இதற்கும் ஒருபடி மேலே போய் மேற்படி இயக்கத்தினர் ஹிஜ்ரிகமிட்டியினர் பதிவுசெய்த தொழுகைத் திடலில் அவர்களைத் தொழவிடாமல் மிரட்டி இடத்தை அபகரித்ததோடு மட்டுமின்றி ஹிஜ்ரி கமிட்டியினர் மீது அடியாட்களை ஏவிவிட்டு பதட்டத்தை ஏற்படுத்தி போலீஸ் வழக்கு என்றும் இழுத்துவிட்டனர். இதுதான் இஸ்லாமிய பிரச்சாரகர்களின் இலட்சமா? இதுதான் தவ்ஹீது தந்த பாடமா? அவர்கள் ஏன் சிந்திப்பதில்லையோ? நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நன்மைதரும் நல்லவையாக இருக்கட்டும் என்றே ஹிஜ்ரி கமிட்டி விரும்புகிறது.
எங்கள் மீது குஃப்ர் ஃபத்வாக்களையும் அவதூறுருகளையும், சேற்றையும் வாரியிறைத்தவர்களை நாங்கள் மறக்கிறோம்; மன்னிக்கிறோம். சத்தியத்தை அறியமுற்படாமல் எங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அவர்களுக்கு எங்கள் அன்பை பரிசாக்குகிறோம். அத்தகைய சகோதரர்களின் கண்ணியத்தையும் மானத்தையும் நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். காரணம் இறைவன் வரையறுத்துவிட்ட நாள்களை முன்பின் ஆக்குவது இறைமறுப்பில் கொண்டு சேர்க்கும் என்ற இறைவனின் எச்சரிக்கையில் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம். எனவேதான் இவ்வுலகில் எந்தவித பிரதிபலனையும் பாராமல் பலசோதனைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஹிஜ்ரி கமிட்டியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அன்போடு நினைவுபடுத்துகிறோம்.
ஸூமூ லி ருஃயத்திஹி - பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள், அல்லது பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் அமல் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களுக்கு போதிப்பவர்களை நோக்கி கீழ்க்கானும் கேள்விகளை கண்ணியத்தோடு வைக்கிறோம். இவற்றிற்கு வளைக்காமல் திரிக்காமல் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தயவுசெய்து பதில் தாருங்கள் என அன்போடு கேட்கிறோம்.
- இறைத்தூதர்(ஸல்) தம்முடைய வாழ்நாளில் என்றாவது ரமழான் அல்லது பெருநாள் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்து அறிவித்தார்களா? யாரேனும் பிறையை பார்த்தால் அதை என்னிடம் வந்து அறிவித்தே ஆகவேண்டும் என என்றாவது கூறினார்களா? இதற்காக டவுண்காஜிகளையோ, பிறைக் கமிட்டியினரையோ நியமித்தார்களா?
- எந்தத் திசையில், எந்த வேளையில், எந்தெந்த நாள்களில் பிறையை பார்க்க நபி(ஸல்) நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்? பிறைகளின் படித்தரங்கள் குறித்து (10:5, 36:39) அல்லாஹ்வின் அறிவுப்புகளை, கட்டளைகளை அவர்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்கள்?
- வளர்பிறை, தேய்பிறை, முழுநிலவு, சந்திரன் மறைக்கபடும் நாள் என அனைத்தையும் நபி(ஸல்) புறக்கண்ணால் பார்த்து வந்தார்களா? அவர்கள் தினமும் பிறையை அவதானித்தார்களா அல்லது மாதத்தின் 29வது நாள் மட்டும்தான் பிறையைப் பார்த்தார்களா? இதற்கான ஆதாரம் எங்கே?
- ஷஅபான் 29 மற்றும் ரமழான் 29 தினங்கள் என்று நினைத்துக் கொண்டு அன்று மக்ரிபு வேளையில் மேற்கு திசையை நோக்கி நின்று கொண்டு பிறையைப் பார்ப்பதை கற்றுக் கொடுத்தது யார்? அன்று 29வது நாள்தான் என்ற முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? மாதத்தின் 28, 27, 26 போன்ற நாள்களிலும் பிறை மேற்கு திசையில் மக்ரிபு வேளையில்தான் தெரிகிறதா?
- ஸூமூ லி ருஃயத்திஹி பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என மேடையில் முழங்கும் எந்த ஆலிமும் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்துவருவதில்லை என்பதை எங்களால் அடித்துக் கூறமுடியும். இத்தகையோரின் தவறான பிரச்சாரத்தினால்தான் மூன்று வெவ்வேறான நாள்களில் பெருநாள் உட்பட முஸ்லிம்களுக்கு ஒரு கிழமைக்கு 3 தேதிகள் மற்றும் மூன்று கிழமைக்கு ஒரு தேதியும் வருகிறது. இவ்வாறுதான் குர்ஆன் சுன்னா போதிக்கிறதா? மூன்று தேதிகள் ஒரு கிழமைக்கு என நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த முறைக்கு ஆதாரம்தான் என்ன? தலைப்பிறையை சரியாக கணக்கிடாமல் அல்லது பிறையைப் பார்க்காமல் நீங்கள் இருந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் போய்விடுமா என்ன? சற்றே சிந்தியுங்கள்!
- உங்கள் கருத்துப்படியே பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறுதான் பெருநாள் தொழுகை தொழவேண்டும் என்றால், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் துருவப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலைதான் என்ன? ஆறு மாத பகல்காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த ஆறு மாதங்களும் பட்டினி கிடக்கவேண்டுமா? அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அம்மக்களுக்கு நோன்பே கடமையில்லையா? பக்கத்து நாடுகளை வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு தஜ்ஜால் வரும் காலத்தில் நிகழும் நாள்களைப் போல கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என நழுவாமல் பிறையை புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்ற உங்கள் சட்டவிதியின் அடிப்படையில் பதில் தாருங்கள்!
- ஒரு வருடத்தின் 12 மாதங்களில் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்களில் மட்டுமே பிறையை தேடி அலையும் படலத்தை நடத்துகிறீர்களே; ஏனைய 9 மாதங்களிலும் பிறையை ஒருபொருட்டாகவே நீங்கள் கருதுவதில்லை அல்லது கலண்டரைத்தான் பின்பற்றுகிறீர்கள்; இவ்வாறுதான் நபி(ஸல்) ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பார்த்தார்களா? அல்லது ஒவ்வொரு மாதமும் பிறையை புறக்கண்ணால் பார்த்தார்களா? இதில் மார்க்கம் நமக்கு கற்றுத் தருவது என்ன?
- விஞ்ஞானத்தின் துணைகொண்டு துள்ளிய கணக்கீட்டின் அடிப்படையில் பிறை தெரியாத கும்மா உடைய நாள், தலைப்பிறை போன்றவற்றை அறிவிக்கும்போது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக்கூட விளங்க முற்படாமல், நபி(ஸல்) பிறையை கண்ணால்தான் பார்க்க சொன்னார்கள் என்று தவறாக கூறி அறிவியலை அலட்சியப் படுத்துகிறீர்களே, தலைப்பிறையை ஒருவர் இரவு 10 மணிக்கு பார்த்ததாகவோ, நன்பகல் வேளையிலேயே பார்த்ததாகவோ அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அதை மறுப்பீர்களா? விஞ்ஞானத்தின் துணையின்றி அப்பிறை அறிவிப்பை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? அல்லது எப்படி மறுப்பீர்கள்?
- தலைப்பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதாக வரும் தகவலை மாநில, தேசிய அல்லது சர்வதேச எல்லைக் கோட்டை வைத்து வரையறுக்க ஆதாரம் என்ன? அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும் முக்கியத்துவம்தான் என்ன? அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான் அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி(ஸல்) நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான் அறிவிக்கிறீர்களா? அல்லது இனம்காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டு அறிவிக்கிறீர்களா? அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்கள் குறித்து முறையாக அறிவிப்பு ஏன் செய்யப்படுவதில்லை? அவர்களின் சாட்சியத்தை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையிலேயே அக்கரை எடுக்கிறார்களா?
- பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் ரமழான் மாதத்தைத் துவங்குவோம் என்று மார்தட்டுபவர்களே! உங்கள் இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் முன்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வினியோகம் செய்வது ஏன்? இதுமட்டும் நபி வழிக்கு முரணாக இல்லையா?
இப்படி பல்வேறு கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இக்கேள்விகளை நாம் கேட்பது சம்பந்தப்பட்டவர்களின் அறியாமையை வெளிக்கொண்டுவருவதற்கு அல்ல மாறாக அவர்கள் சிந்திப்பதற்காக! இன்னும் நம்மில் பலர் ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் என்று அறிவிப்பதை ஏற்றுக் கொள்கின்றனர் அதை சரிகாண்கின்றனர்.
அதேவேளையில் சில அறிஞர்களின் நிர்பந்தத்தினாலும், தவறான வழிகாட்டுதலினாலும் அன்று நோன்பு நோற்காமல் இருந்துவிட்டு பெருநாளும் கொண்டாடாமல் இருந்துவிட்டு ஊர் தலைவர்களுக்கோ, இயக்க தலைவர்களுக்கோ பயந்து பெருநாள் தொழுவதற்கு விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் தாம் சார்ந்த இயக்கம், அமைப்பு அல்லது ஜமாஅத் என்றைக்கு பெருநாள் தொழுகை நடத்துகின்றனரோ அன்றைய தேதியில் தொழுகையில் கலந்து கொள்கின்றனர். என்ன நியாயம் இது?
அல்லாஹ்வை திருப்படுத்த சரியான நாளில் பெருநாளை கொண்டாடுவதில் தவறிவிடுவார்களாம், ஆனால் தான் சார்ந்திருக்கும் இயக்கங்கள், ஜமாஅத்துகள் மற்றும் அமைப்புகளை திருப்தி படுத்த பெருநாளையே மாற்றிக் கொள்வார்களாம். எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடரவேண்டாம் (17:36) போன்ற இறைவசனங்கள் குறித்து இன்று யார்தான் கவலை படுகிறார்கள்? இதை சுட்டிக்காட்டுவது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல.
மாறாக நம் சமுதாயத்தில் அறிஞர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பிறை விஷயத்தில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளாததும், தன் சுய கருத்தை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை விஷயத்தை ஆய்வு செய்யாததன் விளைவுதான் என்பதை அறியத்தருகிறோம்.
இத்தகையவர்கள் பிறைவிஷயத்தில் தங்கள் தற்பெருமையும், சுயகருத்துக்களை திணிப்பதையும் விட்டுவிட்டு, அல்லாஹ்விற்காக திறந்த உள்ளத்தோடு அக்கரை எடுத்து உளத்தூய்மையான முறையில் ஆய்வுசெய்து சிந்திப்பதே நம் சமுதாயத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். அத்தகைய நல்ல சூழலை வல்ல அல்லாஹ் விரைவில் ஏற்படுத்துவானாக!
இவண்:
ஹிஜ்ரி கமிட்டி,
160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Mobile Contacts:
+9199626 22000, +9199626 33000, +9199626 44000, +9199624 77000, +9199626 33844, +9195007 94544,
+9199943 44292, +9193440 96221, +9194439 55333, +9194432 55643, +9199524 14885, +9199408 11119
Websites:
www.mooncalendar.in, www.hijricalendar.com, www.hijracalendar.in, www.hijricommittee.in
Email:
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Google Group:
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.