வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:12

பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்?

Rate this item
(2 votes)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்?

 

(ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் "இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்?" என்ற தலைப்பில் பதிந்த பதிவிற்கு பீஜே அவர்கள் நேரடியாக பதில் அளிக்காமல், ஒரு நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதை மறுத்தும், ஹிஜ்ரி கமிட்டியை வழக்கம்போல் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்ச்சித்தும் பீஜே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு பதில்)

அன்பின் சகோதர சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

கடும்கோபம் கொப்பளிக்க, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று ஹிஜ்ரிகமிட்டிக்கு பதில் என பீஜே புனைந்துள்ள அந்த அபத்தக் கருத்துக்களை நாமும் பார்வையிட்டோம். ஹிஜ்ரி கமிட்டியினர் மூளை வரண்டவர்கள், குழப்பவாதிகள், வரட்டுக் கும்பல், விவாதம் என்றவுடன் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவர்கள் என்றெல்லாம் பீஜே தனக்கே உரித்தான பாணியில் நம்மீது  இட்டுக்கட்டியுள்ளார். 

கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது  கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இப்பதில் பதிவு சற்று நீளமாக ஆகிவிட்டதை பொறுத்துக்கொண்டு, பொறுமையாக இறுதிவரை  படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

பீஜே நிதானம் இழந்து நம்மை திட்டியுள்ளது எத்தகைய ஆச்சரியத்தையும் நமக்கு ஏற்படுத்திடவில்லை. காரணம் சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட  இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள் வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும், தனது கோரசிந்தனையின்  உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும்  முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். 

குர்ஆன் வலியுறுத்தும் பிறை கணக்கீட்டை மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஹிஜ்ரி கமிட்டியை இவர் விமர்சிக்க எள் முனையளவும் தகுதியற்றவர். காரணம்   அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி  இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. இவ்வாறு அல்லாஹ்வையே பலவீனப்படுத்தி, அவருடைய வரட்டு சிந்தனையில் உருவான கொள்கைகளை  தவ்ஹீதின் பெயரால் தமிழக  மக்களுக்கு அறிமுகப்படுத்திய சீமான் பீஜேயின் அபத்தங்களையும் பித்தலாட்டங்களையும் நாங்கள் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அத்தகைய பித்தலாட்டங்களில்  ஒன்றுதான் பல பரிணாம வளர்ச்சிகள் பெற்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் இவரின் பிறை நிலைபாடும் ஆகும்.

இன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும்,  குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபு பேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லை, சுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லை, அவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான், அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம் (குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. ஹிஜ்ரிகமிட்டியினராகிய  நாம் இவரோடு பிறைபற்றிப் விவாதம் செய்யப் பயப்படுவதாக இன்று சிறுபிள்ளைத்தனமாக விமர்ச்சித்திருப்பது 21ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை எனலாம். 

கடந்த 2000 ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்தில் முகத்திரை கிழிக்கப்பட்டது யாருக்கு என்பதையும், பிறை உட்பட மார்க்க விஷயத்தில் குழப்பம்செய்யும் பெரும் குழப்பவாதி யார்? மூளை வரண்டது யாருக்கு? என்பதையும் மக்கள் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளனர்.

நெல்லை ஏர்வாடி பிறை விவாதத்தில் கடும் தோல்வியுற்ற பீஜே இன்று கோபப்படுவது போன்றே அன்றும் விவாத ஏற்பாட்டாளர்கள் மீது அபூஅப்தில்லாவை அழைத்து வந்தது ஏன்? என்று சினம் கொண்டது இன்றும் எங்களுக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே 2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் என்பது பழைய தவ்ஹீது சகோதரர்களுக்கு நன்கு தெரியும், பீஜேயின் தற்போதைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. 

அல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களை, வேதங்களை, ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை. யாருடைய கொள்கை சரி தவறு என்பதை உறுதிப்படுத்த  மாற்றுக்கொள்கையினருடன்  விவாதம் செய்துதான் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும் என முஸ்லிம்களுக்கு  அல்லாஹ்வோ தூதரோ எந்த ஒரு கட்டளையையும் இடவில்லை.

நபித்தோழரை கிருமினல் என்று நாக்கூசாமல் கூறிய இந்த பீஜேவிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய உரிமையும் கோரமுடியாது. மக்கள் மறதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஹிஜ்ரி கமிட்டி இவரோடு விவாதம் செய்யப் பயப்படுகிறது என இன்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் இந்த பீஜேகடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற ஏர்வாடி பிறைவிவாதத்திலும், அதன்பின்னர் 2005ல் மதுரையில் நடைபெற்ற பிறை விவாதத்திலும் தனது தோல்வியை பகிரங்கமாக மக்கள் மத்தியில் முதலில் ஒப்புக்கொள்ளட்டும். அதன்பின் ஏற்கனவே விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே ஒப்புக்கொள்ளாமல், பொய்களை கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ளட்டும்.

மேலும், அன்பின் சகோதர சகோதரிகளே! நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா? என்ற அவரது பதிவில் உள்ளவைகளை வரிக்கு வரி ஆய்வு செய்வோம்.

//ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பல ஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம். // Online PJ

'அண்ணே பின்னிட்டீங்க போங்க' என்று இதை படிக்கும் இவரது ரசிகர்களுக்கு உணர்ச்சியூட்டி பக்திப்பரவசமாக்க இப்படி எழுதியுள்ளார் போலும்.

சைபுதீன் ரஷாதியோடு விவாதம் செய்யவிருக்கும் இந்த பீஜே, தான் பொய்யன் பித்தலாட்டக்காரன் என்று நீரூபணமாகிவிட்டால் அதன்பிறகு மார்க்க விஷயங்களை பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார். எனவே அந்த ஒப்பந்தப்படி அவர் நடப்பதில் உறுதியாக இருந்தால் அந்த விவாதம் நடக்கும் முன்னரே, கடந்த 2000ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்திலும், 2005ல் மதுரை பிறை விவாதத்திலும் தான் தோல்வி அடைந்ததையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே இழுத்தடித்துக் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாதத்தில் எங்களையும் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் பீஜேவிற்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களை மூச்சுக்கு முன்னூறு தடவை விவாதத்திற்கு அழைத்து பயம் காட்டும் பீஜே ஒருபோதும் விவாதம் செய்ய இதுவரை  நம்மை அழைத்ததில்லை.  அவ்வாறு நம்மை அவர் அழைத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டட்டும்.  நாம் தான் அவர்களை பல முறை விவாதம் செய்ய அழைத்தோம்  என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவருடன் எழுத்து மூலமான விவாத அழைப்பிற்கு நாம் அழைத்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தவர் தான் பீஜே.  இன்னும் சொல்லப்போனால் நமது விவாத அழைப்பு சம்மந்தமான எந்த பதிவையும் பீஜே அவருடைய இணையத்தளத்தில் இதுவரை வெளியிடவில்லை. இந்த ரகசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. அதன் விபரங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்வையிடவும்.
பீஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு
பீஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்

மக்களே! அறிவுத்திறனை முழுகுத்தகைக்கு எடுத்துள்ள இந்த விவாதப்புலி எங்களுக்கு பதில் என்று பிதற்றியுள்ள பின்வரும் வாசகத்தையும் படித்து மகிழுங்கள்.

//இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் // Online PJ

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்று இட்டுகட்டி பதிந்துவிட்டு,  பேச்சுவழக்கில் எழுதிவிட்டோம் என பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவை திருத்துவதில் இருந்து இவர்களுடைய மார்க்க அறிவின் தெளிவையும், அளவையும் மக்களே நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் பேச்சு வழக்கில்  மார்க்கத்தை எப்படியும் வளைப்பார்கள் என்பதை அவர்களை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளதற்கு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

இவர் பேச்சில் மக்களை ஏமாற்றி வருகின்றார் என்பதை நாம் முன்பே அறிந்திருந்ததால் தான் பீஜேயை நாம் எழுத்து மூலமான விவாதத்திற்கு அழைத்தோம். அந்த விவாத அழைப்பிற்கு எந்த பதிலையும் அளிக்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க பீஜேயும் அவரது பக்தர்களும் ஓடி ஒழிந்து வருகின்றார்கள். 

இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் என்று போகிறபோக்கில் பதிலளித்துள்ளார். அவருடைய பிறை ஆய்வின் தவறை சுட்டிக்காட்டியது அவரது ஆய்வு என்று வெளியிடப்பட்ட எழுத்துவடிவிலான ஆன்லைன்  புத்தகத்தில் அவர் எழுதியதிலிருந்தே என்பதை கவனத்தில் கொள்க. நாம் அவருடைய வீடியோ உரையிலிருந்து தவறுகளை இன்னும் சுட்டிக் காட்டவே ஆரம்பிக்கவில்லை. 

ஒரு ஆதாரத்தை காட்டியதற்கே பதிவில் மாற்றம் என்றால், இன்னும் இவர்கள்  பேச்சுவழக்கில் எழுதியதாக கூறுவது அனைத்தையும் நாம் ஆதாரம் காட்டிக்கொண்டே இருந்தால் ஆன்லைன் பீஜே இணையத்தளமே காலியாகிவிடும் என நினைக்கின்றோம்.  ஒட்டுமொத்தமாக அவருடைய பேச்சுவழக்குதானே ஆன்லைன் பீஜே  இணையத்தளம். எனவே  பீஜே  எழுத்து மூலமான இணையத்தள விவாதத்திற்கு வர ஏன் பயப்படுகின்றார் என்பதை தற்போது நீங்கள் தெளிவாக புரிந்திருப்பீர்கள்.

//மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.  பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை. நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை. // Online PJ

அண்ணன் ஆய்வு செய்து வெளியிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருக்கும் TNTJ அன்பர்களே! பீஜே ஒன்றை பேசிவிட்டார், சொல்லிவிட்டார் என நீங்கள் ஆய்வுசெய்யாமல் அதை கண்மூடி நம்பி, பிரச்சாரம் செய்தால் படுகேவலம்தான் மிஞ்சும் என்பதற்கு பீஜே யின் இந்த பதிலைவிட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்? மார்க்கத்திற்கு ஆதாரம் என்று பீஜே சொல்வாராம். ஆனால் அதை அவர் சொன்னார் என்று ஆதாரமாக எடுக்கக்கூடாதாம்? என்ன வேடிக்கை இது  

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் என்பதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரங்கள் பல இருக்க பீஜேயின் அபத்தங்களிலிருந்து ஆதாரம் எடுத்து வெளியிடும் அளவிற்கு  கீழான நிலையில் ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களை அல்லாஹ் ஒருபோது வைக்கவில்லை. பீஜேயின் தக்லீது கூட்டத்தை புரிய வைப்பதற்காகவே நண்பர் ஒருவர் 'இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்?' என்ற தலைப்பிட்டு பீஜே வெளியிட்ட புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டினார். அதற்கே பீஜே இப்படி தடுமாறி நிலைகுலைந்துவிட்டார். பாவம். 

முஸ்லிம் நூலை எடுத்து அந்த நூலில் அவ்வாறு உள்ளதா என நாம் பார்த்துவிட்டு விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நம்மீது பீஜே வைக்கின்றார். அவரைவிட அரபி அறிவில் நாம் கூடியவர்கள் என்பதை அறிந்து  இவ்வாறு கூறியிருக்கிறார் போலும், இப்போது இதையாவது ஒப்புக்கொண்டாரே. 

பீஜேயானிகளை பார்த்துக் கேட்கிறோம், பீஜேயானிகளே! நாங்கள் தான் எதிலும் சரி. மற்றவர்கள் அனைவரும் தவறில் இருக்கின்றார்கள் என விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் மூல நூலை பார்க்காமல் பேச்சு வழக்கில் எதையாவது எழுதுவீர்கள் அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள் என கூறவருகின்றீர்களா? அரபி விற்பன்னர்கள் (?) நிறைந்த உங்கள் இயக்கத்திலுள்ளவர்கள் (!) யாரும் இதை படிக்கவே மாட்டார்களா? அல்லது படித்தாலும் பீஜே   எழுதியதற்கு எதிராக கருத்து சொல்லக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளதாஅல்லது பீஜேவிற்கு அரபியை மூல மொழியில் படிக்கும் அறிவுகூட இல்லையா

இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்? என்று அந்த நண்பர் தலைப்பிட்டது மிகச்சரியானதுதான். ஏனெனில் அக்கட்டுரை பதிவிற்கு பதில் என்று பீஜே பிதற்றியுள்ளதை நீங்களே வாசித்துப்பாருங்கள் 

//வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன. நம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது. //  Online PJ

ஹிஜ்ரி கமிட்டியின் வாதம் வரண்டு இருந்தாலும் அதில் உண்மை உள்ளதாக பீஜே மீண்டும் இங்கே ஒப்புக்கொள்கின்றார். ஹிஜ்ரி கமிட்டியினரின் வாதம் வரண்டு இல்லை அதில் பீஜே மிரண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அந்த ஹதீஸில் இரண்டு நாட்களைத்தான் ஒரு நாளாக குறிக்கப்பட்டுள்ளதாம்.  ஆனால் இரண்டு நாளும்  எட்டாம் நாள் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டுள்ளனவாம். எனவே அவர் பேச்சுவழக்கில் கூறியது சரிதான் என மீண்டும் எழுத்துவழக்கிலும் நிறுவப்பார்க்கின்றார். அண்ணன் கீழே விழுந்துவிட்டார் ஆனால்.. ஆனால்... ஆனால் அவர் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை.

அடுத்து என்ன கூறுகின்றார்கள் பாருங்கள். பீஜே எழுதியதிலேயே இதுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பர்.

// பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன.// 

// எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும். // Online PJ

நாம் உளறி மாட்டிக்கொண்டோமா?  பீஜே உளறி மாட்டிக்கொண்டாரா?  இந்த பதிவை படித்த அனைவருக்கும் பீஜே உளறிக்கொட்டியது புரிந்து கேள்வி கேட்டதினால் தானே பீஜேவிற்கு அனல் பறக்கும் கோபமே வந்தது.  பீஜே உளறி மாட்டிக்கொள்ளவில்லை என்றால் அவசர அவசரமாக பீஜே தான் பதிந்ததை திருத்தியது ஏன்

மார்க்கம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறும் பீஜேகிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் வழிபடி அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அமைந்துவிட்டது என தற்போதுகூட உளறியுள்ளது அவர் என்னதான் உள்பூச்சு வெளிப்பூச்செல்லாம் பூசி மெழுகி சப்பைகட்டு கட்டி சமாளித்தாலும் உளருவாயான் யார் என்பதை வல்ல அல்லாஹ் வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா?

// துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்லிம் 2137 // Online PJ

இது பீஜே யால் திருத்தி வெளியிடப்பட்ட மறுபதிப்பின் வாசகங்கள். இதையும் பேச்சு வழக்கில் உளறிவிட்டேன் என்று கூறி பீஜே எஸ்கேப் ஆகப் போகிறாரா? எட்டாம் நாள் என்பது ஏழாம் நாள் மஃரிபிலேயே ஆரம்பித்துவிடுகின்றது என்பதே பீஜே யின் வாதம்.  அப்படி இருக்கும் போது அன்றைய தினம் லுஹர் அஸர் வரைதானே எட்டாம் நாள். அது எப்படி அன்றைய தினம் மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையை எட்டாம் நாள் தொழ முடியும். எட்டாம் நாள் மஃரிபிலேயே ஒன்பதாம் நாள் பீஜேவிற்கு ஆரம்பித்து விடுமே? இதுவும் பேச்சுவழக்குதான் என்றால் அவருடைய கதைகளும், அவரது இணையதளத்தின் கதைகளும் முடிந்துவிடும் அவ்வளவு தான்.

தன்னை அதிபுத்திசாலியாக நினைத்து அபத்தங்களை அள்ளிவீசும் பீஜேக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் ஒரு அறிவாளியை அல்லாஹ் வைத்திருக்கிறான் (.....கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! 12:76) என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி, இனிமேல் நீங்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது, என்னுடைய பேச்சை நீங்கள் யாரும், நான் கூறுகின்றபடி விளங்கிக்கொள்ள வேண்டாம்.  இது பேச்சு வழக்கில் கூறப்பட்ட பொய்யா?, அல்லது உண்மையிலேயே ஹதீஸில் அவ்வாறு உள்ளதா? நான் பொய்யுரைத்துள்ளேனா என்று பார்த்து என்னுடைய உரைகளை முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை கூறுங்கள்.

என்னுடைய அனைத்து மொழிபெயர்ப்புகளும் இதுபோன்று பேச்சு வழக்கில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். அதை நீங்கள் சரியாக என்னை விட மொழிபெயர்ப்பில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடமோ அல்லது ஹிஜ்ரி கமிட்டியிடமோ அணுகி சரிபார்த்து கொள்ளவும் என அறிவிப்பு செய்யுங்கள்.

உங்களுடைய தவறை யார் சுட்டிக்காட்டினாலும், அதை சரி செய்வதற்கு தயங்க மாட்டோம் என கூறிவரும்  நீங்கள் உங்களுடைய நாளின் ஆரம்பம் மஃரிப் என்ற முக்கியமான வாதத்திற்கு மாற்றமாக நீங்கள் எழுதியதை நாங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் எங்கள் மீது ஆத்திரப்பட்டு கடும் சொற்களை கொண்டு திட்டி தீர்க்க வேண்டும்.  உங்களுக்கு வாதத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு ஆத்திரம் வரும் என்பதால் தான் உங்கள் இயக்கத்தில் உள்ள ஒரு சில நல்லவர்கள் கூட உங்களிடம் பேச தயங்குகின்றார்கள் என்பது இப்போது எங்களுக்கும் புரிந்துள்ளது.

உங்கள் வாதத்தில் உள்ள தவறுகளை யாராவது உங்களிடம் சுட்டிக்காட்டினால் நீங்கள் கோப்பட்டு கடுஞ்சொற்களை நீங்கள் உபயோகித்து  இதுபோன்றுதான் திட்டுவீர்கள் என்பதை தற்போது உங்கள் மக்களும்  தெளிவாக புரிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

எனவே நாங்கள் சுட்டி காட்டியது வரட்டு சிந்தனையல்ல.  உண்மையான கொள்கைதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதால் தான் நாங்கள் சுட்டிக்காட்டிய உங்கள் பேச்சுவழக்கு எழுத்தை (வழக்கமாக நீங்கள் சொல்லும் மறுஆய்வு என்ற நாடகம் இல்லாமல்) உடனடியாக நீக்கி விட்டீர்கள்.  

இனிமேல் நீங்கள் ஹஜ்ஜின் நாட்களில் உள்ள தொழுகைகளைப்பற்றி கீழ்கண்டவாறுதான் விளக்கி ஆக வேண்டும்.  

துல்ஹஜ் 8 ன் உடைய மஃரிப் மற்றும் இஷா பஜ்ர் போன்றவைகளை மக்காவில் தங்கும் அரைகளிலோ பள்ளிவாயிலிலோ தொழுதுவிட வேண்டும்.  

துல்ஹஜ் 8 ன் உடைய லுஹர் மற்றும் அஸர் தொழுகையை மினாவில் தொழ வேண்டும்.

துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாள்.  அன்றைய மஃரிபு மற்றும் இஷா  பஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் வைத்து தொழவேண்டும்.  துல்ஹஜ் 9 இரவு அன்று மினாவில் தங்க வேண்டும்.

மேற்கண்ட  அடிப்படையில் எதிர்வரும் ஹஜ்ஜிற்கு புதிதாக பயான் செய்து, உங்கள் மக்களை ஹஜ் செய்யும் படி உபதேசித்து அனுப்பவும்.

பீஜே யும் அவரின் ரசிகமன்றமும் மற்றவர்களின் சிறு பிழைகளைக் கூட இலகுவாக விட்டுவிடுவதில்லை. மற்றவர்களின் பேச்சுக்களையும் எழுத்துகளையும் வரிக்கு வரி ஆப்பு என்று  சீடிக்கள் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் தவறுவதில்லை. இத்தைகைய கேடுகெட்ட நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களிடம் இத்தனை தவறுகள் வரலாமா?. தன்னிடம் இத்தனை கறைகளை வைத்துக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை வரட்டுக்கும்பல், மூளை வரண்டு விட்டது என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிலை வெளியிடுகிறோம்.

இனியும் இந்த பீஜேயும் இவரது கூட்டமும், மறைக்கப்பட்டுள்ள உண்மையான விஷயங்களை உலகிற்கு எடுத்து கூறிவரும், எங்களை வம்புக்கு இழுத்து வரம்பை மீறினால்  இதைவிட மிகக் கேவலமான அவர்கள் நிலைபாடுகளின் உண்மைநிலை வெளிவரும். அதனை எதிர்கொள்ளத் தயாராகட்டும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

நாங்கள் ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான்; மக்ரிப் அல்ல. அந்தந்த கிழமைகளில் தென்படும் பிறை அந்தந்த கிழமைகளுக்கே உரியது; அடுத்த கிழமைக்குரியது அல்ல என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தகுந்த ஆதாரங்களுடன் பிரசுரங்கள், புத்தங்கங்கள், இணையத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக மக்களுக்கு பலமுறை எத்தி வைத்துவிட்டுடோம் - அல்ஹம்துலில்லாஹ். எனவே பீஜே இன்று வெளியிட்டுள்ள அபத்தங்களுக்கு இந்த பதிலே போதுமானது என்று நினைக்கிறோம், அவரையும் அவரது பிறபொய்களையும் அலட்சியம் செய்கிறோம்

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். அல்குர்ஆன் 4:115

 

இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.  அல்குர்ஆன் 8:13

 

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 3:160

மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அனுமதியை கொன்டு நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 2:213

இன்னும், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்´ என்று கூறுவீராக. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் அதிகமாக்குவதில்லை. அலகுர்ஆன் 17:81-82

நீர் கூறுவீராக ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.  அல்குர்ஆன் 17:84

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.

மேலும் நமது பிறை சம்மந்தமான ஆய்வுகளை பார்வையிட
www.mooncalendar.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்வையிடவும்.

பிறைகள் மற்றும் சந்திர நாட்காட்டி சம்மந்தமான  சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற கூகுள் குழுமத்தில் இணையவும்.

இப்படிக்கு,
ஹிஜ்ரி கமிட்டி

---------

From:            இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். via googlegroups.com

Sender-time: Sent at 12:35 PM (GMT-07:00). Current time there: 11:44 PM. ✆

Reply-to:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:              இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

cc:               இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Date:           Mon, Sep 10, 2012 at 12:35 PM

Subject:      Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

HIJIRI COMMITTE......

IT’S NOT ENOUGH JUST TO WRITE A DETAILED REPLY...........

ACCEPT   P.J.'s CAL FOR A DEBATE

                               OR

INVITE THEM FOR A PUBLIC DEBATE TO EDUCATE prove and ALL MUSLIMS....

-----------

From:           Hijri Committee இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Sender-time:        Sent at 9:23 AM (GMT+05:30). Current time there: 12:12 PM. ✆

Reply-to:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:              இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Date:           Mon, Sep 10, 2012 at 9:23 AM

Subject:      Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் நாளின் ஆரம்பத்தை பி.ஜே எவ்வாறு புரிந்துள்ளார் என்பதை ஆன்லைன் பி.ஜே இணையத்தளத்தில் இருந்தே ஆதாரத்தை காட்டியவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவில் மாற்றத்தை ஏற்படுத்திநாங்கள் அரபி மூலத்தில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க மாட்டோம். எங்கள் பேச்சுவழக்கில் தான் மொழியாக்கம் செய்வோம் என்ற தங்களுடைய இமாலயத் தவறை மறைக்க பயங்கர கோபத்துடன் ஆன்லைன் பி.ஜேயில் பதிலிட்டுள்ளார்.

இன்ஷாஅல்லாஹ் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் பி.ஜே பதிவிட்டதற்கு,  நாம் கூடிய விரைவில் கட்டாயமாக பதில் எழுதுவோம்.

இப்படிக்கு

 

ஹிஜ்ரி கமிட்டி

----------

From:              GORI MOHAMED இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Sender-time: Sent at 8:40 PM (GMT+05:30). Current time there: 12:10 PM. ✆

Reply-to:        இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:                  இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Date:               Sun, Sep 9, 2012 at 8:40 PM

Subject:          Re:     [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

Thank u br.hasan u posted the same wat i had to do...

with Regards,

 

GORI MOHAMED J,

-----------

சகோதரர் பீ.ஜே அவர்கள் அவரின் இனையதளத்தில் வெளியிட்டதை கீழே காண்க........
 நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா??

கேள்வி

நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.

"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று "மினா" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர்அஸர்,மஃரிப்இஷாஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்." நூல்: முஸ்லிம் 2137  //நபி வழியில் ஹஜ்  பக்கம்: 44

எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர்அசர்மக்ரிப்இஷா" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" என குறிப்பிட்டு  நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள்,அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.  

இது தான் அவர்கள் எழுதிய விமர்சனம். இதன் உண்மைத் தன்மை என்ன?

ரஸ்மின் இலங்கை

பதில்

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பலஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவை அனித்துமே இவர்களுக்கு எதிராகவும் இவர்களின் அறியாமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் உள்ளன. இந்த விஷயமும் அந்தப் பட்டியலில் சேர்கின்றது.

மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான்.  பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.

பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை.

முதலில் முஸ்லிம் நூலில் உள்ளது என்ன என்பதையும்

பீஜே மேற்கண்டவாறு கூறியது ஏன் என்பதையும் நாம் விரிவாக விளக்குவோம்.

 صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (4/ 39(

فَلَمَّا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ تَوَجَّهُوا إِلَى مِنًى فَأَهَلُّوا بِالْحَجِّ وَرَكِبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ

3009

இது தான் முஸ்லிமில் உள்ள வாசகம். ஆலமியா இலக்கப்படி 2137 வது ஹதீஸாகவும் தமிழாக்கத்தில் உள்ளஇலக்கப்படி 3009 வது ஹதீஸாகவும் இடம் பெறும் மிக நீண்ட ஹதீஸில் விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி இது தான்.

எட்டாம் நாள் ஆன போது மினாவுக்குச் சென்றனர். லுஹர்அஸர்மக்ரிப்இஷாபஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுதனர்.

அதாவது இந்த ஹதீஸில் ஒன்பதாம் நாளின் பஜ்ரு என்று கூறப்படவில்லை. நான்கு தொழுகைகளைக் கூறி விட்டு பஜ்ரைக் கூறும் போது ஒன்பதாம் நாள் பஜ்ர் என்றோ அடுத்த நாள் பஜ்ரு என்றோ கூறினால் தான் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்ற கருத்து வரும். மக்ரிப்இஷாபஜ்ர் என்று கூறப்படுவதால் இவர்கள் வாதிடும் கருத்து இந்த ஹதீஸில் இல்லவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நாளின் ஆரம்பம் எது என்று முடிவு செய்ய இதில் ஒன்றுமே இல்லை. 

இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகத்தை வைத்து முடிவு செய்வதாக இருந்தால் லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று கூற வேண்டும். ஏனெனில் எட்டாம் நாள் லுஹர் என்று துவங்கி பஜ்ர் வரை சொல்லப்படுகிறது. அதாவது லுஹரும் எட்டாவது நாள் தான். அசரும் எட்டாவது நாள் தான். மக்ரிபும் எட்டாவது நாள் தான். இஷாவும் எட்டாவது நாள் தான். பஜ்ரும் எட்டாவது நாள் தான் என்ற கருத்து தான் இந்த வாசகத்தில் உள்ளது. அடுத்த லுஹர் வந்தால் தான் மறு நாள் ஆரம்பமாகும். 

இதை ஆதாரமாகக் காட்டும் வரட்டுக் கும்பல் இனிமேல் லுஹரில் இருந்து நோன்பை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.

நம்முடைய கருத்துப்படியும் உலக முஸ்லிம்கள் கருத்துப்படியும் பார்த்தால் லுஹர்அசர் ஒரு நாளாகவும் மக்ரிப் இஷா பஜ்ர் மறு நாளாகவும் ஆகின்றது. இரண்டு நாட்களைத் தான் எட்டாம் நாள் என்ற வார்த்தையால் ஜாபிர் (ரலி)அறிவிக்கிறார்.

வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன.

நம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது.

பிறகு ஏன் அறிவிப்பாளர் இப்படிச் சொல்ல வேண்டும்இதன் விடை மிக எளிதானது.

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாளில் ஆரம்பித்து மறு நாள் வரை தொடரும் செயல்களை முதல் நாளுக்குரியது போல் பேசுவது வழக்கத்தில் உள்ளது. 

எட்டாம் தேதி பகலிலும் பின்னர் இரவிலும் பின்னர் காலையிலும் சாப்பிட்டேன் என்று கூறினால் மறுநாள் காலையை முதல் நாளில் சேர்த்து விட்டார் எனக் கூற மாட்டோம். 

வெள்ளிக்கிழமை ஜும்மாவையும் அசரையும் மக்ரிபையும் இஷாவையும் பஜரையும் தொழுதேன் என்று கூறினாலும் இதே போன்றது தான்.

பேச்சு வழக்கில் ஜாபிர் அவர்கள் இப்படிக் கூறியதால் தான் இரண்டு நாட்களில் நடக்கும் செயலை ஒரு நாளுக்குரியது போல் சொல்கிறார்.

எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும்.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/361/

http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/nalin_armbam_ethu/

பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. பீஜே ஒன்பதாம் நாள் என்று குறிப்பிட்டதும் இதே பேச்சு வழக்கில் தான். வரட்டு ஹிஜ்ரா கூட்டத்தின் உளறல்கள் இல்லாத காலத்தில் இது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது.

இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சு வழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம்.

http://onlinepj.com/books/nabi-vaziyil-nam-haj/ 

நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை. 

 

08.09.2012. 04:42

--------------

From:          இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Sender-time:        Sent at 7:53 PM (GMT-07:00). Current time there: 11:37 PM. ✆

Reply-to:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:              இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

cc:               hijriindia <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

Date:          Sat, Sep 8, 2012 at 7:53 PM

Subject:      [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

சலாம்.

உங்கள் பதிவுக்கு இன்று , 08 , ( SATURDAY < செப்டம்பர் , 2012 , அவரின் இணையத் தளத்தில் கீழ்வரும்  லிங்க் இல் P. ஜைனுல் அப்தீன் அவர்கள் பதில் கொடுத்து ஹிஜ்ரி கம்மிட்டே இன் அறிவு ஆராச்சி பற்றி  குறை கண்டு கேவலமாக கூறுகிறார்.........

 இந்த ஹிஜ்ரி காம்மிட்டீ விவாதத்துக்கு அழைத்தால்  ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் என கூறுகிறார்........எனவே இந்த லிங்கில் போய விரிவாக அவரின் விமர்சனத்தை படித்து சரியான பதில் பதியும்படி கேட்கின்றேன்.............

ஹிஜ்ரி கமிட்டி  பகிரங்கமாக P.ஜைனுல் அப்தீன் அவர்களை பிறை நாளின் ஆரம்பம் நாட்காட்டி விவாவத்துக்கு அழைத்து  எல்லா முஸ்லிம்களுக்கும் சரியான அறிவை வழங்கவும் என   வேண்டுகின்றோம்.......GO TO THIS LINK....

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/

BROTHER,

 

HASAN

----------

From:           Hijri Committee இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Sender-time:        Sent at 6:20 AM (GMT+05:30). Current time there: 12:05 PM. ✆

Reply-to:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:              இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Date:          Sat, Sep 8, 2012 at 6:20 AM

Subject:      Re: [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

எந்த இழையில் கருத்து சொல்ல விரும்புகின்றீர்களோ அந்த இழையில் Reply அல்லது Reply to All என்பதை தேர்வு செய்து பதில் பதிவு செய்யவும்.  அப்போது தான் சம்மந்தப்பட்ட இழையில் உங்கள் கருத்து பதிவாகும்.  இல்லையென்றால்ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு தனியிழை உருவாகும். அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போகும்.

எனவே  நமது குழுமத்தின் ஒழுங்கு முறைகளை பேணி உதவி செய்யவும்.

இப்படிக்கு

 

ஹிஜ்ரி கமிட்டி

--------------

இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

From:           Abdul Rasiq இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Sender-time:        Sent at 10:47 PM (GMT+05:30). Current time there: 12:01 PM. ✆

Reply-to:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

To:              hijriindia <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

Date:           Thu, Sep 6, 2012 at 10:47 PM

Subject:      [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பின் தலைவரான பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள, நபி வழியில் ஹஜ் என்ற நூலின் 44ம் பக்கத்தில் காணப்படுவது வருமாறு:

"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று "மினா" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்." நூல்: முஸ்லிம் 2137  //நபி வழியில் ஹஜ்  பக்கம்: 44

எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" என குறிப்பிட்டு  நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை. 

எனவே நாளின் ஆரம்பம் பஜ்ர் என்பதற்கு குரானிலும் ஹதீஸிலும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றது. அதை ஏற்கனவே சகோதரர். டாக்டர். முஹம்மது அலி அவர்கள் தங்கள் முந்தைய அஞ்சலில் விளக்கமாக பதிந்துள்ளார்.

நேர்வழிக் காட்ட அல்லாஹ்வே போதுமானவன். !

அன்புடன்,

அப்துல் ராஸிக்.

20 ஷவ்வால் 1433. வியாழன்.

(குறிப்பு: இந்த மடலுடன் இணைக்கப்பட்டுள்ள Hajj.pdf, onlinepj விலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில் சமந்தப்பட்ட ஹதீஸ் இடம்பெற்றுள்ள பக்கம் 20. இதே தலைப்பில் வெளிவந்துள்ள அச்சிட்ட புத்தகத்தில் பார்க்க பக்கம் 44.)

-------------

Read 2797 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:08