Super User
Super User
Offline
0

விடையே இல்லாத வினாக்களா இவை?

முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில்

பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்!

பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக்

கட்டளையிட்டுள்ளான். அதாவது

1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது,

2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது,

3. துல் ஹஜ்ஜூ 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜூவுடைய கிரியைகளை நிறைவேற்றுவது,

4. முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை நோற்பது,

5. அய்யாமுல் பீழ் என்னும் மாதந்தோரும் வெண்மை நாட்களின் சுன்னத்தான மூன்று நோன்புகள்,

6. ஹஜ்ஜூக்கு செல்லாதோர் துல்ஹஜ்ஜூ மாதம் 9-வது நாள் அரஃபா நோன்பு நோற்பது,

7. அனைத்து இஸ்லாமிய மாதங்களையும் ஆரம்பித்தல்,

8. குர்ஆன் கூறும் புனித மாதங்களைச் சரியாகத் துவங்குதல்,

9. ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய காலம்,

10. தலாக் சொல்லப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்ணுடைய இத்தாவின் மாதக் கணக்கு,

11. கடன் கொடுக்கல் வாங்கள் பற்றிய தவணை பத்திர காலங்களை குறித்தல்,

உட்பட ஒரு முஸ்லிமின் அனைத்து வணக்கங்களும், வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக்

கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும்.

பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் கட்டளையும், வழிமுறையும் ஆகும் (ஆதாரம் முஸன்னஃப்

அப்துர்ரஸாக் 7306). நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம்

முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் (பைஹகீ-8018, இப்னு குஜைமாஹ்-2024). துல்கஃதா

மாதத்தின் இறுதி ஐந்து நாட்கள் மீதம் இருந்த போது ஹஜ்ஜூக்கு சென்றோம் என அன்னை ஆயிஷா (ரழி)

அவர்கள் அறிவித்துள்ளார்கள் (புஹாரி 1633). அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள்

ஷஃஅபானுடைய பிறைகளை மனனம் செய்யும் அளவுக்கு கவனித்து வருவார்கள் (அபூதாவூத்

1993) என்பதையும் அறிகிறோம். நபி (ஸல்) அவர்களின் அன்றைய கால நடைமுறையும், இன்றைய

நவீனகால அறிவியல் முறையும் பிறைக் கணக்கீட்டில் முரண்பாடில்லாமல் அமைந்திருப்பது மிகப் பெரும்

முஸ்லிம்களில் பலர் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் வரும் நபிமொழியை பிறையை பார்த்த

பின்னரே மாதத்தைத் துவங்க வேண்டும், நோன்பு வைக்க வேண்டும் எனத் தவறாக விளங்கியுள்ளனர்.

அதனால் ஒரு வருடத்திற்கு ஷஃபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து

பேசுகின்றனர். மேலும் மாதத்தின் 29-வது நாள் என்று அவரவர்கள் தாங்களாகவே தீர்மானித்துக் கொண்ட

ஒரு நாளில் தெரியாத பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கின்றனர்.

இச்செயலையோ, பிறையை பார்த்த பின் நோன்பு வைக்க வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கற்றுத்

இன்னும் 30-நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தேய்பிறைகளின் இறுதி நாட்களான 27, 28, 29 ஆகிய

நாட்களில் பிறையை மேற்கு திசையில் மஃரிபு வேளையில் பார்க்க இயலாது. மாறாக அவற்றை சூரியன்

உதயத்திற்கு முன்னர் ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில்தான் பார்க்க முடியும். நாம் எந்தக் கிழமையில்

பிறையைக் கவனிக்கின்றோமோ அது அந்த கிழமைக்குரியது, அடுத்த நாளுக்குரியது அல்ல (முஸ்லிம் -

1885) என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

சந்திரனின் அனைத்து படித்தரங்களையும், அதற்குரிய மனாஜிலையும் தொடர்ந்து

கவனமாக அவதானித்து வரும் ஹிஜ்ரி கமிட்டியினர்களாகிய நாம் தான்

அப்பழுக்கற்ற ஒரிஜினல் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர். ஒரு வருடத்திற்கு இரண்டு

தினங்கள் மட்டுமே பிறைபற்றி சிந்திப்பவர்கள் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர் ஆகவே

மாட்டார்கள். இதை முன்னரே விளக்கி விட்டோம்.

இவ்வளவு விளங்கங்களுக்குப் பிறகும் 'ஸூமூ லி ருஃயத்திஹி ' என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்துக்

கொண்டு 29-வது நாள் என்று அவரவர்கள் தாங்களாகவே தீர்மானித்துக் கொண்ட ஒரு நாளில் பிறந்த

பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்த நாள்தான் புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய

வேண்டும் என்பது மார்க்கக் கட்டளையில்லை. மேலும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின்

நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். மாதத்தின் 29-வது நாள் அன்று

மஃரிபு வேளையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து பின்புதான் அமல் செய்ய வேண்டும் என்று

மார்க்கத்தின் பெயரால் மக்களுக்கு போதிப்பது மிகவும் தவறாகும். அவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களை

நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை மிகமிக கண்ணியத்தோடு வினவுகிறோம். இதற்கு குர்ஆன் சுன்னா

அடிப்படையில் தயவுசெய்து நேர்மையான முறையில் சிந்தித்து பதில் தாருங்கள் என்று கேட்கிறோம்.

1. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் என்றாவது ரமழான் அல்லது ஷவ்வால்

மாதத்தில் 29-வது நாள் என்று நீங்கள் தீர்மானிப்பதுபோல தீர்மானித்துக் கொண்டு அந்த ஒரு நாளில்

மட்டும் பிறையை அவர்களின் புறக்கண்ணால் பார்த்து அறிவித்துள்ளார்களா? பிறர் பிறையை பார்த்தால்

அதை என்னிடம் வந்து அறிவியுங்கள் என்று என்றாவது கூறினார்களா? ஸஹாபாக்களில் யாரையாவது

பிறைக் கமிட்டியினராக நியமித்தார்களா? (இப்படி நாம் கேட்பதால் நாம் பிறை பார்ப்பதை

எதிர்க்கிறோம் என்று திசை திருப்ப வேண்டாம். மாறாக அனைத்து நாட்களின்

பிறைகளையும் கவனமாக பார்த்து அவதானிக்க நீங்கள் தவறுவதைத்தான்

சுட்டிக்காட்டுகிறோம். நீங்கள் இன்று செய்து கொண்டிருப்பதை போல நபி (ஸல்) அவர்கள்

ஒருகாலும் செய்திடவில்லை என்கிறோம்).

2. நபி (ஸல்) அவர்கள் எந்தத் திசையில்? எந்த வேளையில்? எந்தெந்த நாட்களில்? பிறையைப்

புறக்கண்களால் பார்க்க நமக்கு கட்டளை இட்டுள்ளார்கள்? மாதத்தின் 29-வது நாள் என்று நீங்கள்

தீர்மானிப்பது போன்றுதான் அவர்களும் தீர்மானித்துக் கொண்டார்களா? அப்படியானால் பிறைகளின்

படித்தரங்களைப் பற்றிய (2:189, 10:5, 36:39) அல்லாஹ்வின் அறிவிப்புகளையும், கட்டளைகளையும்

அவர்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்கள்?

3. வளர்பிறைகள், தேய்பிறைகள், பவுர்ணமி என்று அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள்

புறக்கண்ணால் பார்த்து வந்தார்களா? அவர்கள் தினமும் பிறந்த பிறையை அவதானித்தார்களா? அல்லது

மாதத்தின் 29-வது நாள் மட்டும் பிறையை பார்த்தார்களா? இதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தைத்

தரமுடியமா? இவ்வாறு கேட்பதற்குக் காரணம் மாதத்தின் 29-வது நாள் மாட்டும்தான் பிறையை பார்க்க

வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இட்டுள்ளதாக நீங்கள் பிரச்சாரம் செய்வதால்தான் இதற்கு நேரடியான

ஹதீஸ் ஆதாரத்தைக் கேட்கிறோம்.

4. ஷஃஅபான் 29 மற்றும் ரமழான் 29-வது நாள் என்று நினைத்துக் கொண்டு அன்று மஃரிபு

வேளையில் மேற்கு திசையை நோக்கி நின்று கொண்டு பிறையைப் பார்ப்பதை கற்றுக் கொடுத்தது யார்?

நபி (ஸல்) அவர்கள் மேற்படி இரு தினங்களில் மட்டும் மேற்குத் திசையில் மஃரிபு நேரத்தில் பிறையைப்

பாருங்கள் என்று சொல்லி உள்ளார்களா? அன்று 29-வது நாள்தான் என்ற முடிவிற்கு எப்படி நீங்கள்

வந்தீர்கள்? மாதத்தின் 28, 27, 26 போன்ற மாதத்தின் தேய்பிறையின் இறுதி நாட்களிலும் பிறையானது

மேற்கு திசையில் மஃரிபு வேளையில்தான் தெரிகிறதா?

5. 'ஸூமூ லி ருஃயத்திஹி ' என்றால் பிறந்த பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று பொருள்

என மேடையில் முழங்கும் எந்த ஆலிம்களும் பிறைகளை புறக்கண்ணால் பார்த்து வருவதில்லை என்பதே

உண்மை. இந்நிலையில் அத்தகைய ஆலிம்களின் தவறான பிரச்சாரத்தினால்தான் மூன்று வௌ;வேறான

நாட்களில் பெருநாள் உட்பட முஸ்லிம்களுக்கு ஒரு கிழமைக்கு மூன்று தேதிகள் மற்றும் மூன்று கிழமைக்கு

ஒரு தேதியும் வருகிறது. இதைத்தான் குர்ஆனும் சுன்னாவும் போதிக்கிறதா? இதற்கு என்ன ஆதாரம்?

நீங்கள் பிறந்த பிறையை சரியாக கணக்கிடாமலும், பிறந்த பிறையை பார்க்காமலும் இருந்து விட்டால்

சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் இருந்துவிடுமா என்ன?

6. ஷஃஅபான் மாதத்தின் 29-வது நாள் என்று நீங்களாக எண்ணிக் கொள்ளும் அந்த ஒரு

நாளில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு, அதன் பின்புதான் ரமழானின் முதல்

நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். அதுபோல ரமழானின் 29-

வது நாள் என்று நீங்கள் முடிவுசெய்துள்ள ஒருநாளில் மஃரிபு வேளையில் 'பெருநாள்

பிறையை பாருங்கள்' என்று மக்களைத் தூண்டுகிறீர்கள். பொதுவாக ஒரு மாதத்தின் 29-

வது நாளன்று பிறை புறக்க்கண்களுக்கு மேற்குத் திசையில் தெரியுமா? தெரியாதல்லவா?

இக்கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள்

இரவாகவும் இருக்கும் துருவப் பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன? 6

மாத பகல் காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த 6 மாதங்களும்

பட்டினி கிடக்க வேண்டுமா? அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை தெரியவில்லை

என்றால் அம்மக்களுக்கு நோன்பே கடமை இல்லையா? இன்னும் அத்துருவ பிரதேச

நாடுகளிலுள்ள பல ஊர்களில், ஒரு மாதத்திற்கு சுமார் 10 நாட்கள் வரை சந்திரன்

உதயமாகாமல் இருக்கும். அதுபோல சந்திரன் மறைவும் சுமார் 10 நாட்கள் வரை

இருக்காது. அப்பகுதி மக்களுக்கு சட்டம் என்ன?. பக்கத்து நாடுகளை வைத்து கணக்கிட்டுக்

கொள்வோம், இதற்கு தஜ்ஜால் சம்பந்தமாக வரும் ஹதீஸில் கணக்கிட்டுக் கொள்வதற்கு

ஆதாரம் இருக்கிறது என்று கூற வேண்டாம். பிறையைப் புறக்கண்ணால் பார்த்த

பின்புதான் அமல்செய்ய வேண்டும் என்றும், பிறையை கண்களால் பார்க்காமல் நோன்பை

தொடங்கக் கூடாது என்றும் நீங்கள் கூறுகிற உங்களிள் சட்ட விதியின் அடிப்படையில்

இதற்கு பதில் கூறுங்கள்.

7. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்தார்களா?

ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பார்த்தார்களா? காரணம் ஒரு வருடத்தின்

பன்னிரண்டு மாதங்களில் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்களைத் துவங்க மட்டுமே பிறந்த பிறையை

தேடி அலையும் படலத்தை நடத்துகிறீர்கள். ஏனைய 9 மாதங்களிலும் நீங்கள் காலண்டரைதான்

பின்பற்றுகிறீர்கள் அல்லது பிறைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

இப்படித்தான் மார்க்கம் நமக்குக் கற்றுத் தருகிறதா?

இப்படி நாம் கேள்வி எழுப்பி வருவதால், பிரபல தமிழக இயக்கம் தற்போது மாதக்

கடைசியில் பிறை அறிவிப்பு தங்கள் இணையதளத்தில் வெளியிடுகிறது. அதில்

பெரும்பாலும் மேகமூட்டம் என்ற வேடிக்கையும், தமிழக எல்கைக்குள்தான் பிறை பார்க்க

வேண்டும் என்ற கட்டுப்பாடும் காட்சியளிக்கிறதே தவிர, உருப்படியான தகவல்கள் இடம்

பெறுவதில்லை.

8. விஞ்ஞானத்தின் துணைகொண்டு துல்லிய கணக்கீட்டின் அடிப்படையில் புவிமைய சங்கமம்

(Geocentric Conjunction), பவுர்ணமி (Full Moon), தலைப்பிறை (First Waxing Crescent) போன்றவற்றை

அறிவிக்கிறோம். அப்போது நாங்கள் என்ன சொல்கிறோம் என்று கூட விளங்க முற்படாமல் நபி (ஸல்)

அவர்கள் பிறந்த பிறையை புறக் கண்ணால்தான் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி,

அல்லாஹ்வின் செயலாக உள்ள அறிவியல் உண்மையை அலட்சியம் செய்றீர்கள். அப்படி

அறிவியின் துல்லியமான கணக்கீட்டை மறுக்கும் நீங்கள் தலைப் பிறையை இரவு 10 மணிக்கு

பார்த்ததாகவோ, அல்லது நன்பகல் வேளையில் பார்த்ததாகவோ ஒருவர் அறிவித்தால் அதை ஏற்றுக்

கொள்வீர்களா? அல்லது அந்த அறிவிப்பை மறுப்பீர்களா? விஞ்ஞானத்தின் துணையின்றி அப்பிறை

அறிவிப்பை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்? அல்லது எப்படி மறுப்பீர்கள்?

9. தலைப்பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதாக வரும் தகவலை மாநில, தேசிய அல்லது சர்வதேச

எல்லைக் கோட்டை வைத்து வரையறுக்க ஆதாரம் என்ன? அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும்

முக்கியத்துவம்தான் என்ன? அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான்

அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள்

நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான்

அறிவிக்கிறார்களா? அல்லது இனம் காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக் கொண்டு

அறிவிக்கின்றனரா? அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்களை பற்றி முறையாக அறிவிப்பு

செய்யப்படுகிறதா? அவர்களின் சாட்சியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள்

உண்மையிலேயே அக்கரை எடுக்கின்றனரா?

10. பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில்,

புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அப்படி பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான்

மாதத்தைத் துவங்குவோம் என்று மார்தட்டுபவர்கள், தத்தமது இயக்கங்கள், அமைப்புகள் பெயரில்

முற்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வியாபாரம் செய்வதேன்? இதுமட்டும் நபிவழிக்கு முரணானது

இவர்களின் வாதப்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் சூழ்ந்து பிறையை

மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய வேண்டும். இத்தகைய கருத்துடைய

இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது

என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட

முடிகிறது? ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள்

காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா? ஹிஜ்ரி

நாட்காட்டியை எதிர்ப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பவர்கள் இவற்றை சிந்திக்க

மறந்ததேன்? முதலில் அவர்களின் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அதற்கு மார்க்க

அடிப்படையில் ஆதாரமுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தவறுவதேன்?

பிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே

அல்லாஹ்வுடைய கட்டளையும், தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் ஆகும். இவற்றை நாம்

பவ்வேறு ஆதாரங்களையும் நிறுவி குறிப்பிட்டுள்ளோம். மேற்படி இக்கேள்விகளை நாம் கேட்பது

சம்பந்தப்பட்டவர்களின் அறியாமையை வெளிக்கொண்டு வந்து மக்கள் மத்தியில் அவர்களைக் இழிவு

படுத்துவதற்காக அல்ல. நிச்சயமாக அப்படிப்பட்ட எத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை. மாறாக

மாதத்தில் 29-வது நாள் என்று ஒருநாளை தீர்மானித்துக் கொண்டு அந்த ஒரு நாளில் மட்டும் பிறையை

பார்க்க வேண்டும் என்று நம்புபவர்கள் சிந்திப்பதற்காகத்தான் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளோம்.

எதிர்மறையான பொருளில் உண்மையை விளக்குவதற்காகதான் நாம் மேற்படி கேள்விகளை

கேட்டுள்ளோம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply