ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக் மாநில தலைவர் அல்ஜன்னத் ஜுலை 2010 இதழில் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பி.ஜே பாராட்டுப்பத்திரம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தி இதோ
மேற்கண்ட செய்தியில் மார்க்க அறிவு இல்லாதவர்கள் பேச்சாளர்களாக தலையெடுத்ததால்தான் ஜாக்கில் குழப்பம் என கூறியுள்ளார். சிந்தனைவாதிகள் இங்கு சற்று சிந்திக்க கடமைப்படுள்ளனர்.
ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல் இங்கு பி.ஜே அழுவது எதற்காக ?
ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மார்க்கத்தை ஆய்வு செய்பவர்கள் ஒதுக்கப்பட்டது தான் ஜாக்கில் குழப்பத்திற்கு காரணம் என்ற செய்தி மிகவும் உண்மையானது என்பதை நாம் அனைவரும் ஏற்றே ஆக வேண்டும்.
இதே குழப்பம் டி.என்.டி.ஜெ யிலும் மற்ற அமைப்புகளிலும் உள்ளது. பி.ஜே ஆய்வு செய்தால் சரியாக இருக்கும் என்று அவரும், அவரை கண் மூடிபின்பற்றுபவர்களும் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் மெளலவி அல்லாதவர்கள் மார்க்கத்தை ஆய்வு செய்து மக்களிடத்தில் சொல்லும் போது அதை தடுக்க முயற்சிப்பதுதான் குழப்பத்திற்கு உண்மையான காரணம். அதை ஜாக் பாராட்டுக் பத்திரம் மூலம் பி.ஜே மறைமுகமாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
இந்த காலத்திலும் பொது மக்கள் ஆய்வு செய்யவே கூடாது என்று மற்ற மெளலவிகளும் மதனிகளும் கூறி வருகின்றனர். பொது மக்களில் ஒருவர் மார்க்கத்தை அறிந்தவராக இருந்தாலும், ஆய்வு செய்வதற்கும் உரையாற்றுவதற்கும் அரபி மதராஸாக்களில் பட்டம் பெற்றவராகவே இருக்க வேண்டும் என்ற மாற்றார்களின் குரலை பி.ஜே வெளியிட்ட செய்தியிலும் காண முடிகிறது.
ஒருவர் மார்க்கத்தை பேச வேண்டும் என்றாலே பி.ஜே போல் மெளலவி வர்க்கமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இங்கு பி.ஜே மறைமுகமாக கூறுகிறார். இதற்காகத்தான் ஓநாய் அழுகிறதோ என சிந்திக்க வேண்டியுள்ளது.
ஜாக்கில் குழப்பம் மெளலவி அல்லாதவர்களால் தான் ஏற்பட்டது என்பதை கூறி உண்மையான குழப்பவாதிகள் மெளலவிகள்தான் என்பதை பி.ஜே இச்செய்தி மூலம் மறைக்க முற்படுகிறார். தனது அமைப்பிலும் இதுதான் பிரச்சினை என மறைமுகமாக இச்செய்தியில் கூறிவிட்டு, இதற்கு முன் பல காரணங்களை கூறி பேச்சாளர்களை நீக்கிவிட்டதை போல், தங்களது அமைப்பில் மீதி உள்ள மெளலவி அல்லாத பேச்சாளர்களை விரைவில் நீக்கி விடுவார் அல்லது மக்களை சந்திக்க விடாமல் தடுத்து விடுவார் என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
டி.என்.டி.ஜே இயக்கத்தில் தற்போது மெளலவி அல்லாதவர்களை ஒதுக்கினால் தான் தக்லீத் (கண்மூடித்தனமாக பின்பற்றுதல்) அடிப்படையில் இயக்கத்தை கொண்டு செல்ல முடியும் என முடிவு செய்து விட்டார்களோ என இச்செய்தி நம்மை சிந்திக்க தூண்டுகிறது.
மேலும் டி.என்.டி.ஜேயினர் தங்களது தவறான, குழப்பமான நிலைப்பாட்டை மூடி மறைப்பதற்கு ஜாக்கையும் வம்பிற்கு இழுத்துள்ளனர் என்பதை இச்செய்தி அறிவிக்கிறது. ஜாக் அமைப்பு இது நாள் வரை பிறையை பார்க்க வேண்டாம் என கூறவே இல்லை. பி.ஜே உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலைபாட்டில் இருந்து, அவராலேயே செயல்படுத்த முடியாமல் தோல்வியடைந்த தத்தமது பகுதி என்ற குழப்பமான நிலைபாட்டிற்கு (ஆரம்பத்தில் தாம்பரத்தில் பிறை பார்த்தது செங்கல்பட்டுக்கு பொருந்தாது என்று சொன்னவர் இப்பொழுது தமிழகம் முழவதும் ஒரே பிறை என பல்டி அடித்துவிட்டார்) சென்றபோது கூட ஜாக் எங்கிருந்தாவது பிறை தென்பட்ட செய்தி கிடைத்தாலும் அதை வைத்து மாதத்தை ஆரம்பிக்கலாம் என்ற பழைய நிலைப்பாட்டில் தான் இருந்தது. அது கூட பிறையை கண்ணால் பார்க்கும் அடிப்படைதான்.
அதன் பின் கணக்கின் மூலம் மாதத்தை துவங்கும் அடிப்படைக்கு ஆதரவு தெரிவித்து ஜாக் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் பல செய்திகளை வெளியிட்டதோடு, பல இடங்களில் இதற்கு ஆதரவாக உரையாற்றி இருக்கிறார். மேலும் பிற ஜமாஅத்துகளோடு விவாதித்தும் இருக்கிறார். அதில் பிறையை அடிப்படையாக கொள்ள தேவையில்லை என அவர் எங்கும் பேசவில்லை. மாறாக கணக்கின் அடிப்படையில், பிறைகளும் நமது தேதிகளும் சரியாக இருக்க வேண்டும் என்பதை தான் கணக்கு என அவர் கூறிவந்தார்.
பிறைகளும் நமது தேதிகளும் ஒன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலைபாட்டிற்கு தற்போது அவர் மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது டி.என்.டி.ஜே வினர் ஜாக்குடைய பழைய நிலைப்பாடான வெளியூர்களில் இருந்து வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து பிறையை தீர்மானிக்கலாம் என்ற நிலைபாட்டிற்கு வந்து விட்டார்கள் என்பது தான் உண்மை. அவர்களின் ஏகத்துவ இதழே அதற்கு சான்று.
மேலும் டி.என்.டி.ஜே வினர் தான் தற்போது ஜாக்குடைய நிலைபாட்டிற்கு வந்துள்ளார்கள். ஆனால் டி.என்.டி.ஜே வினரோ ஜாக் நிலைபாட்டை மாற்றி விட்டதாக அறிவித்து, தங்களுடைய நிலைபாட்டை ஏற்றுக்கொண்டதாக கூறி ஜாக் மாநில தலைவரை பாராட்டுவது போல் செய்தி வெளியிட்டிருப்பது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை போல் இருக்கிறது.
அல்ஜன்னத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது போல் ஜாக் மாநில தலைவர் கணிப்பு (guess) என்னும் நிலைபாட்டில் இருந்ததில்லை. அவர் சொல்லிக் கொண்டிருந்ததும் கணக்கு தானே தவிர கணிப்பு அல்ல என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பி.ஜே கணக்கு என கூறாமல் வேண்டுமென்றே கணிப்பு என வார்த்தையை மாற்றிக் கூறுவது கூட ஒரு பித்தலாட்டம் தான்.
வார்த்தை ஜாலத்தை பி.ஜே பயன்படுத்துவார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. சிறிது காலம் சென்றதும் தற்போது ஜாக் மாநில தலைவரை பாராட்டுவதைப்போல் நாடகமாடி தன்னுடைய தவறான நிலைபாட்டை மாற்றியது போல் மீண்டும் பிறையில் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்போது நான் கணக்கை மறுக்கவில்லை, நாங்கள் கணிப்பு என்னும் உத்தேசமாக கூறுவதைத்தான் தவறு என்று கூறினோம் என்பதற்காகத்தான் தற்போதிருந்தே கணிப்பு என பதிந்து வருகிறார். எனவே கணிப்பு என்ற வார்த்தையை மாற்றி கணக்கு என பி.ஜே திருத்தம் செய்ய வேண்டும்.
மேலும் இதன் மூலம் டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது.
தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
பிறை விவாத சவடால்
ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.
அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு திரிவாதால் அது குறித்து நமது பதிலை இங்கே பதிவு செய்கிறோம்.
அவர்கள் விவாத அழைப்பில் இப்படி கூறப்பட்டுள்ளது.
தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
இதில் உள்ள அபத்தத்தை நாம் முதலில் சுட்டிக் காட்டுக்கிறோம்.
ஒரு இயக்கத்துடன் விவாதிப்பது என்றால் தலைப்பு பற்றி இரு சாராரும் பேசிய பிறகு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இரண்டு தலைப்புகளை அவர்களாகக் குறிப்பிட்ட மடமையை பாருங்கள்
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா என்பது ஒரு தலைப்பு. உலகத்தில் எந்த முஸ்லிமாவது குர்ஆனை நிராகரிக்கலாம் என்று கூறுவானா? குர்ஆனை நிராகரிக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறினால் அது பற்றி விவாதிக்க அழைப்பு விடலாம்.
குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் உள்ளதாக புளுகும் மடையர்கள் இவர்கள் என்பது தான் நமது நிலைபாடு.
குர்ஆனை நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது நிலை. ஒரு வேளை இவர்களின் நிலை குர்ஆனை நிராகரிக்கலாம் என்பதாக இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். நாங்கள் காபிர்களாகி விட்டோம் என்று அவர்கள் அறிவித்து விட்டு குர்ஆனை நிராகரிக்கிறோம் என்று கூறுவார்களானால் இது பற்றி அவர்களுடன் விவாதிக்க முடியும்.
பிறை சம்மந்தமாக விவாதிக்க வேண்டுமானால் அது குறித்து அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இது வரை அவர்கள் உளறிய அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் வகையிலும் தலைப்பு அமைக்கப்பட வேண்டும். அது ஒப்பந்தத்தின்ல் போது தான் தீர்மானிக்கப்பட வேண்டும்
மேலும் பிறை மட்டுமின்றி அதை விட பாரதூரமான கொள்கை வேறுபாடுகள் அவர்களுடன் நமக்கு உள்ளது. இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய கொள்கையை அவர்கள் கொண்டுள்ளதால் பிறை மட்டுமின்றி அதைவிட முக்கியமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஹிஜ்ரத் குறித்து எழுதியுள்ள வடிகட்டிய முட்டாள் தனம் உட்பட அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.
பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும்.
மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.
அப்போது தான் நாட்டில் உள்ள இயக்கங்களிலேயே மடமையில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட முடியும்
அடுத்து அவர்கள் விவாதத்துக்கு அழைக்கும் இசலட்சணத்தைப் பாருங்கள்.
நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதினியை சேர்த்து அழைத்து வர வேண்டும்? இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா? எங்களுடன் விவாதம் செய்வது என்றால் எங்களை அழைக்கலாம். எங்கள் எதிரியான உங்கள் தலைவரையும் நாங்கள் அழைத்து வரவேண்டும் என்று எழுதும் அளவுக்கு உங்கள் புத்தி பேதலித்து விட்டடா?.
திகவை விவாதத்துக்கு அழைக்கும் போது ராம கோபலனை அழைத்து வரத் தயாரா என்று அவர்கள் கேட்டால் அது மடமை அல்லவா? ஷேக் அப்துல்லாவை விவாதத்துக்கு அழைக்கும் போது தப்லீகையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டால் அதுவும் மடமை தான்.
அந்த மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் ஓடி ஒளீயும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.
கீழ்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாகவுள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடயே கருத்து வெறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்
மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்னடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
ஜாக் ஃபத்வா குழு தீர்வு
ஃபத்வா குழு தீர்விற்கு பின் கமாலுதீன் மதனீ அவர்களின் பதில்
43 comments to பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு
-
Nashid Ahmed
ஜாக் அமைப்பினர் பிறையை கணித்து செயல்படும் முறையை இதுவரை ஆதரித்ததில்லை என்ற உங்களது வாதம் முற்றிலும் பொய்யான தகவல்.
கண்ணால் பார்க்கப்படும் பிறை உலகின் எந்த மூலையில் தென்பட்டாலும், அதை முழு உலகமும் பின்பற்ற வேண்டும என்பது தான் இவர்களின் அடிப்படை கொள்கை. இதையே மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்த இவர்கள், கடந்த 4 ,5 ஆண்டுகளாக, விஞ்ஞான அடிப்படையில் பிறையை முன்கூட்டியே கணித்து செயல்படலாம் என்ற முரண்பாடான கருத்தையும் ஒரு சேர மக்களிடம் கொண்டு சென்று , சமூகத்தில் மிகப்பெரிய குழப்பத்தினை இவர்கள் விளைவித்தார்கள்.
இவர்களது தலைமையகம் செயல்படும் நாகர்கோவில் – கோட்டாரில் தான் நானும் வசிக்கிறேன் என்ற முறையில் இந்த சமூகத்தில் இவர்களது முரண்பாடான கொள்கைகளின் மூலம் , எவ்வளவு பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவியது என்பதைகன்கூடாக நான் கண்டு வருகின்றேன்.
மாநிலதளைவராகிய எஸ்.கமாலுதீன் மதனி அவர்கள், பிறையை பார்த்து தான் (உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில்)
நோன்பை தீர்மானிக்க வேண்டும என்று ஒரு
பக்கம் சொல்லும் போது, ஜும்மாஹ் உரையில் அதன் துணை தலைவர் செயத் அலி பைஜி அவர்கள், விஞ்ஞான ரீதியில் கணிப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல என்று பேசுவார்.
இவர்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எண்கள் பகுதி ஹவ்வா நகர் மஸ்ஜிதில் கடந்த 2006 ஆம் வருடம் ரமலான் மாதம் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், ஒரு நோட்டீசை கண்ட நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். இவ்வளவு பகிரங்கமாக சமூகத்தை குழப்புவார்களா என்பதற்கு அது ஒரு உதாரணமாக அமைந்தது.
“வருகிற செவ்வாய்க்கிழமை (அடுத்த வாரம்), ரமலான் முதல் பிறை பிறக்கிறது என்பதால், செவ்வாய் ரமளானின் முதல் நாளாக அறிவிக்கிறோம் “, என்ற கருத்துப்பட ஒரு செய்தியை அவர்கள் வெளியிட்டார்கள்.!
உலகத்தின் ஏதாவது ஒரு மூலையானாலும் பார்த்து தான் பிறையை தீர்மானிக்க கூடியவர்கள், ஒரு வாரத்திற்கு முன்பே எவ்வாறு ரமலானை தீர்மானித்தார்கள்?
அவர்கள் கணிப்பதையும் ஆதரித்தே வந்தார்கள் என்பதற்கு மேலும் ஒரு தெளிவான ஆதாரம், ஜாக் அமைப்பின் துணை தலைவர், செயத் அலி பை ஜி அவர்கள், விஞ்ஞான ரீதியில் பிறையை கணிப்பது தவறில்லை என்று எழுதி அதை, அல்ஜன்னதிலும், அவர்களது இணையதளத்திலும் வளம் வர செய்தது தான்.
அந்த கட்டுரையை இங்கு தருகிறேன்.
அவர்கள் விஞ்ஞான கணிப்பின் படி தான் இதுவரை செயல்பட்டு வந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொழுது அந்த கொள்கையை விட்டும் விலகிக்கொண்டார்கள் என்ற வகையில் அவர்களது இந்த செயல், சமூகத்தில் இது வரை நிலவி வந்த குழப்பத்திற்கு ஒரு முடிவை ஏற்ப்படுத்தும் என்ற வகையில் அவர்களுடைய இந்த அறிவிப்பு மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது. அவர்களை விமர்சனம் செய்வது எனது நோக்கம் இல்லைஎன்றாலும், உங்கள் ஆக்கம் தவறான கருத்தை மக்களிடம் பரப்புகிறது என்பதால் மறுப்பு கட்டுரை.
அன்புடன்,
நாஷித் அஹமத்
السلام عليكم ورحمة الله وبركاته
-
Mohideen
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிறை விசயத்தில் எஸ்.கே. அவர்களின் தற்போதைய நிலைபாடு என்ன? முன்பு போல் உலகில் எங்கிருந்து பிறை செய்தி வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளாரா? அல்லது அதில் ஏதும் மாற்றம் உண்டா? தெளிவு படுத்தவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நாங்கள் எழுதிய விமர்சனத்தை முழுவதுமாக படித்து ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டி பதில் எழுதுங்கள். நாங்கள் சொல்வது தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். அப்போது தான் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது மக்களுக்கு தெரியவரும். இன்ஷாஅல்லாஹ்
இப்படிக்கு
நிர்வாகி
ஜாக்.நெட்
-
Shihabudeen
அஸ்ஸலாமு அலைக்கும்.
டி எம் பி என்ற குழுமத்தில் உங்களைப்பற்றிய ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக பதிலிடும் நீங்கள் கடந்த நான்கு நாட்களாக அலசப்படும் பிறை விஷயம் பற்றி மவுனம் சாதிக்கின்றீர்களே ஏன் என விளக்க முடியுமா?
இந்த வலைதளம் ஜாக் அமீர் திரு கமாலுத்தீன் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறார்களே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஜாக் என்பதும் ஏர்வாடி ஜாக் என்பதும் ஒன்றா? வெவ்வேறானதா?
அன்புடன் – ஷிஹாபுத்தீன்
வ அலைக்கும் ஸலாம்
சகோதரர் ஷிஹாபுத்தீன் அவர்களுக்கு,
ஜாக் என்பது யாருக்கும் சொந்தமானது கிடையாது. ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்பது குர்ஆன் ஹதீஸ் படி ஒன்றிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது.
ஜாக் ஏர்வாடியில் இருந்து தான் jaqh.net மற்றும் jaqh.in போன்றவைகள் உருவாக்கப்பட்டது. தற்போது மாநிலத்திற்கென்று தலைவர் jaqh.org என்ற தளத்தை உருவாக்கி அதை அமைப்பின் தளமாக செயல்படுத்தி வருகிறார். எனவே நாங்கள் ஜாக் ஏர்வாடிக்கு jaqh.net டை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டோம்.
தற்போது நாம் ஜாக் ஏர்வாடி ஜாக் நிர்வாகத்தில் இருந்தாலும் குர்ஆன் ஹதீஸை நடைமுறைப்படுத்தும் போது நாங்கள் எதை ஆய்வு செய்து சரி காண்கிறோமோ அதை செயல்படுத்துபவர்களாகத்தான் இது காலம் வரை இருந்து வந்தோம். இருந்தும் வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். என்றுமே ஜாக் ஏர்வாடி யாரையும் தக்லீது செய்ய விடுவது கிடையாது. குர்ஆன் ஹதீஸிலிருந்து ஒரு விஷயத்தை எவ்வளவு ஆழமாக விளங்க முடியுமோ அவ்வளவு ஆழமாக விளங்க முயற்சி செய்து அதை முடிந்தவரை நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வின் அருளையும் உதவியை எதிர்பார்த்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்.
மேலும் தள அறிமுக பக்கத்தில் நாம் யார் என்று பதிந்துள்ளோம். அதன் பிறகும் மக்கள் இந்த விஷயத்தை அலசி நேரத்தை வீணடிக்கிறார்கள்.
நாம் பி.ஜே அவர்கள் எஸ்.கே யை பாராட்டி எழுதிய பாராட்டு பத்திரத்திற்கு நாம் எழுதிய விமர்சனத்திற்கு முழுமையான பதில் வரவில்லை.
கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.
இப்படிக்கு
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜாகிர் அவர்களே தங்களது கருத்துகள் ஆங்கிலத்தில் உள்ளதால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. எனவே தமிழில் விமர்சனங்களை அனுப்பினால் உடனடியாக பதில் அளிக்க வசதியாக இருக்கும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-
kather
assalamualaikkum alhamdhulillah
-
kather
nonbai patri innum thelivaka sollungal
-
mohamed
dear brother assalamu alaikum
alhamtulillah now your takeing action for moon its ok but we need to clarified in Tamilnadu how many JAQH margus in Tamilnadu they will not follow up about your Action(About moon) its not leadership (Ammer)
please chage your Leadership and go for right way
-
Shihabudeen
//நாம் பி.ஜே அவர்கள் எஸ்.கே யை பாராட்டி எழுதிய பாராட்டு பத்திரத்திற்கு நாம் எழுதிய விமர்சனத்திற்கு முழுமையான பதில் வரவில்லை//
யாருடைய பதிலை எதிர்பார்க்கின்றீர்கள்…
யாருடைய பதிலை எதிர்பார்க்கின்றீர்கள்…
யாருடைய பதிலை எதிர்பார்க்கின்றீர்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
யாரை விவாதத்திற்கு அழைத்துள்ளோமோ அவர்களின் பதிலை எதிர்பார்க்கின்றோம்.
இப்படிக்கு
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
யாரை விவாத்திற்கு அழைத்துள்ளோமோ அவர்கள் இந்த பதிலை அவர்கள் தளத்தில் பிரசுரித்து ஏர்வாடி ஜாக்கிற்கு கடிதம் அனுப்பிய பின் தேதி விவாத முறைகள் பற்றி பின்னர் பரீசீலனை செய்வோம். பிஜே, எஸ்கே அவர்களுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்படாதீர்கள்.
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நாம் மார்க்கம் என சிந்தித்து எதை செய்கிறோமோ அதை பிறருக்கு சொல்வது மட்டும் தான் கடமை. ஜமாஅத்தாக இருப்பதற்கு அனைவரும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரே அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் எந்த சட்டத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கருத்து வேறுபாடுகளுக்காக புதிய தலைமைகளை உருவாக்கி சென்று கொண்டிருந்தால் இஸ்லாம் காணாமல் போய் இயக்கங்கள் மட்டும் தான் மிஞ்சும். தற்போது இஸ்லாம் புறந்தள்ளப்பட்டு இயக்கங்களின் செயல்பாடுகள் புகழப்படுவதற்காத்தான் அதிகமான ஜமாஅத்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் நம்மை அதுபோன்ற ஜமாஅத்களில் இருந்து காப்பாற்றி கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இஸ்லாம் கூறும் ஒரே தலைமையின் கீ்ழ் ஒன்றிணைய துவா செய்யவும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-
Shihabudeen Koya
//யாரை விவாத்திற்கு அழைத்துள்ளோமோ அவர்கள் இந்த பதிலை அவர்கள் தளத்தில் பிரசுரித்து ஏர்வாடி ஜாக்கிற்கு கடிதம் அனுப்பிய பின் தேதி விவாத முறைகள் பற்றி பின்னர் பரீசீலனை செய்வோம். பிஜே, எஸ்கே அவர்களுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்படாதீர்கள்.//
தொடர்ந்து பல முறை கேட்ட பின்னரும் இந்த பதிலைக் கூறத்டதான் இத்தனை நாட்களா?
//தேதி விவாத முறைகள் பற்றி பின்னர் பரீசீலனை செய்வோம்//
விவாதத்தின் தலைப்பை ஏற்கனவே தீர்மானித்தாகிவிட்டதே! இனி இதை வாபஸ் வாங்குகின்றீர்களா?
ஆக மொத்தம் ஒருபோதும் நடைபெறாது என்ற நினைப்பில் நீங்கள் எழுதியுள்ளது தெரிகின்றது! ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் உள்ளங்களைப் புரட்டக்கூடியவன். முதற்படியாக எஸ் கே மற்றும் பி ஜே அவர்களை சந்திக்கச் செய்துள்ளான்…. உள்ளங்களை அறியும் அல்லாஹ் நிச்சயம் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் செயலுக்கேற்ப நன்மையையும் தீமையையும் கொடுப்பான்.
கமாலுத்தீன் மதனி ஜாக் என்றால் நீங்கள் ஜாக் இல்லையா? அடிப்படையில் உங்கள் அமீர் ஆகிய கமாலுத்தீன் மதனியிடம் நீங்கள்தானே முதலில் விவாதம் செய்யவேண்டும். யாரை ஏமாற்ற இந்த வெறும் கோஷம்? விரைவில் நல்லதொரு அறிவிப்பு வரும். அதன்மூலம் அதிகார போதை கொண்டவர்களின் முகமூடி அவிழும்.
அல்லாஹ் தன் நல்லடியார்களை ஒருபோதும் இழிவு படுத்தமாட்டான்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் உங்கள் உள்ளத்தை நேர்வழியில் புரட்ட துவா செய்கிறோம். நாம் ஏற்கனவே கமாலுத்தீன் மதனி யிடம் விவாதித்து அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், பின்னர் ஃபத்வா குழு அமைத்து ஆய்வும் செய்தார்கள். ஃபத்வா குழுவும் கணக்கு மார்க்கத்திற்கு முரணாதல்ல என தீர்ப்பளித்தது. அதன் பின்னும் உலக நிர்பந்தங்களுக்காக நடைமுறைப்படுத்த தயங்கி நின்றதுதான் அவர்களுக்கு எற்பட்ட பின்னடைவு. மேலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பாராட்டு பத்திரத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போது பி.ஜே தற்போது எஸ்.கே யின் சர்வதேச பிறை கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையை மூடலாக அறிவித்துள்ளார் என முடிவு செய்துதான் இருவரையும் சேர்த்து விவாதத்திற்கு அழைத்துள்ளோம். எனவே விவாத தலைப்பு மாற்ற வேண்டிய அவசியம் எழாது.
பி.ஜே நாங்கள் கூறுவது போல் சர்வதேச பிறையை ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டால் பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா? என்ற தலைப்பில் மட்டும் விவாதித்தால் போதுமானது.
பிரச்சினை எதுவென்றாலும் இதில் பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-
H.SYED NIZAMULLAH
Anbudaiyeer Assalamu alaikum.
vimarsanangalil naagareegathai kadaipidikkeereergal! Mikka nandri! Pirai kuritha thagavalgal migavum payannullavai zazakallahu khairan.
Dear Brothers Assalamu alaikum! While commenting and arguing your team has followed a discipline and decency!
Hope ALLAH May restore Peace on all of You.
zazakallahu khairan.
H.Syed Nizamullah, Salem
-
abdul kader
please send the letter to TNTJ head office as well as P.J.InSha allah they will come definitly…
-
majeeth
we will expect the Pure Islam..please send the letter register post.
please Read the article once again at http://www.onlinepj.com.
The whole tamil muslim expect the Arguments
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
-
majeeth
Kaமாலுத்தீன் மதனி ஜாக் என்றால் நீங்கள் ஜாக் இல்லையா? அடிப்படையில் உங்கள் அமீர் ஆகிய கமாலுத்தீன் மதனியிடம் நீங்கள்தானே முதலில் விவாதம் செய்யவேண்டும். யாரை ஏமாற்ற இந்த வெறும் கோஷம்? விரைவில் நல்லதொரு அறிவிப்பு வரும். அதன்மூலம் அதிகார போதை கொண்டவர்களின் முகமூடி அவிழும்.
-
majeeth
yenna oru kolgai illamal irugeeral….
please update Your knowledge. money come from Saudi Arabia you and your mates enjoy….
Saudi give money follow quran
other wise no…
what…….
all JAQH people like that
-
majeeth
பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு
he is ready to come for விவாtham , send letter.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
எங்கள் விவாத அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் கடிதம் அனுப்பினால் ஏதேனும் மார்க்கத்தில் குறைவு ஏற்பட்டுவிடுமா?
இப்படிக்கு
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
Kaமாலுத்தீன் மதனி ஜாக் என்றால் நீங்கள் ஜாக் இல்லையா? அடிப்படையில் உங்கள் அமீர் ஆகிய கமாலுத்தீன் மதனியிடம் நீங்கள்தானே முதலில் விவாதம் செய்யவேண்டும். யாரை ஏமாற்ற இந்த …
எங்கள் அமீர் தவறு செய்தால் கூட நாங்கள் விவாதத்திற்கு அழைப்போம். நாங்கள் கமாலுதீன் மதனியிடம் விவாதம் செய்து விட்டோம். அவர் திருந்தி கணக்கில் செயல்பட்டார். உலக நிர்பந்தங்களால் மீண்டும் தவறிழைக்கும் போது அதற்கு பி.ஜே. ஆதரவு தெரிவித்து பாராட்டு கடிதம் அனுப்பினார்.
அதனால் தான் அவரையும் அழைத்து வந்தால் ஒரே நேரத்தில் இருவருடனும் விவாதம் என்று அழைப்பு விடுத்துள்ளோம். ஒரே மேடையில் இருவரும் இருந்து விவாதம் செய்தால் பிறை பிரச்சினையில் 90 சதவீதம் முடிந்து விடும்.
மேலும் நீங்கள் சிந்திக்கவும். நீங்கள் டி.என்.டி.ஜே அமைப்பில் இருந்து கொண்டே பி.ஜே யை விவாதத்திற்கு அழைப்பீர்களா? ஜாக்கில் சிந்தித்து செயல்பட அனுமதி உள்ளது. பி.ஜே யை பின்பற்றுபவர்களிடம் அது இருக்கிறதா? சிந்திக்கவும். நீங்கள் சிந்தித்து டி.என்.டி.ஜே விற்கு மாற்றமாக செயல்பட்டால் உங்களை அமைப்பில் நீக்காமல் வைப்பார்களா? பதிலிடவும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
சவூதி பணத்தில் வாழ்பவர்களுக்கு தான் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள். அதனால் அவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை தவறுதலாக எங்களிடம் சொல்லிவிட்டீர்கள் என நினைக்கிறோம்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-
அசாருதீன்
அஸ்ஸலாமு அலைக்கும்.. தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பி பதிளை கேட்டதற்கு தற்போது உங்களுக்காக பதில் http://www.onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/pirai_vivatha_savdal/ என்ற முகவரியில் வெளிவந்துள்ளது.. அதை படித்துவிட்டு தாங்களின் நிலையை உடன் கூறவும்
md.azarudeen, k.s.a
அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்
உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும்.
மற்றவை பின்
admin
jaqh.net
-
SADIQ
அஸ்ஸலாமு அழைக்கும் நோன்பு மாதங்களில் உங்கள் இனைய தல முகப்பில் பிறை பார்த்து நோன்பு வைபதாக்
அறிவிப்பு செய்தீர்கள் ஆனால் தற்போது பாம்பன் ஜமாஅத் நட்சத்திர நாட்காட்டி அடிபடையில் தொழுததாக
உங்கள் இனைய தலத்தில் வெளியிட்டுலீர்கள் உங்கள் நிலைப்பாடு எது உங்கள் நிலை பாடு சரியா பாம்பன் நிலைப்பாடு சரியா அல்லது பாம்பன் உங்கள் கட்டுபாட்டில் இல்லையா ஏன் இந்த முரண்பாடு
by sadiq dammam
…………………………………………………..
ஆதாரம்
………….
http://jaqh.in/
……………
1431 – ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை – பாம்பன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டி அடிப்படையில் ராமநாதபுரம் – பாம்பன் பகுதியில் ஈதுல்பித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் 200 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
பெருநாள் தொழுகை நடைபெற்ற இடம்: முஸல்லா
நாள்: வியாழக்கிழமை (9.9.2010)
பெருநாள் தொழுகை மற்றும் சிறப்புரை நிகழ்த்தியவர் :- சகோதரர்.தாஹிர் சைபுத்தீன்
நிகழ்ச்சி ஏற்பாடு – ஜாக் பாம்பன்
-
முகம்மது அசாருதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) பதிலுக்கு நன்றி… தாங்கள் இப்பிரச்சனையில் எந்த வித தாமதமும் இன்றி விரைந்து விவாத முடிவையே அல்லது விளக்கத்தையே வெளியிடவும்…
இன்ஷா அல்லாஹ் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறோம்…
-
முகம்மது அசாருதீன், (Dammam) K.S.A
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அன்புள்ள இனையதள அமைப்பபளர் அவர்களுக்கு நான் தாங்களுக்கு பி.ஜே-அவர்களில் பதிளை இரண்டு நாட்களுக்கு முன் எடுத்துக் கூறியிருந்தேன்.
தாங்களும் இதற்கான பதிள் விரைவில் என்று கூறினீர்கள். தாங்கள் விவாதத்திற்கு தயார் என்றால் tntj தலைமைக்கு கடிதம், அல்லது பதில் என்றால் உடன் பதிளை தந்தால் நன்றாக இருக்கும்.
தாங்கள் தான் எல்லாத்திலும் தெளிவாக இருப்பதாக கூறுகிறீர்களே.. அப்பரம் ஏன் நாளை கடத்துகிறீர்கள்.. என்று எனக்கு புரியவி்ல்லை. நீங்கள் பதில் தராமல் நாளை கடத்தினால் மக்கள் உங்களையே தப்பாக என்னக்கூடும்…
எனவே இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிளை எதிர்பார்கிறோம்.. அல்லது தங்களின் தாமத்திற்கான காரணத்தை தெரிவிக்கவும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம்முடைய விவாத அழைப்பை ஏற்க பி.ஜே அவர்களே எவ்வளவு நாள் சிந்தித்து பதில் எழுதியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.
இப்படிக்கு
நிர்வாகி
assalamualaikum.pj bathil enna?
-
முகம்மது அசாருதீன், (Dammam) K.S.A
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ…)
அன்புள்ள நிரவாகி அவர்களுக்கு… பி.ஜே அவர்களை தாங்கள் தானே விவாதத்திற்கு முதலில் அழைப்பு விடுத்தீர்கள். ஒருவரை விவாதத்திற்கு அழைப்பது என்றால் தாம் அதில் எந்த ஒரு சந்தேகமுதம் இல்லாமல். பூரண தெளிவுடன், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் தயார் செய்து கொண்டு தானே மற்றவரை விவாத்திற்கு அழைக்கவேண்டும்.
ஜுலை மாதத்தில் அழைப்பு விடுத் உங்களில் பதிளை பி.ஜே அலட்சியம் செய்தார் என்பதற்காக.. தாங்களும் அவர் தாமதித்த போது நாங்கள் தாமதித்தாள் தப்பில்லை என்று போட்டி போட போகிறீர்களா?
சரி எவ்வளவு கால அவகாசம் தேவை? எடுத்துக்கொள்ளுங்கள்.
விரைவாக தாங்கள் பதில் வந்தால் நன்றான இருக்கும்.
பொது மக்களும் இவ்விவாதத்தின் மூலம் நன்மையை அடைவார்கள்.
உங்கள் பார்வையில் பி.ஜே தாமதித்தார் என்ற தப்பை… நீங்களும் செய்து விடாதீர்கள்… ஒருவரை விவாதத்திற்கு அழைத்துவிட்டு தாமதிப்பதும் தவறு தான்…
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! (அல்குர்ஆன் 9-119)
தாங்களின் விவாத பதிலுடன் எதிர்பார்க்கும்…
சகோதரன்.. (மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதே எமது என்னம்)
வஸ்ஸலாம்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பி.ஜே நமது விவாத அழைப்பை நேரடியாக ஏற்றிருந்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான். அவர் அதில் எத்தனை விஷயங்களை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொன்றுக்கும் முதலில் பதில் எழுதப்பட வேண்டும். அவரும் பல நிபந்தனைகளுடன் தான் விவாத்திற்கு ஒத்திருக்கிறார். அதுதான் விவாத முறையா? என்பதை நாம் அலச வேண்டியுள்ளது.
மேலும் நாங்கள் விவாத அழைப்பை கொடுத்த பிறகு எத்தனை மக்கள் எங்கள் அறிவிப்பிற்கு கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கினார்களோ, அவர்கள் அனைவரும் தற்போது பி.ஜேயின் அறிவிப்பை படித்து ஆலோசனையும், கருத்துகளையும் வழங்கிவருகிறார்கள். பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே?
நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.
எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும்.
இப்படிக்கு
தள நிர்வாகி
-
முகம்மது அசாருதீன், (Dammam) K.S.A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ்… பதிலுக்கு நன்றி. தங்களின் ஹஜ் முடிந்ததும்.. இந்த பிரச்சனைல் எந்தவித தாமதமும் இன்றி விரைவாக ஆலோசனை செய்து விவாத முடிவை அறிவிக்கவும்.
Assalamu alaikkum warh
how’s the kamaludin madani
please discuss about the moon(C resent) . who see the moon on Thursday.. really play with Allah and his quran’
i humble requested to you, please remove or crush y(our) EGO…
and FOLLOW the NABI (SAL) way….
thanks Akkad
அஸ்ஸலாமு அலைக்கும்
இருதரப்பினரும் விவாத அழைப்பை ஏற்று இருப்பது உன்மையில் மகிழ்ச்சியான செய்தி இதை காலதாமதம் செய்யமல் ஹஜ்க்கு பின் விரைந்து முடிவு எடுத்தால் ஏகத்து வாதிகள் மத்தியில் இருந்து வந்த நீன்டகால பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்
-
Waseem Akram
Masha allah… Give more importance for the debate. Arrange it as soon as possible. Because it will be useful for the normal muslims (in knowledge ) to take decision on the concept of “MOON”…
Assalamu alaikum.
The whole Islamic world accepted the sunrise and sunset timings and follow it in their daytoday life. Alter their Salaath timings on the basis of sun rise and set.
It is a great amazement for us, why they are not accept the Moon rise and Moon set timings?. If the muslim umma accepted the Moon rise and setting timings then the calculations of the moon phases is very easily predictable.
I feel very sorry about the muslim ummah has wrongly guided by those Ulemas who refused to think about this.
1. If prayer timings is predicted on the basis of sunrise and sun set., Why the day is not predicted by the moon rise and moon set?
2. While seeing the sun, you can calculate what is the time is? Just like the same thing seeing the moon, you can calculate what day is?
I think the most of the common muslims depend upon their favourite ulema’s decisions. They expect that first their ulemas change their decisions regarding the
moon calculations then the common muslims accepted and followed their decisions.
It is very bad thing that the muslims who called themselves “non madhab people” “we are the people who only follow Quran and sunnah” were also in the same position.
I pray May Allahuthaalla Clear all doubts of the ummah and bring their in a correct way and straight way.
Zazakkalahu khairan for your tireless efforts in this regards. May Allah pour His rahamah on your teem.
Dear Brother! Assalamu alaikum.
It is a very good thing to hear the tntj brothers started to see the moon phases.Insha Allah they will very soon come to accept the calculations. Because as per their observation, the shawwal I st crecent is on 10.09.2010. According to them shawwal has ended its 29th phase on 08.10.2010 on that day they could not saw the crecent and they make their shawwal as 30.that is they added 09.10.2010 as shawwal 30.
Again they consider 10.10.2010 as Ist crecent of Dhulqadha.then their dhulqadha month was end on its 29th phase on 07/11/2010.Again they observe the moon sighting and could not see the crecent on 07.11.2010 and decided to complete their dhulqadha month as 30 on 08.11.2010.
On that basis of this.,the tntj brothers announced 09.11.2010 as their Ist date of Dhul Hajj and declared according to that observation17.11.2010 is arafa and 18.11.2010 is edhal adha.
First of all I thank tntj brothers for their observation. Any how they came to Observe and see the moon continuously. Because the Basis of Prediction and Calculation of the moon phases is continuous observation of the moon.
Actually they commit a great mistake in observation. But if they continuously observe the moon, then very soon they will come to the calculation.
In their above observation they finished the two months as 30,30. According to them their dhulhajj starts on 09.11.10 and again they reached their 29th on 18.12.2010. on that evening they going to see the crecent and make their dhulhajj as 29th Insha Allah.
But they will consider the “MOONRAAM Pirai” as their Ist day of Muharram that is 19-12-2010. [Actual Muharram starts on 17/12/2010.]
I think InshaAllah they will found their decision is wrong on that day. Because “moonraam pirai” never become the “mudhal pirai”
May Allah subanahuthaala clarify very soon Insha Allah. Please brothers think before your decision.
-
Noshath
Assalamu aliakum,
I too go with Syed Nizamullah. As the month has to be extended as 30 days for Dul Hajj, and if the crescent is viewed insha Allah on a day earlier. Then the Dul haj month will be of 28 days, which is a very wrong criteria. I think both the Jamath is missing something common. Let Allah make usto understand.
-
முகம்மது அசாருதீன், (Dammam) K.S.A
அஸ்ஸலாமு அலைக்கும்… (வரஹ்…)
அன்புள்ள இணைய அமைப்பாளர்களுக்கு… தாங்கள் வாக்களித்தது போன்று அல்லாஹ்வுடைய கிருபையால்… ஹஜ் முடிந்து விட்டது… தற்போது பிறை குறித்த பி.ஜே.யின் பதில் விவாத அழைப்பை எப்போது ஏற்றுக போகிறீர்கள்… தாங்கள் தாமதிக்காமல் உடன் பதில் கொடுத்து இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவும்… இன்ஷா அல்லாஹ் விரைவில் தாங்கள் பி.ஜே.வை அழைப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.. வஸ்ஸலாம்….
தவ்ஹீத் வாதிகள் அனைவரும் இதன் மூலம் தெளிவடைய உதவிடுவீர்…
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்ட பொதுமானவன்.
வஸ்ஸலாம்.