சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 00:00

சங்கம நாளில் பிறை தெரிந்ததா?

Rate this item
(0 votes)

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா?

இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அமாவாசை (சங்கம) அன்று பிறை கண்களுக்குத்தென்பட்டதாம்! இது என்னங்கபுதுக்குழப்பம்? பிறை தெரியாமல்இருப்பதால்தானே அதற்கு அமாவாசை (சங்கம) நாள் என்றுபெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களைவிஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை (சங்கம)பிறை என்ற அவதூறை தற்போதுகிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையைஅறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப்படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளைஅறிந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான்ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்கவேண்டும் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம்பிரச்சாரம் செய்தும், பின்பற்றியும்வருகிறோம். இதற்கு குர்ஆன்சுன்னாவிலிருந்து தக்க ஆதாரங்களைசமர்ப்பித்துள்ளோம்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட வடிவநிலைகளைக் கொண்ட பிறை படித்தரங்கள் நமக்குஅந்தந்த நாளின் தேதியை அறிவிக்கிறது.அவற்றை நாம் தொடர்ந்து கவனித்து வந்தால்மாதத்தின் இறுதி நாளுக்கு முந்தையநாள்வரையுள்ள பிறையை புறக்கண்களால் பார்க்கமுடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் என்றால் 29 நாட்கள் பிறைகளைப்பார்க்க முடியும். அதுபோல 29 நாட்கள்தான்அந்த மாதத்திற்கு உண்டு என்றால் 28 பிறைகளை அந்த மாதத்தில் நாம் பார்க்கமுடியும். அல்குர்ஆன் கூறும் (36:39) உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற சந்திரனின் இறுதி வடிவம்மாதத்தின் இறுதிநாளுக்கு முந்தைய நாள்ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில்புறக்கண்களுக்கு காட்சியளிக்கும்.

'உர்ஜூஃனில் கதீம்' என்ற புறக்கண்ணால்பார்க்க இயலும் சந்திரனின் அந்த இறுதிப்படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமையசங்கமம் (Geocentric Conjunction) உடையதினமாகும். அமாவாசை (சங்கம) என்று மக்கள்புரிந்துள்ள புவிமைய சங்கமம் என்பதுஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒருகோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில்சங்கமிக்கும் தினமாகும்.

அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction) தினத்தில் தேய்பிறை மற்றும்வளர் பிறையை பொதுவாக புறக்கண்களால்பார்க்க முடியாதவாறு அது மறைக்கப்படும் .இதற்குத்தான் 'கும்ம', 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய' அல்லது 'குபிய'வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம்தந்துள்ளார்கள்.

இந்த அமாவாசை (சங்கம) நாளுக்கு அடுத்த நாள்சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குதிசையில் தோன்றி (உதித்து) மேற்குதிசையில் அந்தப்பிறை மறையும் போதுநமக்குக் காட்சியளிக்கும். அந்த நாள்புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்குசாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சிலபகுதிகளில் அந்த முதல் பிறைபுறக்கண்களுக்குத் தென்படும். இதுவே முதல்நாளுடைய சந்திரனின் படித்தரமாகும்.

முதல் நாளுக்குரிய அந்தப் பிறை அந்த முதல்நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை(சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்துவிட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்)அவர்களும் சந்திரனில் ஏற்படும்படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ்- மக்களுக்குத் தேதிகளை காட்டும் (Calendar For Mankind) என்று இந்த உம்மத்திற்குவலியுறுத்தியதாகும்.

அல்லாஹ்வின் உதவியால் நமதுபிரச்சாரங்களின் விளைவாக விழிப்படைந்தமக்கள் அல்லாஹ்வின் நாட்காட்டியின்முக்கியத்துவத்தை உணரத் துவங்கி விட்டனர்.பலர் சரியான நாட்களில் தங்கள் அமல்களைஅமைத்து வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.

இதை அறிந்த ஷைத்தான் தனது சகாக்கள் மூலம்நமது பிரச்சாரங்களையும், ஹிஜ்ரிநாட்காட்டியையும் பொய்யாக்கிட தொடர்ந்துமுயன்று வருகிறான். உலகின் ஒவ்வொருபகுதிகளிலும் தனது ஏஜென்டுகளை நியமித்துஅவர்களை ஏவிவிட்டு ஹிஜ்ரி நாட்காட்டிக்குஎதிராக பல தவறான கருத்துக்களை போதித்துமக்களிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்திவருகிறான். அதன் வெளிப்பாடே அமாவாசை (சங்கம) அன்றுபிறையை புறக்கண்ணால் பார்க்கலாம் என்றவெற்றுக் கோஷத்தின் பின்னனியாகும்.

குறிப்பாக சமீபகாலமாக ஜோர்டான்நாட்டிலிருந்தும் இதுபோன்ற பல பொய்த்தகவல்கள் ஜோராக ஜோடிக்கப்படுகின்றன.அமாவாசை (சங்கம) அன்று தேய்பிறை கிழக்கில்புறக்கண்களுக்கு சர்வசாதாரணமாகத்தெரிகின்றது என்று ஜோர்டான் நாட்டின் ICOP என்ற குழுவினர் தங்கள் இணையதளங்களின்மூலம் தொடர்ந்து பொய்ச் செய்திகளை பரப்பிவருகின்றனர். 'முகம்மது ஒதே' என்பவரின்வழிகாட்டுதலில் அமைந்தicoprojectஎன்ற இணைதளம், காலித் சவுகத் என்பவரின்moonsighting இணையதளம், makkahcalendar என்ற பெயரில் இயங்கும் மற்றொரு இணையதளம்போன்றவை இத்திருப்பணியை செய்து வருகின்றன.

மேற்படி இணையதளங்கள் வெளியிடும் போலிவிண்ணியல் தத்துவ முத்துக்களை தமிழில்பரப்பிட தமிழகத்திலும் அவர்களுக்குஏஜெண்டுகள் கிடைத்துள்ளனர். மேற்படி போலிவிஞ்ஞானிகளின் பிறை அறிவிப்புகளைஅலட்சியம் செய்து புறக்கணித்து உங்களுடையஈமானை பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களைக்கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு குழுவாக செயல்படும் மேற்படியார்கள், கடந்த 2013 வருடம் ஜூலை 8-ஆம் தேதிதிங்கள் கிழமை அன்று அமாவாசை (சங்கம) என்னும்புவிமைய சங்கம நாளிலும் இதுபோன்றகுழப்பத்தை ஏற்படுத்தினர். அதாவது அமாவாசை (சங்கம)தினமான அன்று சூரியன் மறைந்த பின்னர்தெஹீட்டி என்ற தீவில் வளர்பிறைபார்க்கப்பட்டது என்று ஒரு போட்டோவோடுஇதுபோன்றே செய்தியும் வெளியிட்டனர்.அச்செய்தியின் உண்மை நிலையை 'தெஹீட்டிபிறையும் தடுமாறிய சிந்தனையும்!' என்றதலைப்பில் கட்டுரையாக வெளியிட்டு நாம்மக்களுக்கு தெளிவாக்கினோம். (பார்க்க) அதில் நாம் எழுப்பிய வாதங்களுக்கு எந்தப்பதிலையும் சொல்லாமல் இன்றுவரைமேற்படியார்கள் மௌனம் சாதிக்கின்றனர்.

பின்னர்Conjunction  என்னும் சங்கம நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை (சங்கம)நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப்பொழுதை அடைந்து விடுகின்றனரே அவர்கள்எவ்வாறு நோன்பை வைக்க முடியும் என்றும்கேள்வி எழுப்பினர். அந்தவிமர்சனத்திற்கும் 'ஹிஜ்ரி நாட்காட்டியின்உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின்தவறான குற்றச்சாட்டுகளும்' என்ற தலைப்பில்மிக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.(பார்க்க)

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படிஅமைந்த நமது அறிவுப்பூர்வமானவிளக்கங்களால் ஒவ்வொரு முறையும்மேற்படியார்கள் மூக்கறுபட்டே போகிறார்கள்.நமது பிரச்சாரங்களை எதிர்கொள்ள வேறுவழியில்லத அவர்கள் தொலை நோக்கியால்எடுக்கப்பட்ட ஒரு பிறை போட்டோவை வைத்துஅதில் கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டுகளைப்புரிந்து எதாவது ஒரு அமாவாசை (சங்கம) அன்று அதைவெளியிட திட்டமிட்டிருந்தனர் போலும்.

எனவே கடந்த 30-01-2014 அமாவாசை (சங்கம) தினத்தில்பிறையை புறக்கண்களால் பார்க்கலாம் என்றுமுற்கூட்டியே அறிவிப்பும் வெளியிட்டனர்.மேற்படி அமாவாசை (சங்கம) தேதியில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரியும் என அவர்கள்பட்டியலிட்டுச் சொன்ன எந்த நாட்டிலும்எந்தப் பிறையும் தெரியவில்லை (அது எங்கேதெரியப் போகிறது).

இது ஒரு பக்கம் இருந்தாலும், நாம்எதிர்பார்த்தபடி சங்கம தினத்திற்குப்பின்னர் அவர்கள் தயாராக வைத்திருந்தபோட்டோவை மறக்காமல் வெளியிட்டனர். இவர்கள்பிறை தெரியும் என்று அறிவித்த பட்டியலில்இடம்பெறாத ஈரானில் அந்தப் பிறைபார்க்கப்பட்டதாக கூறி ஒரு போட்டோவோடுதகவல் வெளியிட்டு அனைவரையும் திசைதிருப்பினர்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில்பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றுநாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்வழிகாட்டுதலாகும்.

எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியைபொய்படுத்திட சங்கம தினத்தில் பிறைதெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களைவெளியிட்டு இவர்கள் நம்மைப்பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை.மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைபொய்யாக்கிட முனைந்துள்ளனர் என்பதேஉண்மையிலும் உண்மை.

குறிப்பாக பிறையை புறக்கண்ணால் பார்த்தேபின்பே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றுகூறிவரும் முஸ்லிம்கள்கூட அமாவாசை (சங்கம)தினத்தில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குதெரியாது என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் கொள்ள வில்லை.

FakePhoto

கடந்த 30-01-2014 அமாவாசை (சங்கம) அன்றுஈரானில் புறக்கண்களுக்குத் தெரிந்ததாகவெளியிடப்பட்ட போட்டோ பிறை!

கீழ்க்காணும் இணைப்புகள் மேற்படி பொய்ச்செய்தியை வெளியிட்ட இணைதளங்களோடு நடைபெற்றசில கருத்துப் பரிமாற்றங்களின்பதிவுகளாகும். அவற்றை சற்று படித்துப்பார்த்தாலே மேற்படி அமாவாசை (சங்கம) பிறை போட்டோபற்றிய உண்மை விஷயங்கள் இன்னும் தெளிவாகவிளங்கும்.

இணைப்பு 1 : மேற்படி ஜோர்டான் நாட்டின் ஜோடிப்புஇணையதளம் வெளியிட்ட அமாவாசை (சங்கம) போட்டோ பிறைபற்றி அந்த இணையதள நிறுவனர் முகம்மதுஒதேக்கு சகோதரர் ஒருவர் எழுதிய ஈமெயில்(பார்க்க).

அதில் மேற்படி போட்டோவில் உள்ள பிறை எந்தஅளவிற்கு பொய்யானது என்பதையும், போட்டோகூறும் அறிவியில் ரீதியான குறிப்புகள்எந்த அளவிற்குப் பிழையானது என்பதையும்சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது. மேற்படிபிறையை புறக்கண்களாலோ, பைனாகுலர் போன்றசிறு தொலை நோக்கியாலோ பார்ப்பதற்குசாத்தியம் இல்லாத நிலையையும், மேற்படிபோட்டோ ஒரு செட்டப் போட்டோதான் என்பதையும்அந்த போட்டோவை வைத்தேநிரூபிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு 2 : பிறை விஷயத்தில் மேற்படி ஜோர்டானைச்சார்ந்த முகம்மது ஒதேயை தக்லீது செய்யும்தமிழக இணையதளம் ஒன்று 'அமாவாசை (சங்கம) அன்றுபிறையைக் காண இயலாதா! நாளைக் காணலாம்' என்று தலைப்பிட்டு கடந்த 29-01-2014 அன்றுசெய்தி வெளியிட்டது. அச்செய்தியில்மேற்படி அமாவாசை (சங்கம) பிறையை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்றநாடுகளில் தெரியும் என்று ஒருபட்டியலையும் வெளியிட்டனர். குறிப்பாகதமிழகத்தில் காயல்பட்டினத்திலும் தெரியும்என்றும் அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள்என்றும் அச்செய்தியில்குறிப்பிடப்பட்டிருந்தது.

காயல்பட்டினத்தைச் சார்ந்த சகோதரர்களிடம்இச்செய்தியைப் பற்றி வினவினோம். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்போன்ற ஏராளமான நாடுகளில் விற்பனையாகும்ஒரே பல்பொடி கோபால் பல்பொடி என்ற பழைய ஆல்இந்தியா ரேடியோ விளம்பரத்தின் தாக்கமாகஅச்செய்தி இருக்கலாம் என்றனர். அச்செய்திவெளியிட்ட இணையதளத்தில் ஹிஜ்ரிகமிட்டியினர் சில விளக்கங்கள் கேட்டுகருத்துக்களைப் பதிந்தனர். (பார்க்க)

இணைப்பு 3 : மேற்படி தமிழக ஏஜெண்டு இணையதளம் கடந்த31-01-2014 அன்று 'அமாவாசை (சங்கம) அன்று தேயும்பிறை காணப்பட்ட காட்சி' என்று தங்களின்பல்பொடி விளம்பரத்தை போட்டோவுடன் மீண்டும்வெளியிட்டது. முன்னுக்குப் பின் முரணானதகவல்களைக் கொண்ட அதற்கும் விளக்கம்கேட்டு ஹிஜ்ரி கமிட்டியைச் சார்ந்தசகோதரர் கருத்துக்களைப் பதிந்தனர்.(பார்க்க)

அமாவாசை (சங்கம) என்னும் புவிமைய சங்கம நாளில்பிறை புறக்கண்களுக்குத் தெரிவாதாகபிரச்சாரம் செய்பவர்களை நோக்கி நாம்கேட்டுவரும் அடிப்படையான சில கேள்விகள்.

  1. புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ பொதுவாக அனைத்து உலகநாடுகளிலும் ஒவ்வொரு மாதமும்புறக்கண்களுக்குத் தெரிகிறதா?
  2. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோஅல்லது வளர்பிறையோ உங்களின்அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்குகிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப்பகுதியிலோ ஒவ்வொரு மாதமும்புறக்கண்களுக்குத் தெரிகிறதா?
  3. மேற்படி புவிமைய சங்கம நாளில், அரிதாகசில மாதங்களில் மட்டும் தெரியும்வாய்ப்புள்ளது என்று நீங்கள் கூறும்அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால்பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா?
  4. அப்படி அரிதான மாதங்களில், அவ்வாறுஅரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறைசாதாரணமாக புறக்கண்களால்பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம்எடுக்கப்படுகின்றதா?
  5. Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்டபிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவைஎடுக்கப்பட்டது என்றால்Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும்பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதைஏற்று செயல்படத் தயாரா?
  6. தொலைநோக்கி (Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும்ஒன்றுதான் என்று உங்கள் நிலைப்பாடாகஅறிவிக்கத் தயாரா?
  7. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டுஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன்அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும்என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்குமார்க்கம் அனுமதிக்கின்றதா? இதற்கு ஆதாரம்என்ன?
  8. 'ஃபஇன் கும்மஅலைக்கும் - ஃபக்திரூலஹூ' - அதாவதுமாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளிபூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாகமறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள்முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லதுசவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில்தேய்பிறையோ அல்லது வளர்பிறையோபுறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறுதெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாகநிரூபிக்க முடியுமா?
  9. அல்லது இனிவரும் காலங்களிலாவதுமுஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவானகஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோசங்கம நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?
  10. சந்திரனின் 100 சதவிகித ஒளிரும்தன்மையிலிருந்து சுமார்0.5%, 1% அல்லது1.5% அளவுஒளி மட்டும் பூமிக்குத் தெரியவாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடுசொல்லும் அந்தப் பிறையின் படித்தரத்தை ஒருமனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாகபார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா?
  11. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும்நேரத்தில் அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில்வெரும் ஒரு சதவிகிதம்கூட இல்லாதஅப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும்சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில்அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால்பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்கமுடிந்தது என்பதை எப்படி நம்பச்சொல்கிறீர்கள்?
  12. மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல்வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன்சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடுசரிபார்த்து (!) அதன் பிறகேஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், படம்பிடித்தவர் யார் என்று அறியாதநிலையிலும் அவர் எடுத்ததாக வெளியாகும்செய்திகளைக்கூட நம்பி எந்த அடிப்படையில்இணையதளங்களிலே பரப்புகின்றீர்கள்?
  13. அமாவாசை (சங்கம)யில் பிறை தெரிந்ததாகவெளியிடப்படும் தகவல்களில் பிறை பார்த்துபோட்டோ எடுத்தவர்கள் முஸ்லிம்அல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படிகாஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறைசாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுமுஸ்லிம்கள் அமல் செய்யலாமா?
  14. அமாவாசை (சங்கம) நிகழ்வை அறிவியில்ஆய்வாளர்கள் உலக நேரத்தில்குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல்நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பிமற்றவர்களையும் குழப்புவது ஏன்?
  15. ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள்வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆவக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள்சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால்சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆதொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பிவருகிறோம். இவை அனைத்திற்கும் இதுவரைமௌனமே பதிலாக வந்துள்ளது. இவர்கள்கூறியபடி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளிலோஅல்லது பிரத்தியேகமாக காயல்பட்டினத்திலோகடந்த 30-01-2014 அமாவாசை (சங்கம) அன்று தேய்பிறை(Waning Crescent) புறக்கண்களுக்கு எங்கும் தென்படவில்லை.

ஈரானில் பார்க்கப்பட்டதாக சொல்லப்படும்இந்த அமாவாசை (சங்கம) பிறை உலகில் ஈரானுக்குக்கிழக்குத் திசையில் அமைந்துள்ளநாடுகளிலும் புறக்கண்களுக்குத்தெரிந்திருக்க வேண்டும், ஆனால்தெரியவில்லை. ஈரான் ஃபஜ்ரு வக்தைத்துவங்குவதற்கு சுமார் 6:30 (ஆறரை)மணிநேரங்கள் முன்னர் ஃபஜ்ரைத் துவங்கியஆஸ்திரேலியாவில் (ஈரானில் பார்த்ததாகசொல்லப்படும் அளவைவிட) பிறை அதிகசதவிகிதம் பெரிதாகவும், வெளிச்சமாகவும்இருந்திருக்க வேண்டும். அப்படியனால்ஆஸ்திரேலியா உட்பட மற்றெந்த கிழக்கத்தியநாடுகளிலும் இப்பிறை புறக்கண்களுக்கோ, கேமரா, டெலஸ்கோப்களுக்கோ ஏன் தெரியவில்லை? தமிழகத்தில் காயல்பட்டினத்தில் தெரியும்என்று முன்னறிவிப்பு செய்யப்பட்ட இப்பிறைகாயல்பட்டினம் உட்பட இந்தியாவின்எப்பகுதியிலும் தெரியவில்லையே அது ஏன்?

odeh-01

மேலும் இவர்கள் இன்னென்ன நாடுகளில்மேற்படி அமாவாசை (சங்கம)ப் பிறை புறக்கண்களுக்குத்தெரியும் என்று பச்சை வர்ணமிட்டுவெளியிட்ட படத்தில்கூட ஈரான் நாடு இடம்பெறவில்லை. இவர்கள் பச்சை வர்ணமிட்ட எந்தநாட்டிலும் பிறை புறக்கண்களுக்குத்தெரிந்ததாக இதுவரை செய்திகள் இல்லை. எனவேஇவர்களின் கணிப்பு தவறு என100% நிரூபணமாகி விட்டது. இந்த நிலையில்கூடஇவர்களின் தோல்வியை பகிரங்கமாகஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம்இவர்களின் நோக்கம் சத்தியத்தை அறியவேண்டும் என்பதில்லையே!.கடமையான தொழுகையைஅந்தந்த வக்திற்குள் தொழுவதில் பேணிப்புஇல்லாதவர்கள், நபி (ஸல்) அவர்கள்வலியுறுத்திய சுன்னத்தான தாடியைக்கூடபேணாமல் மலித்துக் கொண்டு திரிபவர்கள்குர்ஆன் சுன்னாவின் சத்தியத்தை எப்படிஏற்றுக் கொள்வார்கள்.

இன்னும் அமாவாசை (சங்கம) அன்று புறக்கண்களுக்குபிறை தெரிந்ததாக வெளியிடப்படும்போட்டோக்கள் பெரும்பாலும் பிறமதத்தவர்களின் பெயரிலேயேவெளியிடப்படுகின்றன. பிறையில் யூதப் பிறை, கிருஸ்துவப் பிறை, ஷியாப் பிறைஎன்றெல்லாம் இருப்பதாக நாம் கூறவில்லை.அதே நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின்வணக்க வழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிறமதத்தவர்களின் பிறைத் தகவலை எப்படிஏற்பது? என்றுதான் நாம் கேட்கிறோம்.மேலும் அத்தகவல்கள்கூட பொய்த் தகவலாகவேஉள்ளன. இவ்வாறு முஸ்லிமல்லாதவர்கள் ஒருபோட்டோவை வெளியிட்டால் அப்பிறைசாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாமா? இதற்குதீர்க்கமான ஒரு முடிவைச் சொல்லுங்கள்என்று நாம் கேட்கிறோம்.

நமது கேள்விக்கு நேரடியான பதிலைத் தரமுடியாதவர்கள் நம்மை நோக்கி ஒரு எதிர்கேள்வியை எழுப்பி அறிவார்ந்த வாதம்வைப்பதாக நினைக்கின்றனர். அதாவது ஹிஜ்ரிகாலண்டரின் முக்கிய அம்சமான அமாவாசை (சங்கம) நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய்பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின்நாஸாதானே வெளியிட்டுள்ளது. காஃபிர்களின்பிறை சாட்சியத்தை ஏற்கலாமா? என்று வினாஎழுப்பும் நீங்கள் நாஸாவின் கணக்கீட்டைஎந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்பதே அவர்களின் கேள்வியாகும்.

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு'என்றபழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வுசெய்யும் போது ஆத்திரப்படாமல்நிதானமாகவும், உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்துடனும் ஆய்வு செய்தால்தான்அறிவுப்பூர்வமான, உண்மையான கேள்விகளும், கருத்துக்களும் பிறக்கும்.

ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள்போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம்செய்வதற்கு பிறையை புறக்கண்களால் பார்த்துசாட்சியம் அளிப்பது அவசியம் என்றுஇவர்களும் நம்பியுள்ளனர். அதன்அடிப்படையிலேயே பிறைத் தகவல்களையும், பிறைஇன்னென்ன நாடுகளில் தெரிய வாய்ப்புள்ளதுஎன்று வரைபடம் வரைந்தும் அவர்களின்இணையதளங்களில் வெளியிடுகின்றனர். அப்படிபிறை பார்ப்பதை நம்புபவர்களிடம் பிறைபார்த்த சாட்சியத்தை உறுதிபடுத்தும்அம்சத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்டால், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கீட்டைமையப்படுத்தி நாஸாவின் கணக்கை எவ்வாறுஏற்றுக் கொள்கிறீர்கள்? என்றுகேட்கிறார்கள்.

நாஸா வெளியிட்டுள்ள கணக்கீடுகள்சரியானதுதானா என்று நாம் பரிசோதித்துஅறிந்து சரிபார்க்க முடிந்த காலத்தில்நாம் வாழ்கிறோம். இந்நிலையில் இப்படியொருகேள்வியை நம்மை நோக்கி இவர்கள்எழுப்பியுள்ளது இவர்களின் முதிர்ச்சியற்றநிலையையே காட்டுகிறது. அடிப்படையற்ற, அறிவிலித்தனமான கேள்வியை கேட்டுவிட்டுஅறிவார்ந்த கேள்வியை எழுப்பியதாகநினைத்துக் கொள்கின்றனர் போலும்.

முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காகவா நாஸாநிறுவனம் துவங்கப்பட்டுள்ளது? அல்லது நாஸாவிஞ்ஞானிகள் என்ன ஹிஜ்ரி கமிட்டியினருக்குசொந்தக்காரர்களா? முஸ்லிம்கள் சந்திரனின்படித்தரங்களால் அமைந்த ஹஜ்ரிகாலண்டரைவெளியிட வேண்டும் என்பதற்காகவா அவர்கள்சந்திரனின் படித்தரங்களைகணக்கிட்டுள்ளார்கள் - இல்லையே!.அவர்களின் சுய ஆராச்சிக்காகவும், அவர்களின் செயற்கைக் கோள்கள் உட்படவிஞ்ஞான ஆய்வு சாதனங்கள் துல்லியமாகஇயங்கவுமே சூரியன், சந்திரன் மற்றும் பிறகோள்களின் சூழற்சிகளை துல்லியமாகக்கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அவர்களின்சுயநலத்திற்காகத்தான் இவ்வளவுஆய்வுகளையும் செய்து வைத்துள்ளார்களே தவிரமுஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல.இவையே உண்மையாகும்.இதுவல்லாமல் ஹிஜ்ரிகாலண்டரை எங்கள் கணக்கீட்டின்அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்றுஇதே நாஸாவினர் ஒரு கணக்கீட்டை உலகிற்குத்தந்தால் அதில் முதலில் சந்தேகம்கொள்பவர்களாக நாங்கள்தான் இருப்போம்.

இவர்கள் அமாவாசை (சங்கம) அன்று வெளியிடப்படும்போட்டோ பிறைகளை உண்மை என தக்லீதுசெய்வதைப்போல நாம் நாஸாவை தக்லீது செய்யச்சொல்லவில்லை. நாஸா வெளியிடும் அந்தத்துல்லியமான பிறைக் கணக்கைசரிபார்க்காமலும், உறுதி செய்யாமலும் நாம்ஹிஜ்ரி காலண்டரின் கணக்கை வெளியிடவில்லை.மேலும் நாஸாவின் சந்திரக் கணக்கீட்டைமட்டும் வைத்துக் கொண்டு நாம் காலண்டர்வெளியிடவில்லை. அப்படி நாம் தயாரிப்பதாகத்தவறான ஒரு யூகத்தை இவர்களுக்குச் சொன்னதுயார்? இதையாவது தெளிவுபடுத்தட்டும்.

நாஸா வெளியிட்டுள்ள சந்திர, சூரியக்கணக்கீடுகள் சரியானதுதானா என்பதைபரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வாளர்களைஹிஜ்ரி கமிட்டிக்கு அல்லாஹ் வழங்கி தனதுநாட்காட்டியை தவறுகளிலிருந்துதூய்மையாக்கி வைத்துள்ளான் -அல்ஹம்துலில்லாஹ். ICOP இணையதளம்காஃபிர்கள் அளிக்கும் டெலஸ்கோப் போட்டோபிறைகளை தக்லீது செய்து வெளியிடுவதைப்போலவோ, அந்த ICOP வெளியிடும் தகவல்களைகாயல்பட்டினத்தின் பெயரைத் தாங்கியஇணையதளம் கண்மூடி பின்பற்றுவதைப் போலவோ, ஹிஜ்ரி கமிட்டி நாஸாவைக் கண்மூடிபின்பற்றச் சொல்லவில்லை.

இன்னும் நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரிநாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின்அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும்.ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்றுதெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமிதினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களேஉறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை (சங்கம)எனும் புவிமைய சங்கம தினம் என்றுகுறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை (சங்கம) தினமாகஉள்ளதா இல்லையா? என்பதையும் மக்களேஉறுதிபட அறிந்து வருகின்றனர். மேலும்சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால்பகுதி நாள் என்று நாம்காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில்பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும்சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களேபார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் என்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியைபல வருடங்களாக எங்கள் சொந்தப்பொருளாதாரத்தில் வெளியிட்டு இதை ஒருசவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின்பிறை அத்தாட்சிகளை அவனது நாட்காட்டியைஇதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின்நாட்காட்டிக்கு எதிரான ICOP போன்றஅரைவேக்காடுகள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும்அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதைமட்டும் சொல்லி வைக்கிறோம்.

இறுதியாக, இதே முகம்மது ஒதேயின்ICOProject  இணையதளம் வெளியிட்டுள்ள(Accurate Times) மென்பொருளைப்பணன்படுத்தியே பிறை இன்னென்ன பகுதிகளில்புறக்கண்களுக்குத் தெரியும் என்றுவரைபடத்தை அவர்கள் வெளியிடுகின்றனர். அந்தமென்பொருளில் பிறை வரைபடத்தை மூன்று(Criteria) அடிப்படைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுக்கும் வகையில் அமைத்துள்ளனர்.அதாவது

1.      முகம்மது ஒதே உடைய அடிப்படை,

2.      மற்றொரு நபரான பெர்ணட் எல்லப் என்பவரின்அடிப்படை மற்றும்

3.      தென் ஆப்பிரிக்க வானியற் கூடத்தின்அடிப்படை (SAAO)

என மூன்று வகையான வரைபடங்களை தயாரிக்கமுடியும். இதில் கடந்த 31-01-2014 அமாவாசை (சங்கம)அன்றைய பிறை எங்கு தெரியும் என்பதைஅவர்கள் வெளியிட்டுள்ள மென்பொருளின் துணைகொண்டே மேற்படி மூன்று அடிப்படைகளிலும்வரையப்பட்டு கீழே கொடுத்துள்ளோம்.அவற்றில் அமாவாசை (சங்கம) பிறை தெரியும் என்றுகூறும் அந்த வரைபடங்கள் எந்த அளவுக்குஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன என்பதைநீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

odeh

yallop

saao

மக்களே நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமானபிறைக் கணக்கீட்டை பொய்யாக்கநினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரைதோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு.அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன்தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனானஅல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம்பிடிக்கின்றனர். தோற்றதில் விரக்தியுற்றுஅமாவாசை (சங்கம) அன்று பிறை தெரிகிறது என்றுபொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பிவருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின்தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம்செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிரஇவர்களுக்கு யார் நேர்வழி காட்டிடமுடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்துநம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.அமாவாசை (சங்கம) அன்று தெரியாத தேய்பிறையைபுறக்கண்களுக்குத் தெரிகிறது என்று கூறிஏமாற்றும் அனைவருக்கும் இதையே ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பாக வெளியிடுகிறோம்.

அவனே தன் தூதரைநேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும்அனுப்பி வைத்தான் - மு ஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் இதுமிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன்தூதரையனுப்பினான்.')  (அல்-குர்ஆன் 9 : 33). 

மேலும்குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ்பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை -நிலைநாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8 :8).

தம் வாய்களைக்கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிடஅவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். '(அல்-குர்ஆன் 9 : 32).

அவர்கள்அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டுஊதி அணைத்து விட நாடுகின்றனர், ஆனால்காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்ஒளியைப் புரணமாக்கியே வைப்பான்.முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்றஎல்லா மார்க்கங்களையும் மிகைக்கும்பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்-குர்ஆன் 61 : 8,9).

இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ்தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியே தீருவான். (அல்-குர்ஆன்10 : 82).

Read 1708 times Last modified on சனிக்கிழமை, 20 ஜூன் 2015 10:05