புதன்கிழமை, 22 ஜனவரி 2014 10:19

Introduction/அறிமுகம்

Rate this item
(2 votes)

அறிமுகம்

                               அன்பான சகோதர சகோதரிகளே!

                                     அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது என இஸ்லாமியர்கள் கூறிவரும் நிலையில்நாட்காட்டி முறையில் பல்லாண்டு காலமாக குழப்பம் நிலவிவருவதை நாம் கண்கூடாக பார்த்தே வருகின்றோம்.  எனினும் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் குழப்பமேயில்லாத தெளிவான வழியை மனித சமுதாயத்திற்கு காட்டும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இஸ்லாத்தில்  நாட்காட்டி முறையைப்பற்றி  கூறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை  ஆய்வு செய்தபோது, இஸ்லாத்தில் கூறப்பட்ட நாட்காட்டி முறைமையை, இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்ததை நாம் உணர முடிந்தது. 

எனவே குர்ஆன் மற்றும் தூதரின் வழிகாட்டுதல்களை சிந்தித்து, மனித குலத்திற்காக இறைவன் அருளிய சந்திர நாட்காட்டியை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட  கமிட்டிதான் ஹிஜ்ரி கமிட்டி.

ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ, அறக்கட்டளையோ, ஆர்ஹனைசேஷனோ, டிரஸ்டோ அல்லது சொசைஸ்டியோ அல்ல. ஹிஜ்ரி கமிட்டி தேவைப்படும் போது மக்களை கூட்டி தற்காலிகமாக ஒரு பொருப்பாளரை ஏற்படுத்தி இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டிபற்றி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து சரியானதை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கும் ஒரு தற்காலிக குழு தான்.!

இந்த ஹிஜ்ரி கமிட்டி பொது மக்களிடம் வசூல் செய்து நடத்தப்படும் ஒரு அமைப்போ, கமிட்டியோ அல்லது ஜமாஅத்தோ அல்ல என்பதை நினைவில் வைக்கவும். உலகில் பொது மக்களிடம் பொருளாதாரத்தை வசூல் செய்வதையே நோக்கமாக கொண்டு நிர்வாகத்தை நடத்தி வரும் இயக்கங்களை போன்று ஹிஜ்ரி கமிட்டி ஒரு போதும் செயல்படாது இன்ஷாஅல்லாஹ்.

இஸ்லாத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்யும் போது அந்த கருத்தை ஏற்றவர்கள் அவர்களுடைய சொந்த பொருளாதாரத்தில் தான் சத்தியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற கொள்கையை கொண்ட ஒரு கமிட்டிதான் ஹிஜ்ரி கமிட்டி  என்பதையும் தங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

உலக இலாபங்களுக்காக இந்த கமிட்டி அமைக்கப்படவில்லை. இன்னும சொல்லப்போனால் இந்த கமிட்டி எவருடைய சுயலாபத்திற்காகவும் ஆரம்பிக்கபடவில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.

மனித சமுதாயம் அல்லாஹ்வுடைய சந்திர நாட்காட்டியை மட்டும் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் இந்த கமிட்டி கலைக்கப்படும் என்பதையும் உங்களுக்கு இப்போதே உறுதிமொழி தருகின்றோம்.

இந்த கமிட்டி பிற ஜமாஅத்துகளை, அமைப்புகளை மற்றும் இயக்கங்களை திட்டவோ, கேவலப்படுத்தவோ உருவாக்கப்படவில்லை.

ஆய்வுபணிகளை மிகச்சரியாக மேற்கொண்டு அவற்றை அழகிய முறையில், நளினமான வார்த்தையில் எடுத்துரைக்கும் ஒரு கமிட்டி. ஆய்வில் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை பரீசீலித்து அது சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உடனடியாக முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு கமிட்டிதான் இது.

அல்லாஹ்வின் கிருபையால்   நாம் செய்யாததை பிறருக்கு சொல்லக் கூடாது என்ற கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்   அல்லாஹ் குர்ஆனில் கூறும் சந்திர காலண்டர் அடிப்படையை மக்களுக்கு இயன்றவரை பிரச்சாரம் செய்து வருகிறது ஹிஜ்ரி கமிட்டி.

நாம்  எதை செய்கிறோமோ அதை தான் சொல்லவேண்டும் என்ற இறை தத்துவத்திற்கு ஏற்ப அல்லாஹ் திருமறையில் கூறியுள்ள கணக்கின் அடிப்படையில் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை செய்து வர மக்களுக்கு உதவி செய்து வருகிறது ஹிஜ்ரி கமிட்டி. 

சரியான நாளில் பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சக்திக்கு உட்பட்டு ஹிஜ்ரி கமிட்டி பல இடங்களில் செய்து வருகிறது.   அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் ஹிஜ்ரி கமிட்டி செயல்படுகின்றது.

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா?நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?”. (அல்-குர்ஆன் 2:44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது”. (அல்-குர்ஆன் 61:2-3)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அனஸ் (ரலி) அறிவித்தார்கள். (ஆதாரம் : புகாரி)

மேலும் பிறை நிலைபாட்டில் எவ்வகையில் எல்லாம் தமிழ் பேசும் மக்கள் ஆய்வு செய்தார்கள், மக்களிடம் அதை எவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள், என்பதை எல்லாம் இத்தளத்தின் மூலம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இணைய தளத்தை ஹிஜ்ரி கமிட்டி நடத்திவருகின்றது. ஹிஜ்ரி கமிட்டியின் கருத்துக்கு உடன்பட்டோர்கள் எதிர்ப்பாளர்கள் என அனைவரது கருத்துக்களும் இருட்டடிப்பு செய்யாமல் இத்தளத்தில் பதியப்படுவதால் உண்மை எது தவறு எது என்பதை சிந்தித்து விளங்கலாம்.

எங்கள் ஆய்வுகளை பரீசீலனை செய்து, அது இறைவனின் வார்த்தைகளான குர்ஆனுக்கு உடன்பாடாக இருந்தால், எங்கள் ஆய்வை நீங்களும் சிந்தித்து ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவும்

எதை ஆய்வு செய்து உண்மை என அறிந்து கொண்டோமோ, அதை நாங்களும் நடைமுறைப்படுத்துவதோடு, நாங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லு்ம் இஸ்லாமிய நாட்காட்டி கொள்கையில் ஹிஜ்ரி கமிட்டி கடைசி வரை உறுதியாக நிற்கும்.   எங்கள் உறுதிக்காகவும்நல்ல முறையில் சத்தியத்தை தெளிவுபடுத்தும் ஞானத்தை எங்களுக்கும் உங்களுக்கும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படி ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

குறிப்பு:- நபிகளாரின் ஹிஜ்ரத் பயணம் நடைபெற்ற ஆண்டை பூஜ்ய ஆண்டாக கணக்கிட்டு, சந்திர ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக ஹிஜ்ரி என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இப்படிக்கு

நிர்வாகம்

ஹிஜ்ரி கமிட்டி

Head Office: 7/858B, AWH Building, S.M. Street, Kozhikode, KERALA - 673001.

State Office:-160/101, North Main Road, Eruvadi - 627103, Tirunelveli District., Tamilnadu, India.

Websites:   Tamil:  www.mooncalendar.in

           English: www.hijricalendar.com

           Malayalam: www.hijracalendar.in

Email:     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mobile:    +91 9952414885, +91 9962622000, +91 9962633000, +91 9962644000.

Read 1233 times Last modified on புதன்கிழமை, 22 ஜனவரி 2014 10:45