செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00

உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா?

Rate this item
(9 votes)

கேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான் உங்கள் காலண்டரின் தேதிகளை அமைத்துள்ளீர்கள். UT எனும் இந்த உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை. இந்நிலையில் உங்கள் ஹிஜ்ரி காலண்டரை எப்படி இஸ்லாமிய நாட்காட்டி என்று கூறுகிறீர்கள்?. இந்த கேள்விக்கு விடை என்ன?

 

பதில் : உலகநேர (Universal Coordinated Time - UTC) என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை என்று வாதம் எழுப்பியுள்ளனர். அப்படியானால் இன்று காலை 10 மணி என்கிறோம். நான் நாளை மாலை 5 மணிக்கு வருகிறேன் என்கிறோம். இவ்வாறான நமது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த லோக்கல் மணிநேரக் கணக்கிற்கு (Local Time) குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா? என்பதையும் இவர்களே விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

உலக நேரம் (UT) என்பதை ஏதோ கழிவுகட்டை நேரமாக சித்தரிக்கும் போக்கு இக்கேள்வியில் தெரிகிறது. நம்மைப் பொறுத்தவரை Local Time, Universal Time போன்ற எந்த நேரக் கணக்கீட்டையும் வெறுப்பவர்கள் அல்லர். அந்தந்த நேரக்கணக்கீட்டை எதுஎதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதுஅதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறோம். கால நேரத்தை இழிவாக பேசக்கூடாது என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்கிறோம்.

நேரங்கள் குறித்து பல்வேறு குர்ஆன் வசனங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியும், கணக்கிடும்படியும் உள்ளதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான் (55:5, 6:96).

மேலும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். ஆனால் நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

எனவே நேரக் கணக்கீடுகளில் எதையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. உலக நேரம் (UT) என்பதும் இஸ்லாத்திற்கு சொந்தமானதுதான் என்பதை புரிந்து கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானது.

சந்திர மாதத்தின் இறுதிநாள் சங்கமதினம். சங்கமம் என்பது சர்வதேச சமூகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான சர்வதேச நிகழ்வு. அந்த சங்கம நிகழ்வை சர்வதேச நேரக் கணக்கீடான உலக நேரத்தில்தான் (UT) குறிப்பிட வேண்டும். இந்த அறிவியலின் அடிப்படையான விஷயத்தை விபரம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

வியாபார நோக்கில் தங்கள் இயக்கத் தலைமை அச்சடித்து வருடந்தோரும் வெளியிடும் குத்துமதிப்பு காலண்டர்களின் தேதிகள், பிறைகளின் வடிவநிலைகளோடு முரண்படுவது பொதுமக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதில் விரக்த்தியுற்றவர்கள் மக்களை திசை திருப்புவதற்கு உலகநேரத்தை (UT) மையப்படுத்தி 'ஹிஜ்ரி காலண்டரை இஸ்லாமிய நாட்காட்டி என்று எப்படி கூறுகிறீர்கள்?' என்று விமர்சிப்பதின் சூழ்ச்சமம் நமக்கு புரியத்தான் செய்கிறது.

Read 1992 times