வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:18

பி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில்

Rate this item
(0 votes)

பி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007

 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும்! பிறை சம்பந்தமாக சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.தெளிவு தரவும்.

தாமதிக்காமல் பதில் தரவும்.பி.கே.முஹ்யித்தீன் Sun, Sep 30, 2007

1.ஒவ்வொரு மாதமும் புதிய பிறை எங்கு, எந்த நாட்டில் பிறக்கிறது என்று அறிய முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு?

உலக நேர (Universal Time) அடிப்படை நேரத்தை வைத்து பிறை எந்த நாட்டில் பிறக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வரும் ஷவ்வாலுக்கான பிறை பிறக்கும் நேரம் 05:01UT நேரம் ஆகும். பூமியை 360டிகிரி என கணக்கிட்டு அதை 24 மணி நேரத்தில் வகுத்து 15 டிகிரி க்கு 1 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக தேதி கோட்டில் இருந்து கணக்கிட்டு வந்தால் ஷவ்வாலுக்கான பிறை பிறக்கும் இடம் தாய்லாந்து, ஹனாய், ஜகார்த்தா (+7 hours) போன்ற நாடுகளுக்கு மேல் தான் பிறக்கிறது. உலக தேதி மாறும் நேரம் பகல் 12.00 மணிக்கு தான். அந்த இடத்தில் 00.00hrs போட்டு கணக்கிட்டால் தான் பிறை பிறக்கும் சரியான இடத்தை கண்டுபிடிக்க முடியும். அதிலும் உலக அளவில் பல சதி வேலைகள் நடைபெற்று பிறைபிறக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் இருக்கிறார்கள்.

2.புதிய பிறை பிறந்ததிலிருந்து மாதம் தொடங்குகிறதா? அல்லது பார்வைக்கு தென்படுவதிலிருந்து துவங்குகிறதா? பிறை பிறந்ததிலிருந்து எத்தனை மணி நேரம் கழித்து பார்வைக்கு புலனாகும்?

புதிய பிறை பிறக்கும் நேரத்தில் இருந்து நாள் துவங்காது. நாளுக்கென்று ஒரு ஆரம்ப நேரம் எல்லை முடிவு எல்லை உள்ளது. அந்த எல்லையில் இருந்து தான் நாள் துவங்கும். இந்த புதிய பிறை பிறந்ததை நாம் பிறை பிறந்த நாள் என குறிப்பிடுவோம். (Date of Birth) நமக்கு மாதத்தின் முதல் நாள் (First day of the Month) எது என்பது தான் பிரச்சினை. பிறை பிறந்த நாள் 0 (பூஜ்யம்) ஆகும். இதற்கு அடுத்த நாள் மாதத்தின் முதல் நாளாகும். மேலும் நமக்கு அல்லாஹ் பிறையின் படித்தரங்களை தான் நாட்களுக்கான தேதி என அறிவிக்கிறானே தவிர கண்ணால் பிறை பார்த்து தான் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என எங்கும் கூறவில்லை. நபி(ஸல்) பிறையை கண்ணால் பார்த்து மாதத்தை ஆரம்பித்தாக ஒரு ஆதாரம் கூட இல்லை. எப்படி பிறை பார்க்க வேண்டும் என்பதை கூட நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை.

தற்போது ஆங்கிலத்தில் நியூ மூன் என்று கூறப்படும் புதிய சந்திர சுழற்சி மாதம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஓரே நேர்கோட்டிற்கு வரும் நேரத்திலிருந்து துவங்கி விடுகிறது. இதை மக்கள் புதிய பிறை என கூறிவருகிறார்கள். ஹதீஸ்களில் பார்த்தால் இதை ஹிலாலு ஷவ்வால், ஹிலாலு ரமளான் என அழைப்பதை பார்க்க முடியும். சந்திரன் ஒரு மாதத்திற்கான சுற்றுவட்ட பாதையை முடித்து புதிய சுற்றை துவங்கும் நாள் தான் நியூ மூன் டே எனப்படுவதாகும்.

தற்போதைய வான மண்டலத்தில் நாம் பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது பிறை பிறந்து 24 மணிநேரமாவது ஆகியிருக்க வேண்டும். அதன் பிறகு தான் அது கண்பார்வைக்கு தெரியவரும். இதே பிறையை நபி (ஸல்) காலத்தில் கண்ணால் பார்க்க வாய்ப்புகள் பல இருந்தது. அன்றைய வான மண்டலம் இவ்வளவு மோசமாக இல்லை. எனவே 36:39 (வுர்ஜூனல் கதீம்) உலர்ந்து வளர்ந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை இதற்கு நாங்கள் படித்தரங்களை வைத்திருக்கிறோம் என அல்லாஹ் கூறும் கடைசி படித்தரத்தையும் கண்ணால் பார்க்க வாய்ப்புகள் இருந்தது. நமக்கு படித்தரங்களை பார்ப்பது தான் அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தந்த வழியே தவிர இன்று முஸ்லீம்கள் நம்பிக்கொண்டிருக்கும் வெறும் பார்வை இஸ்லாமிய மாதங்களை துவங்கும் வழியல்ல.

3.துல்ஹஜ் பிறை யுனிவர்சல் நேரம் மாலை 5:40- க்கு பிறப்பதாக ஹிஜ்ரா காலண்டரில் உள்ளது. அப்படியென்றால் மறுநாளே முதல் பிறையா? இக் கணக்கு சரிதானா? விளக்கம் தரவும்.

ஞாயிற்று கிழமை உலக நேரம் மாலை 5.40 க்கு நேர்கோட்டிற்கு சூரியன் சந்திரன் பூமி வரும் நேரம். சந்திரன் துல்ஹஜ் மாதத்திற்கான புதிய சுற்றை ஆரம்பிக்கும் நேரம். துல் காயிதா மாதத்தின் முப்பதாவது நாளுக்கான மன்ஸிலும், துல்ஹஜ் மாதத்திற்கான 0 (பூஜ்யம்) உள்ள ஒரு மன்ஸில் ஆகும். இதை தான் அல்லாஹ் 36:39 ல் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை அதற்கு படித்தரங்களை வைத்திருக்கிறோம். பேரீத்தம் பாளையையோ, தென்னை மர பாளையையோ பார்த்து சிந்தித்தால் பேரீத்தம் பழத்தை பரித்த பிறகு அதில் உள்ள பாளை இருபக்கமும் பிறை போன்று கீழே விழுந்து கிடப்பதை நாம் நமது சிறிய வயதில் பார்த்திருக்காலம். நம் ஊரில் தென்னை மரத்தில் தேங்காய் வருதற்காக பாளை வெடித்து தேங்காய் விளைந்து அதை பரித்ததும்; அந்த காய்ந்த பாளையை பார்த்தால் அதுவும் இரு பிறை வடிவங்களை அதில் பார்க்கலாம். அதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமை துல்ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும்.

4.ஸவ்வால் பிறை அதிகாலையிலேயே பிறப்பதால் இந்தியாவிலும் 11ந் தேதியே பிறை பார்வைக்க்கு தெரியும் அல்லவா?

மீண்டும் நினைவு படுத்துகிறேன். பிறந்த பிறையை கண்ணால் பார்ப்பதல்ல நபி வழி. அதன் படித்தரங்களை பார்த்து கணக்கிட்டு அது எந்த தேதியை மக்களுக்கு சொல்கிறதோ அந்த கிழமைக்கு(நாளுக்கு) நாம் அந்த தேதியை வைத்திருக்க வேண்டும். இதை தான் 2:189, 10:5 வசனமும், நபி (ஸல்) சொன்ன ஸூமூ லி ரூஃயத்என்ற அரபிப்பதம் குறிக்கிறது.

ஷவ்வால் பிறை இந்தியாவில் சூரிய அஸ்தமத்திற்கு பின் இருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் அது சூரிய அஸ்தமனததிற்கு முன்பாகவே இந்தியா சவூதி போன்ற நாடுகளில் அஸ்தமனம் ஆகிவிடுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்வைக்கு தெரியும் என்பதால் அவர்கள் 12ஆம் தேதி வெள்ளிகிழமை ஷவ்வால் மாதத்தை துவக்க முடிவு செய்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இந்த பார்வையை சொல்லவில்லை. அதன் படித்தரங்கள் மாறி மாறி வருதை தான் பார்த்து வர சொன்னார்கள் அந்த அடிப்படையில் 11 ஆம் தேதி பழைய படித்தரத்தில் இருந்து புதிய படித்தரத்திற்கு மாறும் நிகழ்வு நடைபெறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ( 12.10.2007 ) 1428ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

5.பிறை ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்டில் பிறக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான வெப்சைட் முகவரி தரவும். நீங்கள் எவ்வாறு அறிகிறீர்கள்?

கீழ்கண்ட முகவரியில் இது சம்மந்தமான விபரங்களை அறியலாம். சந்திரனின் படித்தரங்கள் நிரூபிக்கப்பட்ட விஞ்சான விஷயத்தில் உள்ளதாகும்.

http://www.timeanddate.com/calendar/aboutmoonphases.html

http://www.timeanddate.com/calendar/moonphases.html

Read 2215 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:06