செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00

ஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

Rate this item
(8 votes)

கேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று விமர்சனம் செய்வது பற்றிய விளக்கம் என்ன?

 

பதில் : குர்ஆன் சுன்னாவின் அசைக்க முடியாத ஆதாரத்துடனும், துள்ளியமான விஞ்ஞானத்தின் அடைப்படையிலும் அமைந்ததே அல்லாஹ் வழங்கிய மனிதகுலத்தின் காலண்டரான நமது ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும். இத்தகைய இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை, ஒட்டுமொத்த மனிதர்களுக்காகவும் அல்லாஹ் வழங்கியுள்ள காலண்டரை, போப் கிரிகோரி தயாரித்த கிருஸ்தவ ஆங்கில நாட்காட்டியோடு அனுவின் முனையளவுகூட ஒப்பிட்டுக் கூற இயலாது.

காரணம், நமது ஹிஜ்ரி நாட்காட்டியில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி ஒவ்வொரு மாதங்களிலுள்ள நாட்களின் எண்ணிக்கை 29 அல்லது 30 ஆகவே உள்ளன. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் மாதங்களிலுள்ள தேதிகளின் எண்ணிக்கை 28, 29, 30 மற்றும் 31 என்று பலவாறாக அமைந்துள்ளன. மேலும் இந்த கிரிகோரியன் காலண்டர் இஸ்லாம் தடுத்துள்ள நட்சத்திர இலக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

சந்திரனின் 'அஹில்லாஹ்' மனிதர்களுக்கு தேதிகளை அறிவிக்கும் (2:189) மற்றும் சந்திரனின் 'மனாஜிலை' வைத்து ஆண்டுகளை கணக்கிட வேண்டும் (10:5). இவை போன்ற அல்குர்ஆனின் கட்டளைகளுக் கிணங்க பிறைகளின் வடிவ நிலைகளால் ஆனதே ஹிஜ்ரி காலண்டரின் தேதிகள். ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளுக்கும், பிறைகளின் படித்தரங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரின் மாதங்களிலுள்ள நாட்களின் எண்ணிக்கையில் எவ்வித கூட்டலும், கழித்தலும் தேவையற்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கண்கீட்டில்கூட அதன் துள்ளியம் மாறாதது. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை, லீப் நாளாக ஒரு நாளை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒவ்வொரு தேதியும் குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கிணங்க ஃபஜ்ரிலிருந்து (விடியலிலிருந்து) துவங்குகிறது. ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகள் நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது.

இவ்வாறு ஹிஜ்ரி நாட்காட்டிக்கும், கிருஸ்தவ நாட்காட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் பட்டியல் மிக நீளமானது. எனவே ஹிஜ்ரி நாட்காட்டி கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்ற தரம்தாழ்ந்த விமர்சனத்தின் உண்மை நிலையை நியாயமுடனும், நீதியுடனும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கிரிகோரியினின் கிருஸ்தவ நாட்காட்டியைத் தூக்கிப் பிடித்து ஹிஜ்ரி நாட்காட்டியை எப்படியேனும் மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கில் பலான இயக்கத் தலைவர் பேசிய பேச்சுக்களை யாரும் மறக்க இயலாது. ஆங்கில காலண்டர் கிருஸ்தவ நாட்காட்டி அல்ல, மாறாக அது ஒரு சூரியக் காலண்டர்தான் இதைப் பின்பற்றுவது தப்பில்லை என்றார். மேலும் ஆங்கில காலண்டர் பின்பற்றுவதற்கு லேசானது, லேசானதுதான் மார்க்கம் என்றும் கூறினார். ஸஹாபாக்கள் இஸ்லாமிய ஆண்டுகளின் எண்ணிக்கைளை நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து துவக்கியதில் எவ்வித லாஜிக்கும் இல்லை என்றார். இவ்வாறான அபத்தக் கருத்துக்களை எல்லாம் மார்க்கம் என்று போதிக்கப்பட்டு அதிலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள் யாரும் ஹிஜ்ரி நாட்காட்காட்டியைப் பற்றி விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும், தகுதியும், உரிமையும் இல்லாதவர்களாவர்.

'ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகளை இறைவன் அமைத்துள்ளான்' என்று ஆதாரமற்ற, வடிகட்டிய பொய்யைக்கூட துணிந்து சொல்பவர்களிடம் இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களைத் தவிர வேறு எவற்றை நாம் எதிர்பார்க்க முடியும்?

Read 1823 times Last modified on செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 06:39