Super User
Super User
Offline
0

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 38

பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இன்னும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன? என்பதையும் சற்று முன்னர் படித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை ஹதீஸ்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம்.

இன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை குறிப்பிட்ட விஷயத்தில் திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் பிறைகளைக் கணக்கிடத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் அறியத் தருகிறோம். மத்ஹபு இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி மத்ஹபு நூல்களின் பதியப்பட்டுள்ள குர்ஆன் சுன்னாவிற்கு முரணாண அனைத்து கருத்துக்களையும் நாம் மறுக்கிறோம். குர்ஆனும் சுன்னாவும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள். கீழ்க்காணும் மத்ஹபு இமாம்களின் கூற்றுக்கள் பிறைகள் விஷயத்தில் கணக்கிட வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கு முரணில்லாத வகையில் அமைந்துள்ளதால் அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்புக்காக இங்கு பதிக்கிறோம்.

وَجُمْلَةُ الْقَوْلِ أَنَّنَا بَيْنَ أَمْرَيْنِ : إِمَّا أَنْ نَعْمَلَ بِالرُّؤْيَةِ فِي جَمِيعِ مَوَاقِيتِ الْعِبَادَاتِ أَخْذًا بِظَوَاهِرِ النُّصُوصِ وَحُسْبَانِهَا تَعَبُّدِيَّةً ، وَحِينَئِذٍ يَجِبُ عَلَى كُلِّ مُؤَذِّنٍ أَلَّا يُؤَذِّنَ حَتَّى يَرَى نُورَ الْفَجْرِ الصَّادِقِ مُسْتَطِيرًا مُنْتَشِرًا فِي الْأُفُقِ ، وَحَتَّى يَرَى الزَّوَالَ وَالْغُرُوبَ إِلَخْ ، وَإِمَّا أَنْ نَعْمَلَ بِالْحِسَابِ الْمَقْطُوعِ بِهِ لِأَنَّهُ أَقْرَبُ إِلَى مَقْصِدِ الشَّارِعِ ، وَهُوَ الْعِلْمُ الْقَطْعِيُّ بِالْمَوَاقِيتِ وَعَدَمِ الِاخْتِلَافِ فِيهَا ، وَحِينَئِذٍ يُمْكِنُ وَضْعُ تَقْوِيمٍ عَامٍّ تُبَيَّنُ فِيهِ الْأَوْقَاتُ الَّتِي يُرَى فِيهَا هِلَالُ كُلِّ شَهْرٍ فِي كُلِّ قُطْرٍ عِنْدَ الْمَانِعِ مِنَ الرُّؤْيَةِ وَتُوَزَّعُ فِي الْعَالَمِ ، فَإِذَا زَادُوا عَلَيْهَا اسْتِهْلَالَ جَمَاعَةٍ فِي كُلِّ مَكَانٍ فَإِنْ رَأَوْهُ كَانَ ذَلِكَ نُورًا عَلَى نُورٍ ، وَأَمَّا هَذَا الِاخْتِلَافُ وَتَرْكُ النُّصُوصِ فِي جَمِيعِ الْمَوَاقِيتِ - عَمَلًا بِالْحِسَابِ مَا عَدَا مَسْأَلَةَ الْهِلَالِ - فَلَا وَجْهَ وَلَا دَلِيلَ عَلَيْهِ ، وَلَمْ يَقُلْ بِهِ إِمَامٌ مُجْتَهِدٌ بَلْ هُوَ مِنْ قَبِيلِ (أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ) (2 : 85) وَاللهُ أَعْلَمُ وَأَحْكَمُ ا هـ . تفسير المنار - (2 / 151

ஒட்டுமொத்த கருத்துப்படி நாம் இரு விஷயங்களுக்கு மத்தியில் உள்ளோம். ஒன்று இபாதத் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களின் வெளிப்படையான பொருளையும், அதன் கணக்கையும் எடுத்து வணக்க வழிபாடுகளின் நேரங்கள் அனைத்திலும் பார்ப்பதைக் கொண்டே அமல் செய்வதாகும். இந்நேரத்தில் அடிவானத்தில் படர்ந்து அகன்று வருகின்ற ஃபஜ்ர் நேரத்தின் ஒளியை காணும் வரையிலும், சூரியன் உச்சி சாய்வதையும், அது மறைவதையும் காணும் வரை பாங்கு சொல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஅத்தினுக்கும் வாஜிபாகி விடும்.

மற்றொரு கருத்து உறுதி செய்யப்பட்ட கணக்கீட்டின் படி அமல் செய்வதாகும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கத்திற்கு மிக நெருக்கமானதாகும். இதுவே நேரங்கள் (காலங்கள்) பற்றிய உறுதியான கல்வியும், கருத்து வேறுபாடில்லாத நிலையும் ஆகும். இச்சமயம் பிறையை பார்க்க முடியாத நேரத்தில் (காலத்தில்) ஒவ்வொரு நாட்டிலும் (பகுதியிலும்) ஒவ்வொரு மாதத்தின் பிறை பார்க்கப்படுகின்ற நேரங்களை விளக்குகின்ற பொது நாட்காட்டியை பயன்படுத்துவதற்கு இது சாத்தியமாகும். மேலும் அது உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நாட்காட்டியுடன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜமாஅத் (கூட்டம்) பிறை தொடங்கப் படுவதை கண்டால் அது தெளிவுக்கு மேல் தெளிவாகும்.

இக்கருத்து வேறுபாடு பிறையின் சட்டத்தைத் தவிர கணக்கீட்டின் படி அமல் செய்வதற்குத் தான். மற்ற ஏனைய நேரங்களில் தெளிவான ஆதாரங்களை விட்டு விடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் இதனை எந்த ஆய்வாளரும் (முஜ்தஹிதும்) சொல்லவில்லை. மாறாக இது (நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? என்ற) அல்குர்ஆனின் 2:85-வது வசனத்தைச் சார்ந்ததாகும்.

نَقَلَ الْقَلْيُوبِيُّ عَلَى الْجَلَالِ عَنْ الْعَبَّادِيُّ أَنَّهُ قَالَ إذَا دَلَّ الْحِسَابُ الْقَطْعِيُّ عَلَى عَدَمِ رُؤْيَتِهِ لَمْ يُقْبَلْ قَوْلُ الشُّهُودِ الْعُدُولِ بِرُؤْيَتِهِ وَتُرَدُّ شَهَادَتُهُمْ بِهَا وَلَا يَجُوزُ الصَّوْمُ حِينَئِذٍ وَمُخَالَفَةُ ذَلِكَ مُعَانَدَةٌ وَمُكَابَرَةٌ ا هـ . (شرح البهجة الوردية -7 / 17

சாட்சியாளர் காட்சியைத் தான் கண்டதாகக் கூறினாலும், காட்சியைக் காண முடியாது என்பது தீர்க்கமான கணக்கின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால், நீதமான சாட்சியாளரின் கூற்று காட்சி குறித்து ஏற்றுக்கொள்ளப் படாது. இதன் காரணமாக அவர்களின் சாட்சிகள் மறுக்கப்படும். மேலும், அச்சமயம் நோன்பு நோற்ப்பது அணுமதிக்கப் படாது. அதை மறுப்பது வரம்பு மீறுவதும் பெரிய பாவமுமாகும் என இமாம் அப்பாதி அவர்களிடமிருந்து கல்யூபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : ஷர்ஹ் அல் பஹ்ஜத்துல் வர்தீயா 7ஃ17).

قَالَ السُّبْكِيُّ : لَا تُقْبَلُ هَذِهِ الشَّهَادَةُ ؛ لِأَنَّ الْحِسَابَ قَطْعِيٌّ وَالشَّهَادَةَ ظَنِّيَّةٌ ، وَالظَّنِّيُّ لَا يُعَارِضُ الْقَطْعِيَّ ،)مغني المحتاج إلى معرفة ألفاظ المنهاج - (5 / 165)(. رد المحتار - (7 / 365

இச்சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது ஏனெனில், கணக்கே தீர்க்கமானது. சாட்சியோ கற்பனை. இன்னும், கற்பனையால் தீர்க்கமானதை எதிர்க்க முடியாது என இமாம் ஸூப்கி கூறினார். (நூல் : முக்னியுல் முஹ்தாஜ் இலா மஅரிஃபதில்ஃபாதில் மின்ஹாஜ் 5ஃ165, ரத்துல் முக்தார் 7ஃ365).

இமாம் ஸூப்கி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.


வானவியல் கணக்கும், அதை எழுதுவதையும் நாம் அறிந்திருக்க வில்லை. இந்நிலை நமக்கு எதுவரை என்றால் நட்சத்திரங்களின் கல்வியும், சந்திர ஓட்டத்தின் கல்வியும் நாம் உறுதியாகப் பெற்றுக் கொள்ளும் வரையில்தான். மேலும், நாம் அந்தக் கல்வியின் மூலம் மாதத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என (இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்பதற்கு விளக்கமாக) இப்னு மாலிக் கூறினார்கள். (நூல்: அல்மிர்க்காத் ஷர்ஹூல் மிஸ்காத்)

இமாம் இப்னு மாலிக் (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.

அரபு சமுதாயம்; அல்லது தம்மை குறித்தே கண்ணியமிக்க நபி (ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா) கூறினார்கள். (அறிவித்தவர் : அல்கஃத்தலானி)

இமாம் அல்கஃத்தலானி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள்.

அரபு சமுதாயத்தையும் தம்மையும் குறித்தே நபி(ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்று) குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஃபத்ஹூல் பாரி).

பிறைகளைக் கணக்கிடுவதுதான் தீர்க்கமானது, புறக்கண் பார்வையால் அமைந்த பிறை சாட்சியம் தோராயமானது என்று மத்ஹபு இமாம்கள் கூறியுள்ளார்கள். மேலும் பிறையைக் புறக்கண்களால் பார்க்க முடியாது என்று தீர்க்கமான கணக்கிட்டின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிறையைப் பார்த்தேன் என்று சாட்சி கூறுபவர் நீதமானவராக இருந்தாலும் தீர்க்கமான கணக்கிட்டிற்கு முரணாக இருந்தால் அவரது பிறை சாட்சியை மறுக்க வேண்டும் என்றெல்லாம் மத்ஹபு நூற்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. இதிலிருந்து பெரும்பான்மையான மத்ஹபு சார்ந்த இமாம்கள்கூட புறக்கண்களால் பிறையைப் பார்ப்பதை மறுத்தும், பிறைகளைக் கணக்கிடுவதை வலியுறுத்தியும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply