பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு,
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா? டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா? ஆகிய இரு தலைப்புகளின் கீழ் விவாதிக்கத் தயார் என நாங்கள் இணையத்தில் அறிவித்திருந்தோம்.
நாங்கள் குறிப்பிட்டிருந்த விவாதத்தின் தலைப்புகளை கண்டவுடன் மௌனம் காத்த நீங்கள், பலரும் நெருக்கடி கொடுத்தவுடன், வேறுவழியின்றி உங்களது முழு கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பிறை விவாத சவடால் எனும் தலைப்பில் முற்றிலும் முரண்பாடான ஓர் அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டு ஏர்வாடி ஜாக்கிற்கு சில கட்டளை(?)களையும் பிறப்பித்துள்ளீர்கள்.
எனவே உங்களின் அறியாமை நிறைந்த முரண்பாடுகளின் தொகுப்பான அந்த அறிவிப்பு குறித்தும், எஸ்.கமாலுத்தீன் மதனிக்கு நீங்கள் தெரிவித்த பாராட்டு செய்தியை குறித்தும் அலசுவோம்.
// ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம். தவறுகளை ஒப்புக்கொண்டவர்களை அந்த விஷயத்தில் விமர்சனம் செய்து அவர்களை மனச்சோர்வடையச் செய்யக் கூடாது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தவறு செய்தவர்கள் திருந்துவதற்கு தயங்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ரமளான் மாதம் ஆரம்பிக்கும் போதும் இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
எனவே இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் தம்பட்டம் அடிக்காமல் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள் என்பது போல் பரப்பாமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.// பி.ஜே

Please login to post a reply
You will need to be logged in to be able to post a reply. Login using the form on the right or register an account if you are new here.
Register Here »