வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:14

மனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்

Rate this item
(0 votes)
மனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளே,

இந்திய ஹிஜ்ரா கமிட்டி அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் மனித குல காலண்டரை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக பல திட்டங்களை போட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் மனித குல காலண்டர் என்ற தலைப்பில் சென்னையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் இறுதியில் மதுரையில் இருந்து வருகை தந்த சகோதரர்.பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் சொன்ன கருத்தும்  அதற்கான பதில் நிகழ்ச்சியும்.

29.10.1430 (17.10.2009) ‘மனித குல காலண்டர்’
கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்!
அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ‘மனித குல காலண்டர்’ என்ற தலைப்பில் 29.10.1430 சனிக் கிழமை (17.10.2009) கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகள்
காலை 9.30 மணியளவில் அல்லாஹ்வின் அருளால் துவங்கிய கருத்தரங்கத்திற்கு சகோதரர் கோவை அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.

காலெண்டரின் அவசியம் என்ன? என்பதை தாஹிர் சைபுத்தீன் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அதற்கு அடுத்ததாக சூரியன் சந்திரன் பூமி பற்றிய தகவல்களை தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வெளியிடப்பட்ட குறும்படம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

அதன் பிறகு மும்பை ஹிஜ்ரா கமிட்டி பொறுப்பாளர் முஸ்தபா ஹஸன் அவர்கள் ஹிஜ்ரா கமிட்டி சார்பாக வெளியிடப்பட்ட மனித குல காலெண்டர் என்ற புத்தகத்தை வெளியிட பேராசிரியர், டாக்டர் முகம்மது அளீம் அப்துல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்ததாக கோயா குட்டி பாரூக்கி அவர்கள் வெளியிட்ட பிறை சம்மந்தமான மலையாள மொழி புத்தகத்தை இந்திய ஹிஜ்ரா கமிட்டி பொறுப்பாளர் அப்துல் சுக்கூர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

பேராசிரியர் டாக்டர் முகமது அலி அவர்கள் எழுதி வெளியிட்ட  நாளின் ஆரம்பம் என்ற தமிழ் புத்தகத்தின் புதிய பதிப்பு இன்றைய நிகழ்வில் வெளியிடப்பட்டது. அதை ஏர்வாடி பி.முகமது சிராஜ்தீன் வெளியிட மதுரை வழக்கறிஞர் இமாம் ஹுசைன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
அதற்கு அடுத்ததாக மலையாள மொழி பேசும் மக்களுக்காக கேரளாவில் இருந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த சகோதரர் கோயா குட்டி பாரூக்கி அவர்கள் காலெண்டரின் அவசியத்தை மலையாள மொழி யில் எடுத்துரைத்தார்கள்.

அதற்கு அடுத்ததாக நபி(ஸல்) காலத்தில் பிறை பார்க்கப்பட்ட முறைகள் பற்றி சகோதரர் அப்துர் ரஷீத் அவர்கள் விளக்கினார்கள். அன்றைய கருத்தரங்கத் தில் கண்காட்சியாக நபிகளார் காலத்தில் பிறையை அவதானிக்கும் முறைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் யூதர்களுடைய பிறை பார்க்கும் முறைக் கும் நமது பிறைபார்க்கும் முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் மக்களுக்கு கண் காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

முதல் அமர்வு சரியாக மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இரண்டாவது அமர்வு சரியாக 2.30 மணி யளவில் ஆரம்பமானது. கோவை அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை தாங்க முதலாவதாக சகோதரர். அப்துல் லத்தீப் உமரீ அவர்கள் காலெண்டர்கள் ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் மைக்ரோசாப்ட் பவர் பாயின்ட் காட்சியின் மூலம் விளக்கினார்கள்.

அதில் உலகில் நமக்கு தரப்பட்ட சந்திர  நாட்காட்டியை தவிர அனைத்து காலெண்டர்களும் எப்படி தவறுகளோடு காணப்படுகின்றன என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கினார்கள்.

மேலும் பல ஆதாரபூர்வமான தகவல்;களை மக்களுக்கு அறிவுபூர்வமாக வழங்கினார்கள்.
அதற்கு அடுத்ததாக உருது மொழி மக்கள் இந்த கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றார்கள். அம்மொழியில் ஊட்டியை சேர்ந்த சகோதரர் சுபைர் பிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள். அது உருது மொழி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

யூதர்கள், கிருஸ்தவர்கள் கணக்கிடும் முறையைத் தான் தற்போது உலக மக்கள் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்கள் யாருக்கும் கணக்கிட தெரியாது என வாதிடும் மக்களுக்காக நேவிகேஷன் மற்றும் வானவியலை அறிந்த கேப்டன் பர்;ஹத் நஸீம் சித்தீகி அவர்களின் காட்சிகளோடு கூடிய உரை பதிலாக அமைந்தது.

பிறையை கணக்கிட்டு மாதத்தை துவங்குவது குர்ஆன் ஹதீஸிற்கு எதிரானதா? என்ற தலைப்பில் சகோதரர் ஏ.எம்.ஜி.மசூது அவர்களின் உரை மக்களுக்கு மிகவும் பிரயோ ஜனத்தை ஏற்படுத்தியது.

அதன் பின் சகோதரர் அப்துல்காதிர் உமரீ அவர் கள் இஸ்லாமிய நாட்காட்டியை கணக் கிட்டு அமைப்பது எவ்வாறு என்பதை மக்களுக்கு விளக்கினார்கள். மாநாட்டில் வெளியிட்ட மனித குல காலண்டர் என்ற புத்தகத்தை பற்றியும் அவர் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
இறுதியாக அந்நஜாத் ஆசிரியர் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் இஸ்லாமிய உண்மைகள் மக்களை சென்றடைய காலதாமதம் ஏன் ஏற்படுகிறது? என்பதை பற்றி விளக்கமளித்தார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் முடிவில் சகோதரர் பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்களுக்கு மாநாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கொள்கை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்.

ஹிஜ்ரா கமிட்டி சார்பில் அன்றைய உணவு, குடிநீர் மற்றும் தேநீர் விநியோகங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன. ஒரு நாள் மாநாடு என்பது இன்றைய காலத்தில் மக்கள் கலந்து கொள்வது மிகவும் அரிது. சமுதாயத்தில் முக்கியஸ்தர்கள் அதிகமானோர் இந்த கருத்தரங்கில் காலையில் இருந்து இரவு 9.30 மணி வரை இருந்து அனைத்து கருத்துகளையும் கேட்டுச் சென்றது இந்த கருத்தரங்கத்தின் சிறப்பான அம்சம். அல்ஹம்துலில்லாஹ்.

இவண், ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா, தமிழ்நாடு.

Read 1863 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:27