அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அரஃபா நோன்பு :
துல்ஹிஜ்ஜா-9 புதன் கிழமை (29-07-2020)
ஹஜ்ஜூப் பெருநாள் :
துல்ஹிஜ்ஜா- 10 வியாழக் கிழமை (30-07-2020)
இவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது.
கடந்த 20-07-2020 அன்று திங்கள் கிழமை புவிமைய சங்கம (அமாவாசை) தினத்தோடு துல்கஃதா மாதம் 29 நாட்களில் முடிவடைந்தது.
அதற்கு அடுத்தநாள் செவ்வாய்க் கிழமை (21-07-2020) துல்ஹிஜ்ஜா பிறை 1 ஆகும்.
அன்று சூரியனைப் பின் தொடர்ந்து சந்திரனும் கிழக்குத் திசையில் உதித்து, அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளித்தது. அந்தப்பிறை அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமார் 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.
சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படியே அமைந்துள்ளன (55:5). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5).
இதன் அடிப்படையில் துல்ஹிஜ்ஜா 9-வது நாள் அரஃபாநாள் புதன்கிழமை (29-07-2020), துல்ஹிஜ்ஜா 10-வது நாள் ஹஜ்ஜூப் பெருநாள் வியாழக்கிழமை (30-07-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).
மாறாக சவுதிஅரேபியா அரசு அறிவிக்கும் தேதிகளில்தான் அரபா நாளாகவும், ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகவும் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு எவ்வித மார்க்க ஆதாரங்களும் இல்லை.
உதாரணமாக ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமையில் மட்டுமே தொழ வேண்டும். அதற்கு மாறாக ஒரு அரசாங்கமோ, இயக்கங்களோ வெள்ளிக்கிழமை அல்லாத மற்றொரு நாளில் ஜூம்ஆ தொழுகையை அறிவித்தால், அறிவிக்கப்பட்ட அந்த நாள் வெள்ளிக் கிழமையாக மாறிவிடாது. குறிப்பாக சவுதி அரசாங்கம் கடந்த காலங்களில் ஹஜ்ஜூவுடைய தேதியை அறிவித்துவிட்டு, பின்னர் அதை மாற்றிய நிகழ்வுகளையும் நாம் அறிவோம்.
எனவே பெருநாள் தினமான வியாழக்கிழமை (30-07-2020) அன்று இறைவனைப் புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து தியாகத் திருநாள் என்னும் ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடிட அழைப்பு விடுக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண், ஹிஜ்ரி கமிட்டி,
State Head Office : 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி – 627103. திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்பு எண்கள்: 99626 22000, 99943 44292, 98437 77157, 99524 14885