வியாழக்கிழமை, 14 மே 2020 00:00

ஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்.

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6N/7

வாதம் - 14 : ஹூதைபிய்யாவில் மழை பெய்தது

حدثنا إسماعيل ، حدثني مالك ، عن صالح بن كيسان ، عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود ، عن زيد بن خالد الجهني ، أنه قال : صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على إثر سماء كانت من الليلة ، فلما انصرف النبي صلى الله عليه وسلم أقبل على الناس ، فقال : ' هل تدرون ماذا قال ربكم ؟ ' قالوا : الله ورسوله أعلم ، قال : ' أصبح من عبادي مؤمن بي وكافر ، فأما من قال : مطرنا بفضل الله ورحمته ، فذلك مؤمن بي كافر بالكوكب ، وأما من قال : بنوء كذا وكذا ، فذلك كافر بي مؤمن بالكوكب ' ழூ صحيح البخاري - كتاب الجمعة أبواب الاستسقاء - باب قول الله تعالى : وتجعلون رزقكم أنكم تكذبون حديث : ‏1004‏

ஸைத் இப்னு காலித் (ரழி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹூதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸூபுஹூத் தொழுகை நடத்தினார்கள், அப்போது மழைக்கான அறிகுறிகள் வானத்தில் இருந்தன. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ''உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''என்னுடைய அடியார்களில் சிலர் என்னை நம்பியவர்களாகவும், என்னை நிராகரிப்பவர்களாகவும் காலைப் பொழுதை அடைந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர் என்று அல்லாஹ் கூறினான்'' எனக் குறிப்பிட்டார்கள்.

விளக்கம் : இந்த வாதத்திலும் இடம்பெறும் லைலத் என்ற சொல்லுக்கு இரவுதான் என்று தவறாக விளங்கியதால் ஏற்பட்டுள்ள சந்தேகம் இது. லைலத் என்ற சொல்லை முழுமையான ஒரு நாள் என்ற பொருளில் மொழிபெயர்த்தால் குழப்பம் நீங்கிவிடும்.

Read 640 times Last modified on வியாழக்கிழமை, 14 மே 2020 03:59