வியாழக்கிழமை, 14 மே 2020 00:00

ஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6O/7

வாதம் - 15 : ஃபித்னாவின் வாசல்

حدثنا علي بن عبد الله ، حدثنا سفيان ، حدثنا جامع ، عن أبي وائل ، عن حذيفة ، قال : قال عمر رضي الله عنه ، من يحفظ حديثا عن النبي صلى الله عليه وسلم في الفتنة ؟ قال حذيفة أنا سمعته يقول : ' فتنة الرجل في أهله وماله وجاره ، تكفرها الصلاة والصيام والصدقة ' ، قال : ليس أسأل عن ذه ، إنما أسأل عن التي تموج كما يموج البحر ، قال : وإن دون ذلك بابا مغلقا ، قال : فيفتح أو يكسر ؟ قال : يكسر ، قال : ذاك أجدر أن لا يغلق إلى يوم القيامة ، فقلنا لمسروق : سله أكان عمر يعلم من الباب ؟ فسأله فقال : نعم ، كما يعلم أن دون غد الليلة ழூ صحيح البخاري - كتاب الصوم باب : الصوم كفارة - حديث : ‏1807‏

ஹூதைஃபா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

'ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரழி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!' என்றேன். அதற்கு உமர் (ரழி), 'நான் (சோதனை என்னும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை. கடலலை போல் தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்!' என்றார்கள். அதற்கு நான் 'உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது!' என்று கூறினேன். 'அது திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என்று உமர்(ரழி) கேட்டார்கள். நான் 'உடைக்கப்படும்!' என்று பதிலளித்தேன். 'அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது!' என்று உமர்(ரழி) கூறினார்.

'அந்த வாசல் யார் என்று உமர்(ரழி) அறிந்திருந்தாரா என்று ஹூதைஃபா(ரழி) அவர்களிடம் கேளுங்கள்!' என்று மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹூதைஃபா (ரழி) 'ஆம்! நாளை என்ற ஒரு நாள் உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!' என்று பதிலளித்தார்!' என அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

விளக்கம் :

• மேற்படி ஹதீஸானது புகாரி தமிழ் மொழிபெயர்ப்பில் 525, 1435, 1895, 3586, 7096 போன்ற எண்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் பவ்வேறு சொற்றொடர்கள் இடம்பெற்றுள்ளன. மாற்றுக் கருத்துடையவர்களின் மொழிபெயர்ப்பை வைத்து பார்த்தாலும்கூட இதில் எந்த ரிவாயத்தும் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்பதற்கு ஆதாரமாக அமையவில்லை.

• மேற்படி ரிவாயத்துகளில் 525-வது ஹதீஸ் வாசகத்தை, 'ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல உமர் (ரழி) அவர்கள் அறிவார்கள்' என்று மொழிபெயர்த்துள்ளார்கள். நாமும் பகலுக்கு பின்னர்தான் இரவு என்று சொல்கிறோம். அல்குர்ஆன் 36:40-வது வசனத்தின்படி ஒருநாள் என்பதில் பகல்தான் முந்தியது, இரவு பிந்தியது என்கிறோம். 'பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல உமர் (ரழி) அவர்கள் அறிவார்கள்' என்ற மாற்றுக் கருத்துடையோரின் மொழிபெயர்ப்புகூட நமக்குதான் சாதகமாக அமைகிறது.

• அடுத்ததாக 1435, 1895, 3586 –வது எண்களில் இடம்பெறும் ஹதீஸ் வாசகத்தை 'ஆம் நாளை காலை வருவதற்கு முன்னர் இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல உமர் (ரழி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள்' என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள். இதுவும் ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என்பதற்கு ஆதாரமாக அமையாது, அதற்கு எதிராகத்தான் அமைகிறது. காரணம் மஃரிபிலிருந்து ஒரு நாளை தொடங்கினால், தொடர்ந்து வரும் காலைப் பொழுதை நாளை காலைப் பொழுது என்று கூறக்கூடாது. அது இன்றைய காலைப் பொழுது என்றே குறிப்பிட வேண்டும். 'ஆம் நாளை காலை வருவதற்கு முன்னர் இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல உமர் (ரழி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள்' என்ற சொற்றொடரை வைத்தே காலையாக விடிந்து விட்டாலே அது அடுத்த நாள்தான் என்பது தெளிவாகிறது. அதிகாலை விடியல் நேரமான ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாளை தொடங்க வேண்டும் என்பதற்குதான் இது ஆதாரமாக அமையும்.

• இதில் இடம்பெறும் லைலத் என்பதற்கு இரவு என்று மொழிபெயர்க்காமல் ஆம்! நாளை என்ற ஒரு நாள் உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!' என்று பதிலளித்தார்!' என்று சரியாக மொழிபெயர்த்தால் எந்தக் குழப்பமும் வராது.

Read 717 times