மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.
பகுதி : 3 / 7
பகல், இரவு உள்ளடக்கிய ஒருநாள் என்பதில் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகள் உள்ளன. அந்த ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளில் அஸ்ருத் தொழுகையானது நடுத்தொழுகை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். அஸ்ருத் தொழுகைதான் நடுத்தொழுகை என்றால், ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை ஃபஜ்ரு, லுஹர், அஸர், மஃரிபு, இஷா என்றுதான் வரிசைப்படுத்திட இயலும்.
ஒருநாளுக்குரிய ஐந்து ஃபர்ளான தொழுகைகளில்; ஃபஜ்ரு தொழுகைதான் முதல் தொழுகை என்றால் நிச்சயமாக மஃரிபு வக்திலிருந்து ஒருநாளை தொடங்கிடவே முடியாது. மாறாக ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாள் தொடங்குகிறது என்பதை தெளிவாக அறியலாம். இதை முன்னரே தெளிவாக விளக்கியுள்ளோம்.
பகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46
தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் (2:238)
நடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகைதான் என்பதை கீழ்க்காணும் பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது.
எண் | கிதாபின் பெயர் | ஹதீஸ் எண் | அறிவிப்பாளர் |
---|---|---|---|
1 | புஹாரி | 6042 | அலீ (ரழி) |
2 | ஷரஹ் மஆனில் ஆஸார் | 617 | அமர் பின் ராஃபிஃ |
3 | மஆரிஃபதுஸ் சுனன் | 716 | ஆயிஷா (ரழி) |
4 | அஹ்மது | 18295 | பரா பின் ஆஜிப் (ரழி) |
5 | தஃப்ஸீரத் தபரி | 4936 | ஹஃப்ஸா (ரழி) |
6 | அஹ்மது | 19622 | ஷம்ரா பின் ஜூன்துப் (ரழி) |
7 | தஃப்ஸீர் சுனன் சயீத் | 376 | அபூஹூரைரா (ரழி) |
8 | தஃப்ஸீர் சுனன் சயீத் | 383 | இப்னு அப்பாஸ் (ரழி) |
9 | முஸ்லிம் | 1032 | ஆயிஷா (ரழி) |