சனிக்கிழமை, 16 மே 2020 00:00

யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..!

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 7/7

ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான அமாவாசை எனும் புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) பிறை பிறந்து, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும்போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, புதிய மாதத்தை தொடங்கும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.

யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

And it was evening and it was morning, one day (Genesis 1:5). It says God called the light "day," and the darkness he called "night." Thus evening came, and morning followed-- the first day.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)

Jewish Calendar Date : When God created time, He first created night and then day. Therefore, a Jewish calendar date begins with the night beforehand. While a day in the secular calendar begins and ends at midnight, a Jewish day goes from nightfall to nightfall. Shabbat begins on Friday night..(www.chabad.org)

யூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)

All Jewish holidays begin the evening before the date specified on most calendars. This is because a Jewish "day" begins and ends at sunset, rather than at midnight. If you read the story of creation in Genesis Ch. 1, you will notice that it says, "And there was evening, and there was morning, one day." From this, we infer that a day begins with evening, that is, sunset. Holidays end at nightfall of the date specified on most calendars; that is, at the time when it becomes dark out, about an hour after sunset. (www.jewfaq.org)

அனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)

Shabbat is observed from a few minutes before sunset on Friday evening until the appearance of three stars in the sky on Saturday night. (wikipedia.org)

சபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)

The first time that the waxing crescent of the Moon is visible (from Jerusalem) marks the begining of a Jewish month, called Rosh Chodesh ("head of the month"). As soon as the new moon was visible as a waxing crescent, the Sanhedrin (The Supreme Rabbinical Court) in Israel was informed and Rosh Chodesh was formally announced. The Day after new moon was sighted was a festival, heralded with sounding of shofar and commemorated with convocations and sacrifices. (www.hebrew4christians.com)

ரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும்.(www.hebrew4christians.com)

திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்டு வரும் குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும், கட்டுரை ஆக்கங்களையும் www.mooncalendar.in இணையதளத்தில் காணலாம்.

Read 922 times