Print this page
வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00

ஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு

Rate this item
(2 votes)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

சூரியனும், சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இருக்கின்றன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அல்குர்ஆன் (55 : 5,13)

ஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ்

 

          தேதி : 1-ஷவ்வால்-1438 – ஞாயிற்றுக் கிழமை (25-06-2017)
          நேரம் : காலை 7:15 மணி முதல்


அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதற்கு, குர்ஆன் சுன்னாவின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது - அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப் பிறை 'உர்ஜூஃனில் கதீம்' 23-06-2017 அன்று வெள்ளிக்கிழமை ஆகும். 24-06-2017 சனிக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும். இவ்வருடத்தின் ரமழான் மாதம் ஜூன்-24 சனிக்கிழமை அன்று 30 தினங்களோடு நிறைவடைகிறது.

எனவே ஜூன் 25-ஆம் தேதி (25-06-2017) ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் நோன்புப் பெருநாள் தினம். பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடைசெய்துள்ளது. எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனைப் புகழ்ந்து, ஏழைகளுக்கு உணவளித்து, ஈகைத் திருநாள் என்னும் நோன்புப் பெருநாளை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகிறோம்.

ஜூன்-25 ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ஷவ்வால்-1 நோன்புப் பெருநாள் என பல நாடுகள் முற்கூட்டியே முடிவு செய்துவிட்ட செய்தியை அறிய முடிகிறது – அல்ஹம்துலில்லாஹ். சவுதி அரேபிய அரசாங்கம் பின்பற்றி வரும் புதிய உம்முல்குரா காலண்டர் கணக்கீட்டின் படியும் ஞாயிற்றுக்கிழமைதான் நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஜூன் 24-ஆம் தேதி சனிக்கிழமை அமாவாசை அன்று மஃரிபில் பிறை பார்க்கப்பட்டதாகவும் அவர்கள் அறிவிக்கலாம். எனினும் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 நாட்களைக் கொண்டது. முப்பது நாட்கள் முழுமையாக நோன்பு நோற்காதவர்கள், விடுபட்ட நோன்பை பெருநாளுக்குப் பின்னர் களா செய்துகொள்ள வேண்டுகிறோம்.

மக்களே! ஹிஜ்ரி கமிட்டியின் சத்தியப் பிரச்சாரம் சரியானதாக இருப்பினும் அதை எப்படி நடைமுறை படுத்துவது? என்ற சிந்தனையும், தயக்கமும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்திருப்பின் அதை துணிந்து செயல்படுத்திட முன்வருமாறு வேண்டுகிறோம். உண்மையை வெளிப்படுத்துவோரும், தவறுகளைத் திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள். ஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்க வேண்டும். சத்தியத்திற்கே சான்று பகர வேண்டும். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திட, ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலைபெறச் செய்திட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம். அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read 1526 times Last modified on வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 11:04