புரிய வைக்கத்தான் விபரமாக எழுதினேன். எனவே கிழக்கே இருப்பவர்கள் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். மேற்கே உள்ளவர்கள் அவர்கள் இயற்கையாகவே அந்த நாளுக்குள் நுழைந்து விடுவார்கள் என்பதை தான் விளக்கியிருந்தேன். இந்த விபரம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

//அது ஒரே நாளில் இருமுறை அல்லது அதற்க்கு மேலும் நடப்பது போல் எனக்கு தெரிகிறது.இது எவ்வாறு சாத்தியம்?. அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நேரங்கள் நேர்கோடு நடந்த பொழுது அந்த பகுதியுள் இருந்த நேரங்களா?//

இந்த நேரங்கள் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்த நேரத்தில் பூமியில் கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடங்களின் நிலைமையும் இந்தியாவில் இருக்கும் நமது நிலையையும் விளக்கியிருந்தேன்.

நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வை தாங்கள் சந்திரன் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் நிகழ்வு என புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் சுலபமாக புரிந்து கொள்ள பிறையை ஒரு குழந்தையாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த இடம் தான் அது. இதை பிறந்த நாள் என கூறுவோம்.

தற்போது நமக்கு மாதத்தின் முதல் நாள் எது என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு குழந்தை வியாழக்கிமை காலை 10 மணிக்கு ஆப்பிரிக்காவில் பிறந்துவிட்டது. அது பிறந்த செய்தி அறிந்து அந்த குழந்தை பிறந்த வீட்டிற்கு ஒரு மணிநேரம் கழித்து சென்று உங்களுக்கு எப்போது குழந்தை பிறந்து என்று கேட்டால் பிறந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது என பதிலளிப்பார்கள். இரவில் ஒருவர் அதே வீட்டிற்கு சென்று கேட்டால் அவர் கூறுவார் இன்று காலையில் பிறந்தது என்பார். மறுநாள் பஜ்ருக்கு பிறகு சென்று கேட்டால் நேற்று பிறந்தது என்பார். அந்த குழந்தைக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை தான் என்பது தற்போது உங்களுக்கு புரியும்.

வியாழக்கிழமை பிறந்த நாள் என கூறுவோம் (Day of Birth or Date of Birth) வெள்ளிக்கிழமை (First Day of Birth).

நபி(ஸல்) அவர்கள் பிறந்த குழந்தைக்கு ஏழாவது நாள் மொட்டை அடிக்க சொன்னார்கள் என்பதை நாம் அறிவோம். நீங்கள் பிறந்த நாளை முதல் நாள் என கணக்கிட்டால் ஆறாவது நாளிலேயே மொட்டை அடித்து சுன்னதை தவறவிடுவீர்கள் என்பதை நினைவில் வைத்தால் இந்த விஷயம் உங்களுக்கு சரியாக ஞாபகத்தில் இருக்கம். ஒரு குழந்தை வியாழக்கிழமை பிறந்தால் அடுத்த வாரம் அதே வியாழக்கிழமை தான் அந்த குழந்தைக்கு ஏழாவது நாள். பிறந்த நாள் என்றுமே 0 (zero) வாக இருக்கும்.

இதிலிருந்து தாங்கள் புரிய வேண்டியது என்னவென்றால் ஒரு குழந்தை ஆப்பிரிக்காவில் பிறந்தால் அதை இந்தியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ மற்றும் அமெரிக்காவிலோ பிறந்ததாக நாம் கூற மாட்டோம். அந்த குழந்தை பிறந்தது ஆப்பிரிக்காவில் மட்டும் தான். அந்த குழந்தையின் பிறப்பை உலகில் எங்கு போய் பதிவு செய்தாலும் அந்த குழந்தை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 1430 வருடம் ஷஃபான் மாதத்தின் 29 நாளில் பிறந்ததாகத்தான் பதிவு செய்து வைத்து தகவல் தர வேண்டும். ஏன் என்றால் UNIVERSAL TIME 10.00 மணி என்பது ஆஃபிரிக்கா தான். அங்கு தான் இந்த குழந்தை பிறந்த நிகழ்வு நடைபெற்றது. வேறு எங்கும் நடைபெற முடியாது.

இதன் அடிப்படையில் ஊர் ஊருக்கு பிறை பிறக்காது என்ற உண்மை தாங்களுக்கு புரிந்திருக்கும். பிறை என்பது ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் வித்தியாசமான இடங்களில் பிறக்கும். அதை பற்றிய முழு விபரமும் நமது வெயீடான `ஹிஜ்ரா நாட்காட்டியில் வலப்பக்கத்தில் வெளியிட்டிருக்றோம். அதை முழமையாக காண http://www.islamkalvi.com/hijracalendar/1430/index.html இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

//மேலும் இந்த ரமழான் மாதத்திற்கான நேர்கோடு நடந்த இடம் ஆபிரிக்காவில் அல்லவா?//

ஆம் ஆப்பிரிக்காவில் தான்.

நாம் பிறை பிறக்கும் நேரத்தை அதனால் தான் UTC (உலக நேரம்) யில் குறிப்பிடுகிறோம். அந்த நேரம் ஒரு குறிப்பிட்ட (place of birth) இடத்தை தான் குறிக்கும். அதனால் நாம் கணக்கின் அடிப்படையில் பிறை எங்கு பிறக்க போகிறது என்பதை முன் கூட்டியே தெரிவித்து விட முடியும். உலகில் தற்போது மக்கள் மஃரிப் நேரத்தில் நின்று கொண்டு மேற்கே மறையக் கூடிய பிறையைப்பார்த்து பிறை பிறந்து விட்டது என கூறுகிறார்கள். அவர்கள் வாயால் அவர்கள் உண்மையே கூறுகிறார்கள். அது ஏற்கனவே எங்கேயோ பிறந்து விட்டது என்பதுதான் உண்மை. இதோ பிறை பிறக்கிறது என்று நிகழ்காலத்தில் யாராவது சொல்ல கேட்டவர்கள் இருக்கிறார்களா”? அது அவர்கள் இடத்தில் பிறந்ததாகவும் ஒவ்வொரு ஊராரும் நினைக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை பின்பற்றுபவர்கள் இன்னும் அதிகமாக சிந்தித்தால் இது போன்ற பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவரலாம். பிறை பிறக்கும் சமயத்தில் எத்தனையோ ஊர்கள் முதல் நாளில் நுழைந்திருப்பார்கள். பிறை பிறந்தன் பின் தெரிவித்தால் அவர்களுக்கு மாதத்தின் முதல் நாள் ஒவ்வொரு மாதமும் கிடைக்காமல் ஆகிவிடும். அவர்களுக்கு கணக்கை தவிர வேறு வழியே கிடையாது என்பதுதான் உண்மை. அல்லாஹ் தன் திருமறையில் எவர்கள் அம்மாதத்தை அடைகிறாறோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்” 2:185 என்ற வசனத்திற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.

//நீங்கள் என் சமோவா மற்றும் டாங்கோ என்று கூறியுள்ளீர்கள்.மேலும் இந்த இரு பகுதிகளும் மிக அருகாமையில் உள்ளது.அப்படியிருக்க எவ்வாறு ஒரு நாள் நேர வித்தியாசம் வருகிறது என்பதை எனக்கு விளக்கவும்.//

சகோதரரே! சிந்தியுங்கள். உலகில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் உலகில் என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பது அதிகமானோர் அறியாமல் இருக்கிறார்கள். அதை அறிந்தவர்கள் பிறருக்கு சொன்னால் அவர்களை கேவலப்படுத்தி சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளுகிறார்கள். பூமி உருண்டை என்பதும் கிழக்கு நோக்கி சுற்றிக்கொண்டிருப்பதும் இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மை.

அவர்கள்தான் உலகதேதி மாறும் இடத்தில் இருக்கிறார்கள். உலகில் எப்போதும் இரண்டு நாட்கள் இரண்டு தேதிகள் இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதும், இரண்டு கிழக்கிற்கும், மேற்கிற்கும் அவனே இறைவன் என்ற வசனத்தை உண்மைபடுத்தும் இடமும் இதுதான். எனவே

http://www.islamkalvi.com/portal/?p=940 இந்த லிங்கை கிளக் செய்து படித்தால் கேள்விக்கான விடை பற்றிய விபரம் உள்ளது. புரியவில்லை என்றால் மீண்டும் கேட்கவும்.

பூமியின் ஓட்டம் சந்திர சூரிய ஓட்டங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

மற்றவை உங்கள் பதில் கண்டு

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் தந்து உதவும் படி கேட்டுகொள்கிறேன்..

இத்தாவை பொறுத்தவரை அல்லாஹ் திருமறையில் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாகாத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)”

#) அல்லாஹ் இத்தா விசயத்தில் நேரடியாக விளக்கம் அளித்துள்ளான்.. (அனைவரும் ஏற்று தான் ஆக வேண்டும்.)

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி)நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

#) அதே போல தானே பிறை விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்கள்.(இதையும் நாம் ஏற்று தானே ஆக வேண்டும்..)அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

1.) அல்லாஹ் ஆராய சொல்கின்றான். உண்மை தான், இதை தான் ஆராய சொல்கின்றான் என்று எப்படி நாம் முடிவு செய்ய முடியும்..?

மற்றும்

2.) நபி (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுத்த பின்பும் நாம் அந்த விஷயத்தை ஆராய்கின்றோம் என்று சொல்லி (நபி (ஸல்) காலத்தில் ஒரு நடைமுறை, இப்பொழுது ஒரு நடைமுறை) என்று மாற்றி அமைப்பதற்கு நமக்கு எவ்வாறு அதிகாரம் வரும்..?

3.) நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்த பின்னும்., ஒரு விஷயத்தை பற்றி நாம் ஆராய்வது தான் உண்மை என்று நாளை அல்லாஹ்-விடத்திலே எவ்வாறு நாம் முறையிட முடியும்…?

வஸ்ஸலாம் .

அப்துல் காதர்.அ 2009/8/21 Mohamed Safiq

Read 1675 times Last modified on திங்கட்கிழமை, 01 ஜூன் 2015 10:01