Super User
Super User
Offline
0

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 37

 

அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு முன்னர் சந்திரனின் மனாஸிலை அடிப்படையாகக் கொண்டு தேதியைக் கணக்கிட்டு வந்தனர். இன்னும் சந்திர மாதத்தின் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களைச் சூட்டி அடையாளப் படுத்தினர். அவர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை வைத்து ஆண்டுகளை குறித்துக் கொண்டனர். இச்செய்திகளை தஃப்ஸீர் இப்னு கஃதீரில் காணலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் காலத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்தது.

இஸ்லாமிய மாதங்களைத் துவங்குவது முதல் குழந்தைக்கு பாலூட்டும் காலம், இத்தாவின் மாதக் கணக்கு உட்பட ஃபர்ளான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போன்ற வணக்கங்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பிறைகளை வைத்து மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில் தனக்கு அனுப்பும் கடிதங்களில் தேதிகள் குறிக்கப்படுவதில்லை என முறையிட்டிருந்தார்கள். அதைப் புரிந்து கொண்ட கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சக நபித்தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு முஸ்லிம்களின் நாட்காட்டியுடைய ஆண்டின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

காரணம் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றதை இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்துக் கருதினர். இன்னும் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாக அந்த ஹிஜ்ரத் பயணம் அமைந்தது. மேலும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்குப் பின்னரே துவங்கியது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய ஸஹாபாக்களின் ஏகோபித்த ('இஜ்மாவுஸ் ஸஹாபா') முடிவு அறிவிக்கப்பட்டது.

அதாவது அல்லாஹ் நமக்கருளிய சந்திர நாட்காட்டியைக் கொண்டே ஆண்டுகளை எண்ணிக் கணக்கிட வேண்டும் என்றும், ஹிஜ்ரி நாட்காட்டியுடைய ஆண்டின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திலிருந்து (ர்தைசi நுசய) ஆரம்பிக்கப் படவேண்டும் என்றும் வரையறுக்கப் பட்டது. இதை நிறுவுவதற்காக உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்திலிருந்து சுமார் 200 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அன்றைய ஸஹாபாக்கள் கணக்கிட்டனர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிலவியிருந்த 'உம்மி சமுதாயம்' என்ற நிலை கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் மெல்ல மெல்ல விலகத் துவங்கியதை இந்த வரலாற்றுச் சம்பவம் பறைசாற்றுகிறது.

இதில் நாம் கூறவருவது என்னவெனில் அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகளைப் பற்றி கவலைபட வில்லை. மேலும் இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் நம்புவதைப்போல மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்க வில்லை என்பதை அறியலாம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் போது, மினாவில் வைத்து வரலாற்று சிறப்புமிகு உரை நிகழ்த்தியதை முஸ்லிம் 4477-வது ஹதீஸ் போன்ற பல ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. அப்போது கூடியிருந்த தோழர்களிடம் இந்த நாள் எந்த நாள்? என்று கேள்வி கேட்டனர். பிறகு அந்த நாள் 'யவ்முன் நஹர்' என்று நபி (ஸல்) அவர்களே விடையும் பகர்ந்தார்கள். அதாவது குர்பானிப் பிராணிகளை அறுத்துப் பலியிட வேண்டிய துல்ஹஜ் 10-வது நாள்தான் அந்த நாள் என்பதை தெளிவு படுத்தினார்கள். மேலும் ''அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த பழைய நிலைக்கே காலம் திரும்பிவிட்டது'' என்று அறிவித்து இஸ்லாமிய மாதங்களில் உள்ள நாட்கள் எவ்வித குழப்பங்களுக்கும் அப்பாற்பட்டு துல்லியமாக உள்ளதை உம்மத்திற்கு உணர்த்தினார்கள்.

இதன் அடிப்படையில் நபி (ஸல்) ஹஜ்ஜத்துல் விதாவின் துல்ஹஜ் 10-வது நாள் (அதாவது ஹிஜ்ரி 10-12-10) வெள்ளிக் கிழமை என்ற அளவுகோலை வைத்து தற்போதைய சந்திர நாட்காட்டியின் தேதிகள் சரிவர பொருந்திப் போகின்றதா என்பதை பின்னோக்கிக் கணக்கிட்டும் நாம் பரிசோதித்துக் கொள்ளலாம். எனவேதான் ஹஜ்ஜத்துல் விதாவின் கிழமைகளிலும், பேருரை நிகழ்த்தப்பட்ட இடம், மற்றும் அதன் தேதிகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் விரோதிகள் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி குழப்பங்களைச் செய்துள்ளனர். அவற்றைத் தனித் தலைப்பில் விரிவான புத்தகமாக இன்ஷா அல்லாஹ் நாம் விளக்குவோம்.

இதில் நாம் பதிவு செய்வது என்னவெனில் மேற்படி துல்ஹஜ் 10-வது நாள் ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களோடு வீற்றிருந்த உமர் (ரழி) அவர்களும், நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் பேருரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க நாளான 01-01-01 (முதல் நாள்- முதல்மாதம் - ஒன்றாவது வருடம்) என்பதை ஹிஜ்ரத்திலிருந்து மிகத்துல்லியமாகக் கணக்கிட்டு வரையறுத்தனர். 01-01-01 அன்று வியாழக்கிழமை என்பதும் அந்த நாளுக்கு முந்தைய நாள் புதன்கிழமை அமாவாசை என்னும் புவிமைய சங்கமநாள் என்பதையும் நாம் கணக்கிட்டு அறிய முடிகிறது. அத்தோடு ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன் கிழமை அன்றுதான் சந்திர மாதத்தின் இறுதிநாள் என்பதை மேலும் உறுதிபடுத்தும் முகமாக சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமித்து சூரியக் கிரகணமும் அந்த சங்கம நாளில் நடைபெற்றது.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் அந்த 'கும்ம'வுடைய நாள் (அமாவாசை) என்னும் புவிமைய சங்கமநாள்தான் சந்திர மாதத்தின் இறுதிநாள் என்பதையும், அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பாடம் பெற்ற அந்த ஸஹாபாக்கள் ஹிஜ்ரி 01-01-01 ஆம் தேதியை வியாழக்கிழமையாக வரையறுத்து இந்த உம்மத்திற்கு நடைமுறையில் உணர்த்தி விட்டு சென்றுள்ளார்கள். இவற்றை முற்கால வரலாற்று நூற்களில் காணலாம். இன்னும் 01-01-01 ஆம் தேதியில்கூட வியாழக்கிழமை என்பதிலிருந்து வெள்ளிக் கிழமையாக மாற்றப்பட்ட சதிகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் மற்றொரு தலைப்பில் விளக்குவோம்.

கிழக்கில் பிறந்த பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் மேற்கில் புறக்கண்களால் பார்த்த பின்னரே மாதங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடில் எந்த ஸஹாபாக்களும் இருந்திருக்க வில்லை என்பதற்கு இந்நிகழ்வுகள் மாபெரும் சான்றாகும். காரணம் ஸஹாபாக்கள் பிறையை பார்த்த பின்னரே மாதங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை வைத்து ஹிஜ்ரி காலண்டரை நிறுவிட வில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக சான்று பகர்கிறது. விஞ்ஞானம் விழித்திடும் முன்னரே உம்மி நபியின் உத்தமத் தோழர்கள் இந்த அளவுக்கு மிகத்துல்லியமாக இஸ்லாமிய நாட்காட்டியை நிறுவியது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது - அல்லாஹூ அக்பர்.

ஹிஜ்ரி 01-01-01 வியாழக்கிழமைக்கு முந்தைய நாள் புதன்கிழமை அன்றுதான் சங்கமதினம் (அமாவாசை) என்பதையும் ஹிஜ்ரி 01-01-01 வியாழக்கிழமைதான் என்பதையும் பாதுகாக்கப்பட்ட வானியற் பௌதீகத் தரவுகளின் துல்லியமான பதிவுகள் உலகிற்கு இன்றும் பறைசாற்றுகின்றன. இதை ஏன் இங்கு அழுத்தமாகச் சொல்கிறோம் என்றால் ஹிஜ்ரி நாட்காட்டியின் துவக்கத் தேதியின் கிழமையை குழப்பி விடவேண்டும் என்று எண்ணிய இஸ்லாமிய விரோத சக்திகள், ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமை என்பதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை என்று மாற்றி அமைக்க பல சூழ்ச்சிகள் செய்தனர். இவற்றை நம்மில் எத்தனைபேர் அறிந்துள்ளோம்? அச்சூழ்ச்சிகளை நம்பி ஹிஜ்ரி காலண்டரை குறைகூறித் திரிபவர்களை என்னவென்று சொல்வது?

எனவே ஹிஜ்ரி 01-01-01 அன்று வியாழக்கிழமை என்ற அளவுகோலை வைத்தும், ஹிஜ்ரி 10-12-10 அன்று வெள்ளிக் கிழமை என்பதை வைத்தும் தற்போதைய சந்திர நாட்காட்டியின் தேதிகள் சரிவரப் பொருந்திப் போகின்றதா என்பதை பின்னோக்கிச் சென்று கணக்கிட்டு நாம் பரிசோதித்துக் கொள்ளலாம்.

இன்னும் சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் அமாவாசை என்னும் புவி மைய சங்கம நாள்தான் ஒரு மாதத்தின் இறுதிநாள் ஆகும். மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும். அவன் சந்திரனின் ஒளியை வேறுபடுகின்றவாறு ஏற்படுத்தியுள்ளான் சில சமயங்களில்; சந்திரனின் ஒளி முழுமை அடைகின்றவரை அது அதிகரிக்கின்றது. பிறகு சந்திரனின் ஒளி முற்றிலுமாக மறைகின்ற வரை அது தேய ஆரம்பிக்கின்றது. இந்த நிலையே கடந்துசென்ற மாதங்களையும் வருடங்களையும் குறிக்கின்றது என்று அல்-குர்ஆனின் 71:16 வசனத்திற்கான தஃப்ஸீர் இப்னு கதீரின் விளக்கம் தெளிவுபடுத்துவதைக் கீழே காணலாம்.

وجعل القمر فيهن نوراً وجعل الشمس سراجاً} أي فاوت بينهما في الاستنارة فجعل كلاً منهما أنموذجاً على حدة ليعرف الليل والنهار بمطلع الشمس ومغيبها, وقدر للقمر منازل وبروجاً وفاوت نوره فتارة يزداد حتى يتناهى ثم يشرع في النقص حتى يستتر ليدل على مضي الشهور والأعوام, كما قال تعالى: {هو الذي جعل الشمس ضياء والقمر نوراً وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الاَيات لقوم يعلمون}. ) تفسير ابن كثير - سورة نوح : 16- الجزء : 8 - رقم الصفحة 233(

 

மேலும் சந்திர மாதத்தின் முதல்நாளில், பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும். அந்த முதல் நாளில், சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்னரே அந்தப்பிறை நம் புறக்கண்களுக்கு காட்சி அளிக்கும் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

قال مجاهد: { وَالشَّمْسِ وَضُحَاهَا } أي: وضوئها.

 

 وقال قتادة: { وَضُحَاهَا } النهار كله.

 

قال ابن جرير: والصواب أن يقال: أقسم الله بالشمس ونهارها؛ لأن ضوء الشمس الظاهر هو النهار (1) .

 

{ وَالْقَمَرِ إِذَا تَلاهَا } قال مجاهد: تبعها. وقال العوفي،

 

عن ابن عباس: { وَالْقَمَرِ إِذَا تَلاهَا } قال: يتلو النهار.

 

وقال قتادة: { إِذَا تَلاهَا } ليلة الهلال، إذا سقطت الشمس رؤي الهلال.

 

وقال ابن زيد: هو يتلوها في النصف الأول من الشهر، ثم هي تتلوه. وهو يتقدمها في النصف الأخير من الشهر.

 

)تفسير ابن كثير - (8 / 410)(


இன்னும் மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும். இதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அதே தஃப்ஸீர் இப்னு கஃதீர் தெளிவுபடுத்தும் அல்-குர்ஆனின் 91-வது அத்தியாயம் முதல் இரண்டு வசனங்களுடைய விளக்கவுரைகளில் மேலே காணலாம். இத்தகைய தஃப்ஸிர் விளக்கங்களை நமதூர் ஆலிம்கள் மக்களுக்கு இன்னும் ஏன் எடுத்துச் சொல்லிட வில்லை?

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply